Monday, October 30, 2017


லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பொதுத்தேர்வுக்கு முன், இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும். ஆனால், 2016ல், டெண்டர் விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

அறிவிப்பு : இந்நிலையில், 2016ல், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, ஆறு மாதங்கள் தாமதமாக, தற்போது, லேப் - டாப் வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டு களைப் போல, லேப் - டாப்கள் திருட்டு போகாமல் தடுக்கவும், முறைகேடுகளை தவிர்க்கவும், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, லேப் - டாப் பெறும் மாணவர்களின், அசல் சான்றிதழில், லேப் - டாப் வழங்கப்பட்டது என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டு, அதன் நகலை, ஆவணமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், பல மாணவர்கள், கல்லுாரிகளில் படிப்பதால், அசல் சான்றிதழ் கல்லுாரியில் இருப்பதாக கூறி, லேப் - டாப் கேட்கின்றனர். சான்றிதழ் இன்றி, லேப்டாப் வழங்கினால், தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என, உயர் அதிகாரிகள் எச்சரித்துள்னர்.
இந்நிலையில், சான்றிதழுடன் வராத மாணவர்களுக்கு, துண்டுச்சீட்டில் எழுதி கொடுத்து, லேப் - டாப் வழங்கும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், நிலைமையை சமாளிக்க முடியாமல், தலைமை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 2வை, 2016ல், முடித்த மாணவர்கள், இலவச லேப் - டாப் பெற வசதியாக, தற்காலிகமாக, அசல் சான்றிதழை வழங்கக்கோரி, கல்லுாரி, பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பலாம். 

பிரச்னை : கல்வி நிறுவன முதல்வரிடம், மாணவர்கள், 'போனபைட்' சான்றிதழ் பெற்று வந்தால், லேப் - டாப் வழங்க, வழிவகை செய்யலாம். மாறாக, எந்த சான்றும் இல்லாமல், லேப் - டாப் வழங்கினால், தலைமை ஆசிரியர்கள், எதிர்காலத்தில் கணக்கு தாக்கல் செய்வதில் பிரச்னை ஏற்படும். எனவே, இந்தப் பிரச்னை தொடர்பாக, உயர் கல்வித் துறையுடன், பள்ளிக் கல்வித்துறை பேசி, உரிய முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...