'சிறை தண்டனையை ரத்து செய்யுங்க!'
ஜனாதிபதியிடம் கர்ணன் கோரிக்கை
கோல்கட்டா: கோல்கட்டா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட, ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்யும்படி, ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள, ராம்நாத் கோவிந்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட அவருக்கு, சுப்ரீம் கோர்ட்டின்,ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.
சிறை
தலைமறைவாக இருந்த கர்ணன், ஜூன், 20ல், கோவையில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், கோல்கட்டாவில் உள்ள, அமைதிக்கான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.
புதிய ஜனாதிபதியிடம் மனு
இந்நிலையில், கர்ணனுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தில், கர்ணன் தரப்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா, நிருபர்களிடம் கூறியதாவது:
நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, ஜனாதிபதியிடம் நேரில் பேச, அனுமதி கேட்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment