'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வினியோகம்
பெரம்பலூர் டாப்; சென்னை மந்தம்
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற, கிராம மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், சென்னை மக்கள் தொடர்ந்து அலட்சியமாக உள்ளனர். தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கும் திட்டத்தை, ஏப்ரல், 1ல் துவக்கியது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர் களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்கள் பெறப்பட்டன. அதில், பலரின் பெயர், பிழையாக இருந்தது; புகைப்படமும் தெளிவாக இல்லாததால், ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தர தாமதமாகிறது.
பிழைகளை சரி செய்து தரும்படி, உணவு வழங்கல் துறையினர், ரேஷன்
கார்டுதாரர்களிடம் வலியுறுத்தினர். அதற்கு, கிராம மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், சென்னை உட்பட நகரங்களில் வசிப்போர், அலட்சியமாக உள்ளனர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில், விற்பனை விபரம் பதிவு செய்ய, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற, கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை, 1.92 ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 1.36 கோடி பேருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள, 30 லட்சம் கார்டுகளில், குடும்ப தலைவர்களின் புகைப்படம் இல்லை. மற்றவற்றில், திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளதால், அந்த கார்டுகள் அச்சிடப்படாமல்
நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.புகைப்படம் தர வேண்டியவர்கள், திருத்தங்கள் செய்ய வேண்டிய நபர்களின் விபரம், ரேஷன் கடைகள் முன் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் விபரத்தை சரி செய்யாமல் உள்ளனர். இதனால், அனைவருக்கும், 'ஸ்மார்ட்' கார்டு தர தாமதமாகிறது.
பெரம்பலுாரில், மொத்தம், 1.66 லட்சம் கார்டுகள் உள்ளன. அதில், 31 ஆயிரம் கார்டுகள் மட்டுமே அச்சிட வேண்டி உள்ளது. இதுதான், தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில், கார்டுகள் அச்சிட வேண்டியுள்ள மாவட்டம்.
சென்னை, காஞ்சி, மதுரை, கோவை, கடலுார் தவிர்த்து, மற்ற மாவட்டங்களிலும், ஒரு லட்சத்துக்கும் குறைவான கார்டுகளே அச்சிட வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment