Wednesday, November 1, 2017

தலையங்கம்
எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சு?




நவம்பர் 01 2017, 03:00 AM

பொதுவாக மத்திய–மாநில அரசாங்கங்கள் வளர்ச்சித்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், கல்வித் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகின்றன. இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கென நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், நிர்வாக காரணங்களினால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும், அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டும், பல திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாமலும், தொடக்கத்தையே காணாமலும் அப்படியே தேங்கிக்கிடக்கின்றன. பொதுவாக நிதி ஒதுக்கும்போது, அன்றைய மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இப்படி காலதாமதமாவதால் பொதுவான விலையேற்றத்தின் காரணமாக இந்த திட்டமதிப்பீடும் உயர்ந்துவிடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க, மத்திய அரசாங்கம் இப்போது புதிதாக செயல்படு!, நிதி பெறு! என்றவகையில், ‘‘சவால் திட்டம்’’ ஒன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், எந்தவொரு திட்டத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கி நிறைவேற்றும் மாநிலங்களுக்கு பரிசாக கூடுதல் நிதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரெயில்வே, சாலை வசதி, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை முதல்கட்டமாக இந்தத்திட்டத்தின்கீழ் எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது 20 முதல் 30 சதவீதம்வரை தனியாக வைக்கப்படுகிறது. நிலம் ஒப்படைத்தல் உள்பட பல்வேறு அனுமதிகளை வழங்கி திட்டங்களை குறித்தநேரத்தில் நிறைவேற்றும் மாநிலத்திற்கு, கூடுதலாக அந்தத்தொகையை ஒதுக்கிட இந்த புதிய திட்டம் வகை செய்கிறது. ‘‘சவால் திட்டம்’’ என்று அழைக்கப்படும் இந்தத்திட்டம் மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசாங்கத்தின் பல உள்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத்திட்டம் வரவேற்கத்தகுந்த ஒரு திட்டமாகும். மாநிலஅரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இந்த ‘‘சவால் திட்டம்’’ கொண்டு வருவது சரிதான். ஆனால், மத்திய அரசாங்கம் அறிவித்த பல திட்டங்கள் தொடங்கப்படாமல் தாமதமாகிக் கொண்டிருப்பதற்கு மத்திய அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?. குறிப்பாக தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்த திட்டம் 2 ஆண்டுகளாக எங்கு தொடங்கப்படும்? என்று இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் இருக்கிறது.

2014–15–ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டத்திற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பவேண்டும். அந்த 5 இடங்களில் ஒரு இடத்தை மத்திய அரசாங்கம் தேர்வுசெய்து, அதற்கான பணிகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு ஆயிரம் கோடி ரூபாய் திட்டம். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வத்தோடு இருந்தார். உடனடியாக அனைத்து வசதிகள் குறிப்பாக சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதிகொண்ட 5 இடங்கள் செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிப்பட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 200 ஏக்கர் நிலத்தையும் அடையாளம் கண்டு மத்திய அரசாங்கத்திற்கு தமிழக சுகாதாரத்துறை அனுப்பி வைத்தது. இந்த இடத்தை தேர்வுசெய்ய மத்திய அரசாங்கத்தின் குழுவும் வந்து 5 இடங்களையும் பார்த்துவிட்டு சென்றுவிட்டது. மேலும் அனைத்து அலுவலக நடைமுறைகளும் நடந்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இது மதுரையில் அமைய வாய்ப்பு இருப்பதாக இல.கணேசன் எம்.பி. கூறுகிறார். மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு ‘‘சவால் திட்டம்’’ கொண்டுவரும் நிலையில், அவர்கள் நிறைவேற்றவேண்டிய இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பை உடனடியாக அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டும். பணிகளை தொடங்கவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

Madras HC allows filing of IT returns without Aadhaar

Sureshkumar| TNN | Oct 31, 2017, 23:12 IST


The petitioner also pointed out similar petitions had been allowed by Kerala high court permitting such petiti... Read More

CHENNAI: As the law mandating linking income taxreturns with Aadhaar is still to be put to litmus test by the Supreme Court, Madras high court on Tuesday allowed a petitioner to file her income tax returns without quoting Aadhaar number or Aadhaar enrolment number.

Justice T S Sivagnanam, posting the case to December 18, passed the interim order on a plea moved by Preethi Mohan. She had moved the plea relying upon the apex court decision in Binoy Viswam Vs Union of India case, in which the court had imposed a partial stay on operation of section 139AA of the Income Tax Act, which mandates linkage of Aadhaar with IT returns.

In his interim ruling, Justice Sivagnanam said: "I am inclined to grant a similar relief, since today being the last day for filing income tax returns. If the returns are filed belatedly and if ultimately, the matter decided by the Constitution Bench of Supreme Court against the petitioner, then she may be liable to pay interest for belated payment of tax.

"Accordingly, there will be an interim direction to the income tax department to permit the petitioner to file her returns for the assessment year 2017-18 either manually or through appropriate e-filing facility without insisting for Aadhaar number," he said.

It was submitted on behalf of the petitioner that the directions issued by the Supreme Court in the case made it clear that Aadhaar scheme was always meant to be voluntary. "But despite a partial stay imposed by the apex court, the income tax department was acting in a manner directly opposed to the court order and are demanding linkage of Aadhaar," counsel said.

The petitioner also pointed out similar petitions had been allowed by Kerala high court permitting such petitioners to file returns manually without quoting Aadhaar number or enrolment number.

Tuesday, October 31, 2017

Morning update of Chennai rains in and around Chennai.

கொல்கத்தாவில் நோயாளியின் வயிற்றில் இருந்து 639 ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டன


கொல்கத்தாவில் நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ கிராமுக்கும் கூடுதலான எடை கொண்ட 639 ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன.

அக்டோபர் 31, 2017, 12:56 PM

கொல்கத்தா,கொல்கத்தாவின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் கோபர்டங்கா பகுதியை சேர்ந்த ஒருவர் ஸ்கைசோபிரீனியா என்ற வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் ஆணிகள் மற்றும் மண் ஆகியவற்றை பல நாட்களாக உண்டு வந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வயிற்றில் ஆணிகள் இருந்த தகவல் எக்ஸ்-ரே பரிசோதனையில் தெரிய வந்தது.

உடனடியாக கல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடந்த எண்டோஸ்கோபி சிகிச்சையில் அவரது வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். அவர்கள், வயிற்றில் 10 செ.மீட்டர் அளவில் அறுவை சிகிச்சை செய்து உள்ளேயிருந்த ஆணிகளை காந்தம் ஒன்றின் உதவியுடன் வெளியே எடுத்துள்ளனர். மண்ணையும் பிரித்து எடுத்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை 1 மணி மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது. நோயாளி தற்பொழுது நலமுடன் உள்ளார். அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது -சென்னை வானிலை மையம்



21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

அக்டோபர் 31, 2017, 12:53 PM
சென்னை

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது . தென்கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மேற்கில் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 18 செ.மீ மழை பெய்துள்ளது. விமான நிலையத்தில் 17 செ. மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ மழை, கேளம்பாக்கத்தில் 11 செ. மீ மழை பெய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழக பகுதியில் 15 செ. மீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

பிஏ வேலையே வேணாம்னு சொன்னேன்!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

Published : 30 Oct 2017 10:05 IST
சமஸ்


கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். "தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்" என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசுபவர் இல்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலில் இடம்பெற்றுள்ள அவருடைய நீண்ட பேட்டியை நான்கு நாட்களுக்குத் தொடராக நடுப் பக்கத்தில் கொண்டுவருகிறோம்.

திருக்கண்ணமங்கையிலிருந்து நாம் தொடங்கலாம்...

திருவாரூர் பக்கமுள்ள சின்ன ஊரு. நிறையப் பேரு ‘பக்தவச்சலம்’னு பேரு வைக்கிறாங்களே, அது எங்க ஊரு சாமிதான். 1942-ல பொறந்தேன். அப்பா நாகஸ்வர வித்வான். வாழ்ந்து கெட்ட குடும்பம். கூடப் பொறந்தது மூணு தம்பிங்க. மூணு தங்கச்சிங்க. நான்தான் மூத்த பிள்ளை. கஷ்ட ஜீவனம். காவிரியோட கிளை ஆறான ஓடம்போக்கியைத் தாண்டித்தான் போய்ப் படிக்கணும். உள்ளூர்ல, அப்புறம் அம்மையப்பன்ல, அப்புறம் திருவாரூர் வி.எஸ்.டி. ஸ்கூல்ல படிச்சேன். ரொம்ப சிரமப்பட்டுதான் படிக்க வெச்சாங்க. இன்னும் நெனைப்பிருக்கு. ஃபீஸ் கட்ட கடைசி நாள். காலையில ‘இரு வந்திடுறேன்’னு சொல்லிட்டுப் போனார் அப்பா. ஊருணிக்கரையில போய் சாயங்காலம் வரைக்கும் உட்கார்ந்திருக்கேன். அப்பா வரலை. ராத்திரி எதையோ அடகு வெச்சுப் பணம் வாங்கிட்டு வந்தார். மறுநாள் ஸ்கூல் போனா, எங்க ஆசிரியரே பணம் கட்டிட்டார். வாழ்க்கை இப்படிப் பலரோட உதவியோடும் சேர்த்துதான் நம்மளை ஒரு இடத்துல கொண்டுவந்து உட்கார வைக்குது.
படிப்பு முடிச்சதும் திருவாரூர் கூட்டுறவு வங்கியில வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் 50 ரூபாய் சம்பளம். எழுத்தர் வேலை. ஆனா, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வேன்கிறதால எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். கூடவே நான் டைப்ரைட்டிங் கத்துக்கிட்ட இன்ஸ்டிடியூட்லேயே பகுதிநேர வேலைக்கும் போனேன். வேலையிருந்தால் மூணு ரூபாய் கூலி. ஆனா, எல்லா நாளும் வேலை இருக்காது. காத்துக் கிடக்கணும். அந்தச் சமயத்துலேயே சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதித் தேர்வானேன். வங்கியில யாருக்கும் அனுப்ப மனசில்லை. அப்புறம் அவங்களே, ‘சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல வேலை கிடைச்சி ருக்கு. பெரிசா வருவே’ன்னாங்க. சென்னைக்கு வந்தேன். சென்னைக்குப் போறேன்னு தெரிஞ்சதும் என்னோட இன்ஸ்டிடியூட் வாத்தியார் எனக்கு பேன்ட் சட்டை எடுத்துத் தந்தார். சென்னை வந்து முதல் ஒரு மாசம் அந்த பேன்ட் சட்டையைத்தான் தினம் துவைச்சிப் போட்டுக்கிட்டு வேலைக்குப் போனேன். வேற நல்ல உடுப்பு என்கிட்ட கிடையாது. ராயப்பேட்டைல சொர்ணண் ணன் வீட்டுல தங்கியிருந்தேன். ஆபீஸ்க்கு தினம் நடந்துதான் போவேன். மாசம் 135 ரூபாய் சம்பளம். அதுல 75 ரூபாயை வீட்டுக்கு அனுப்பிடுவேன். மீதி 60 ரூபாய் என் செலவுக்கு. அது போதாது. வேலையோடேயே தொலைநிலைப் படிப்புல வேற சேர்ந்துட்டேன்.
சரி, இங்கே பகுதிநேர வேலை என்ன கிடைக்கும்னு பார்த்தேன். என்விஎஸ் பட்டணம் பொடி நிறுவனத்துல வேலை கிடைச்சுது. காலையில் 5 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஓடுவேன். 8 மணி வரைக்கும் வேலை. மாசம் 50 ரூபாய் கிடைக்கும். அவர் டிக்டேட் பண்ணுவார். அதை டைப் அடிச்சுக் கொடுக்கணும். கமிஷனர் ஆபீஸ்லேயும் வேலைக்குக் குறைவிருக்காது. பல நாட்கள் அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டியிருக்கும். 1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடந்தப்போ வேலைப் பளு தாங்காம ஓடிப்போன ஆட்களெல்லாம் உண்டு. தினம் ஆயிரக்கணக்கான கைதுகள் நடக்கும். எல்லாரோட விவரமும் அடிச்சு சேகரிக்கணும். முதல் நாள் காலையில ஆரம்பிச்சு மறுநாள் மதியம் வரைக்கும் ஒண்ணுக்குப் போகக்கூட எழுந்திரிக்காம வேலை பார்த்த நாளெல்லாம் உண்டு. பத்து, பதினஞ்சாயிரம் பேரைப் பட்டியல்ல அடிக்கணும்னா..! அப்படி வேலை பார்த்ததுக்காக ரிவார்டெல்லாம் வாங்கியிருக்கேன். அப்புறம் தமிழ் ஷார்ட் ஹேண்ட் பாஸ் பண்ணினேன். அதுதான் இன்னிக்கு இந்த இடத்துல உட்கார வெச்சிருக்கு.

கருணாநிதிக்கு எப்படி அறிமுகமானீர்கள்?

அவர் கூட்டத்தை போலீஸ் ரிப்போர்ட் பண்ணுறதுக்காக என்னை அனுப்பியிருந்தாங்க. அப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில இருக்கார். பேச்சை நான் எடுத்திருந்த குறிப்பின் அடிப்படையில அவர் மேல கேஸ் விழுந்துச்சு. அப்போ அவர் பேச்சை நான் எடுத்த குறிப்போட ஒரு பிரதியை அவருக்கும் அனுப்பியிருக்காங்க. படிச்சுப்பார்த்தவர், "என் பேச்சை ஒரு மனுஷன் அப்படியே எழுதியிருக்காரே!"னு ஆச்சரியமாயிருக்கார். அப்போ அவர்கிட்ட தமிழ் ஷார்ட் ஹேண்ட் எழுத ஆள் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடனே நான் யார்னு கண்டுபிடிச்சுட்டார். "உன்னைப் பொதுப்பணித் துறை அமைச்சர் பார்க்கணும்னு சொன்னாருப்பா"னு சேதி வந்துச்சு. நான் பயந்துட்டேன். கோபாலபுரம் வீட்டில் வந்து பார்த்தேன். "எனக்கு பிஏ வேணும். வந்திடுறியாய்யா?"ன்னார். நான் மறுத்துட்டேன். ஏன்னா, அப்போ என் சம்பளம் போலீஸ்ல 240 ரூபாய் ஆயிருந்துச்சு. அவருக்குக் கீழ வந்தா அது 140 ரூபாய் ஆயிடும். "கஷ்டப்படுற குடும்பம் ஐயா’’ன்னேன். "சரி, போ’’ன்னுட்டார்.

அப்புறம் எப்படிச் சேர்ந்தீர்கள்?

எங்க அப்பா கோதண்டபாணி திககாரர். அவருக்குத் தலைவரைத் தெரியும். ஒருமுறை திருவாரூர் பக்கம் போனப்போ எங்கப்பாவைப் பார்த்திருக்கார். "உங்க பையனை பிஏவா வெச்சிக்கலாம்னு கூப்பிட்டா, ‘வர மாட்டேன்’னு போயிட்டான்!" என்று அவரிடம் சொல்லியிருக்கிறார் தலைவர். எங்கப்பா உடனே எனக்குக் கடிதம் போட்டார். "பணம் பெருசில்லடா தம்பி, அவரு பெரிய மனுஷன். அவருக்கு உதவியா இருக்குறது பெரிய காரியம்"னு எழுதியிருந்தார். அப்பாவுக்குப் பயந்துகிட்டு திரும்ப வும் கோபாலபுரம் வந்தேன். "என்னய்யா, அன்னிக்கு வரலைன்னு போன?"ன்னாரு தலைவர். "எங்க அப்பா கடிதம் எழுதியிருக்காருய்யா"ன்னேன். "சரி, ஏற்பாடு பண்றேன்"னார். ஆனா, அதுக்குள்ளேயே அவர் வேறு ரெண்டு பேரை வேலைக்கு எடுத்துட்டார். அதனால, "முதல்ல சட்ட மன்றத்துக்கு மாறிக்கோ. சமயம் பார்த்து எடுத்துக்குறேன்"னார். ஒரு வருஷம் அப்படிப் போச்சு. அண்ணா மறைஞ்ச சமயம் என் தங்கச்சி கல்யாணத்துக்காக லீவுல ஊருல இருக்கேன். ‘லீவ் கேன்சல். ஜாயின் சீஃப் மினிஸ்டர் ஆபீஸ் அஸ் பிஏ’னு தந்தி வந்துச்சு. உடனே, சென்னைக்கு ஓடி வந்துட்டேன். 16.2.1969 அன்னிக்குத் தலைவர்கிட்ட சேர்ந்தேன். 50 வருஷம் நெருங்குது!

