Monday, October 30, 2017

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் கட்டணம் உயர்வு


By சென்னை,  |   Published on : 30th October 2017 02:12 AM  | 
சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் பார்வையாளர் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வரை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்காக கட்டணம் பெறப்பட்டது. இந்த நிலையில், புதிய முனையங்கள் தொடங்கப்பட்டதும் உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு பன்னாட்டு முனையத்தில் மட்டுமே பார்வையாளர் அனுமதி வழங்கப்பட்டது. பன்னாட்டு முனையத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கான கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணம் சனிக்கிழமை (அக்.28) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024