Tuesday, October 31, 2017


நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா?- சத்ருகன் சின்ஹா
Published : 30 Oct 2017 20:08 IST


விஜய், சத்ருகன் சின்ஹா | கோப்புப் படம்.
'மெர்சல்' படத்தில் நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா என பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்தனர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியது.
அதற்குப் பிறகு 'மெர்சல்' படக்குழுவினர் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசினர். பின்னர், மெர்சல் படவிவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டதாக தமிழிசை கூறினார்.
இந்நிலையில் நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா என்று பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சத்ருகன் சின்ஹா ஒரு பேட்டியில் கூறுகையில், ''சக்திவாய்ந்த தமிழ் நடிகர் விஜய், அவர் நாட்டு ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி தேவை என்று நமக்கெல்லாம் நினைவுபடுத்துகிறார், இது என்ன பெரிய குற்றமா?'' என்று கேட்டிருக்கிறார்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானியே பொருத்தமானவர் என்றும், மோடியை விமர்சித்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு தன் ஆதரவை வெளிப்படையாதத் தெரிவித்தவர் சத்ருகன் சின்ஹா என்பது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024