Wednesday, July 26, 2017

கரூர் மருத்துவக் கல்லூரி பணி : உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
23:39

மதுரை: கரூர் மருத்துவக் கல்லுாரி, கட்டுமானப் பணியை துவக்க உத்தரவிட தாக்கலான வழக்கு விசாரணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.கரூர் வடக்கு காந்திகிராமம் பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு:மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 'கரூரில் அரசு மருத்துவக் கல்லுாரி துவக்கப்படும்' என 2014 ஆக.,12 ல் அறிவித்தார். இதற்காக, கரூர்
குப்பிச்சிபாளையத்தில் சிலர், மருத்துவக் கல்லுாரி அமைக்க தானமாக 30 ஏக்கர் 50 சென்ட் நிலம் வழங்கினர்.இந்நிலையில், '2016--17 கல்வியாண்டு முதல் 150 மாணவர்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி துவங்கும்' என 2015 ஜன.,19ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது; அதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். மருத்துவக் கல்லுாரி அமைக்க 229.46 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.குப்பிச்சிபாளையத்தில் ரோடு வசதி இல்லை. அது, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து 8 கி.மீ.,ல் உள்ளது. அங்கு கல்லுாரி அமைத்தால் பயன் இருக்காது என தெரிந்தது.இதற்கிடையே தனி அதிகாரி, 'மாற்று இடம் வழங்க வேண்டும்'
என கரூர் நகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதினார். சாணப்பிரட்டியில் கல்லுாரி அமைக்க, 25 ஏக்கர் நிலம் ஒதுக்க, கரூர் நகராட்சி கூட்டத்தில் 2016 பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடம் தானம் கொடுத்த சிலர், 'குப்பிச்சிபாளையத்தில் நாங்கள் வழங்கிய இடத்தில் கல்லுாரி அமைக்க உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

அவ்வழக்கில் இடைக்கால உத்தரவின்படி, சாணப்பிரட்டியில்கல்லுாரி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. குப்பிச்சிப்பாளையத்தில், கல்லுாரி அமைப்பது சாத்தியமில்லை என்பதால், சாணப்பிரட்டி யில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இரு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குப்பிச்சிபாளையத்தில், நிலத்தை தானமாக வழங்கியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாணப்பிரட்டியில் மருத்துவக் கல்லுாரி கட்டுமானப் பணியை துவக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு பிரபு மனு செய்திருந்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு விசாரித்தது.'இதுபோல் நிலுவை யில் உள்ள வழக்குடன், இம்மனுவும் ஜூலை 27ல் விசாரிக்கப்படும்' என உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024