Tuesday, July 25, 2017

கட்டுக்கு அடங்காத டெங்கு: ஒரே நாளில் 18 பேர் அனுமதி

பதிவு செய்த நாள் 24 ஜூலை
2017
22:16

கோவை: கோவை மாவட்டத்தில், டெங்கு பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில், டெங்கு பாதிப்பு, 2016 டிச., முதல், மார்ச் வரை இருந்தது. இடையில் கடும் வெயில் இருந்ததால், டெங்கு பாதிப்பு குறைந்தது. சில வாரங்களாக, கோவையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், இதுவரை, 1,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். மாவட்டத்தில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில், நேற்று ஒரே நாளில், கோவையைச் சேர்ந்த, 16 பேர், திருப்பூரைச் சேர்ந்த இருவர் என, 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. இவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவாக, ஒரே நாளில், காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 129 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு, டெங்கு இருக்க வாய்ப்புள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என, தெரிகிறது. 'தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கட்டுக்கு அடங்காத டெங்கு: ஒரே நாளில் 18 பேர் அனுமதி

No comments:

Post a Comment

NEWS TODAY 24.01.2026