Tuesday, October 31, 2017


பொதுப்பணி துறையில் 250 பேருக்கு கட்டாய ஓய்வு


லக்னோ: உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றதும், அரசு துறைகளில் உள்ள குறைகள் களையப்படும் என, உறுதி அளித்தது. 
அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலை தடுத்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் யோகி உத்தரவிட்டார்.

இந்நிலையில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யாவின் பொறுப்பில் உள்ள, பொதுப் பணித் துறை, ஊழலில் முதலிடத்தை பெற்றது. இதையடுத்து, அந்த துறையில் உள்ள, நிர்வாக பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், கீழ்நிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட, 550க்கும் மேற்பட்டவர்கள் மீது விசாரணை நடந்தது.

அதில், 250க்கும் மேற்பட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இது, ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், மற்ற துறைகளில் உள்ள, ஊழல் அதிகாரிகள், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024