Tuesday, July 25, 2017

ரசாயனம் கலக்காத இயற்கை பேரிச்சம் பழம் விற்பனை ஜோர்

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
00:10

திருத்தணி:ரசாயனம் கலக்காத இயற்கை பேரிச்சம் பழம், திருத்தணி நகரத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம், 150 கிலோவும், ஒரு கிலோ, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இரும்பு சத்து, நரம்பு தளர்ச்சி மற்றும் ரத்த ஓட்டம் சீர்படுத்தல் உள்பட பல்வேறு நோய்களை பேரிச்சம்பழம் குணப்படுத்துகிறது.
இயற்கை பேரிச்சம்பழம், தற்போது திருத்தணி நகரம் மற்றும் முருகன் மலைக்கோவிலில் அதிகளவில் விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இயற்கை பேரிச்சம்பழம் ரசாயனம் கலக்காததால், விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.இது குறித்து, திருத்தணி நகர பழ வியாபாரி ஆர். வெங்கடேசன் கூறியதாவது:திருத்தணி நகரில், 30க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் இயற்கை பேரிச்சம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக இப்பழம் திருத்தணியில் விற்கப்படுகிறது. போதிய அளவில் நகரவாசிகள் இடையே இயற்கை பேரிச்சம்பழம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது, ஆறு மாதமாக இந்த பேரிச்சம்பழத்தை அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 150 கிலோ விற்பனை ஆகிறது. எனது கடையில், மட்டும் ஒரு நாளைக்கு, 15 - 20 கிலோ விற்பனையாகிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து, ஒரு கிலோ, 160 ரூபாய்க்கு வாங்கி வந்து, 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.முக்கிய விழாக்களின் போது, ஒரு கிலோ, 220 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். ரசாயனம் இல்லாமல், இயற்கையாக மரத்தில் கொண்டு வந்து விற்கப்படுவதால், மக்களிடையே அதிகளவில் இந்த பேரிச்சம்பழம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...