Thursday, July 27, 2017

முற்றிலும் சரியானது 'நீட்' : சாதித்த மாணவர்கள் சான்று

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
21:57


கோவை: 'நீட் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தான், மருத்துவ மாணவர்களை சேர்க்க வேண்டும்; விலக்கு கோரும் செயல்பாடுகளை, தமிழக அரசு நிறுத்த வேண்டும்' என, தனியார் பள்ளி மாணவர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'நீட் தேர்வில், தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, பல்வேறு கட்சிகள், கோரிக்கை விடுத்து வருகின்றன. இதைக் கண்டித்து, கோவையில், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற, தனியார் பள்ளி மாணவர்கள், 30க்கும் மேற்பட்டோர், தங்கள் பெற்றோருடன், நேற்று, பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

மாணவர் சிரில் ராஜன் கூறுகையில், ''நீட் தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்று காத்திருக்கும் நிலையில், தேர்விலிருந்து விலக்கு கோரும் செயல்பாடு ஏற்புடையதல்ல. மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்த, ஒரு சிலர் மட்டுமே விலக்கு கோருகின்றனர்.

'நீட்' தேர்வுக்கு விலக்கு பெறும் செயல்பாடுகளை, மாநில அரசு தொடர்ந்தால், நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுஉள்ளோம்,'' என்றார்.
பெற்றோர் தரப்பில், முனுசாமி என்பவர் கூறுகையில், ''பிளஸ் 1, பிளஸ் 2வில், அனைத்து பாடங்களையும் முழுமையாக படிக்கும் மாணவர்களால் மட்டுமே, 'நீட்' தேர்வை எதிர்கொள்ள முடியும்.

''இத்தேர்வு முறை முற்றிலும் சரியானது. தமிழக அரசியல்வாதிகளுக்கு, இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. 'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெறும் செயல்பாடுகளை, உடனடியாக கைவிட வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024