இடையிடையே ஆட்சி மாறினபோதும் எப்படி நீங்கள் அவரிடமே தொடர்ந்தீர்கள்?

வேலைக்குச் சேர்ந்தப்போவே மூணு பிஏக்கள்ல நான்தான் ஜூனியர். குட்டி பிஏன்னு பேர் ஆயிடுச்சு. அம்மா (தயாளு), சின்னம்மா (ராசாத்தி) ரெண்டு பேருமே பிரியமா இருப்பாங்க. 1976-ல் ஆட்சி போச்சு. எல்லாரும் அவர்கிட்டேயிருந்து விலகிட்டாங்க. நான் மட்டும் தினம் வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தேன். தலைவர் கூப்பிட்டு, "நீ அரசாங்க வேலையை ரிஸைன் பண்ணிடு"ன்னார். "சரிங்கய்யா"ன்னு நானும் சொல்லிட்டேன். "பாவம் சின்ன வயசு. இவரு வயசுக்கு செகரட்ரி வரைக்கும் ஆகலாம் மாமா; வேலையை விடச் சொல்ல வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு பிஏ வெச்சிக்கலாம் மாமா. அந்த இடத்துக் குச் சண்முகநாதனைக் கேட்டு வாங்கிடுவோம்"னு மாறன் சொன்னாரு. அவருக்கு என் மேல ரொம்பப் பிரியம் உண்டு. கோபம் வரும். திட்டுவாரு. ஆனா, ரொம்பப் பிரியமா இருப்பார். எல்லாருமே வீட்டுல ஒருத்தனாத்தான் பார்ப்பாங்க. ஆனா, முதல்வரா இருந்த எம்ஜிஆர் வேற கோபத்துல ‘முடியாது’ன்னு கோளாறு கொடுத்தார். தலைவருக்குக் கோபம் வந்திருச்சி. அப்படின்னா, "எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியே வேண்டாம்"னு சொல்லிட்டார். நாஞ்சிலாருக்கு விஷயம் தெரிஞ்சு எம்ஜிஆர்கிட்ட பேசினார். "இதையெல்லாம் மறுத்தால் பெரிய கெட்ட பெயர் வந்துவிடும்"னு அவர் சொல்லவும் எம்ஜிஆர் ஏத்துக்கிட்டார்.

எம்ஜிஆருக்கு உங்கள் மேல் என்ன கோபம்? எம்ஜிஆர் - கருணாநிதி பிளவின்போதெல்லாம் நீங்கள் பக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்களேன்...

(நாளை பேசுகிறார் சண்முகநாதன்...)

நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா?- சத்ருகன் சின்ஹா
Published : 30 Oct 2017 20:08 IST


விஜய், சத்ருகன் சின்ஹா | கோப்புப் படம்.
'மெர்சல்' படத்தில் நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா என பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்தனர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியது.
அதற்குப் பிறகு 'மெர்சல்' படக்குழுவினர் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசினர். பின்னர், மெர்சல் படவிவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டதாக தமிழிசை கூறினார்.
இந்நிலையில் நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா என்று பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சத்ருகன் சின்ஹா ஒரு பேட்டியில் கூறுகையில், ''சக்திவாய்ந்த தமிழ் நடிகர் விஜய், அவர் நாட்டு ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி தேவை என்று நமக்கெல்லாம் நினைவுபடுத்துகிறார், இது என்ன பெரிய குற்றமா?'' என்று கேட்டிருக்கிறார்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானியே பொருத்தமானவர் என்றும், மோடியை விமர்சித்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு தன் ஆதரவை வெளிப்படையாதத் தெரிவித்தவர் சத்ருகன் சின்ஹா என்பது நினைவுகூரத்தக்கது.

NEWS TODAY 06.12.2025