வழக்கு விபரங்களை அறிய புதிய, 'மொபைல் ஆப்'
பதிவு செய்த நாள்
30அக்2017
00:30
சென்னை: ''நீதிமன்றங்களில் உள்ள வழக்கு விபரங்களை தெரிந்து கொள்ள, 'மொபைல் ஆப்' விரைவில் செயல்பாட்டிற்கு வரும்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் லோகூர் தெரிவித்தார்.
வழக்குகள் தொடர்பான ஆவணங்களை, 'டிஜிட்டல்' மயமாக்கும் மையத்தை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
டிஜிட்டல் மயம் : அப்போது, அவர் பேசியதாவது: ஆவணங்களை பாதுகாத்து வைப்பது, மிகவும் அவசியம். அவற்றை டிஜிட்டல் மயமாக்குவதால், இடப்பிரச்னை தீரும். ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து பாதுகாப்பதால், அவற்றை எளிதில் அணுகலாம். நீதிமன்றங்களில் உள்ள வழக்கு விபரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக, புதிய, 'மொபைல் ஆப்' செயல்பாட்டுக்கு வர உள்ளது. எந்த நீதிமன்றத்தில், எந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை, வழக்கு தகவல் முறைப்படி தெரிந்து கொள்ளலாம்.தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பில், நான்கு உயர் நீதிமன்றங்கள், ஏற்கனவே இணைக்கப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக, மேலும், 10 உயர் நீதிமன்றங்கள் இணைக்கப்படும். நீதித்துறை மின்னணு மயமாக்கப்படுவதால், பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.வழக்குகளை, சமரச மையத்துக்கு அனுப்புவது குறித்த பயிற்சி வகுப்பையும், நீதிபதி மதன் லோகூர் துவக்கி வைத்து பேசியதாவது:
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, சமரசமாக பேசி தீர்வு காண முடியும். ௬௦ நாட்களுக்குள், சமரச தீர்வு எட்டப்பட வேண்டும். டில்லியில், ஏராளமான வழக்குகள், 30௦ நாட்களில் முடிவுக்கு வருகிறது. உயர் நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு, அனைவராலும் செல்ல முடியாது.
சமரசம் : அருகில் உள்ள நீதிமன்றங்களிலேயே, அவர்களின் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பேசி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளை, சமரசமாக முடிக்க ஏதுவாக, அதற்கான மையத்தை அணுகும்படி, வழக்கறிஞர்களை, மாவட்ட நீதிபதிகள் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி பேசினார். இந்நிகழ்ச்சிகளில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment