Thursday, July 27, 2017

சோமங்கலத்தில் அமைச்சர் படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் அப்’பில் வெளியீடு 3 பேர் கைது

சோமங்கலத்தில் அமைச்சர் படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் அப்’பில் வெளியீடு 3 பேர் கைது
 
காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலத்தை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவர், நேற்று முன்தினம் சோமங்கலம் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு அங்குள்ள கடையில் டீ குடிக்க சென்றார். 
 
பூந்தமல்லி,

அப்போது அந்த டீ கடையை நடத்தி வரும் ரமேஷ் (வயது 39) என்பவர் தனது தம்பி மற்றும் நண்பருடன் சேர்ந்து தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் அப்’பில் உள்ள தனது நண்பர்களுக்கும், மற்ற குழுவுக்கும் அனுப்பினர்.

இது குறித்து சோமங்கலம் போலீசில் சிங்காரவேலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ரமேஷ், அவருடைய தம்பி செந்தில்குமார் (37), இவர்களுடைய நண்பர் குணசேகரன் (27) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், அமைச்சர் ஜெயக்குமாரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் அப்’பில் பலருக்கு அனுப்பி இருப்பதும், இவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தொழில்நுட்ப தகவல் சட்டத்தின் இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குணசேகரன், செந்தில்குமார், ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024