Monday, October 30, 2017


ஆம்புலன்சில் லட்டு தட்டுகள் : திருமலையில் பக்தர்கள் அதிர்ச்சி


திருப்பதி: திருமலையில், ஆம்புலன்சில் லட்டு தட்டுகள் எடுத்து வரப்பட்டதை பார்த்த பக்தர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பதி, திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையான் தரிசனத்திற்கு அடுத்தபடி லட்டு பிரசாதத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அதனால், நீண்ட நாட்கள் கெடாத லட்டு பிரசாதத்தை தயார் செய்ய, தேவஸ்தானம் பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.
பூந்தி தயாரிக்க தனி மடப்பள்ளி, லட்டு பிடிக்க தனி மடப்பள்ளி, தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதங்களை எடுத்துச் செல்ல, மூடப்பட்ட தனி வாகனம், லட்டு தட்டுகளை சுத்தம் செய்ய, வெந்நீர் கெய்சர்கள் என, அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்நிலையில், நேற்று காலை, மடப்பள்ளி அருகே, நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சில், லட்டு தட்டுகள் வந்திறங்கின. இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர்கள் பதிலளிக்காமல் சென்றதால், சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். 
அதற்கு அவர், 'சுத்தம் செய்யப்பட வேண்டிய தட்டுகள் தான், ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டன' என, அலட்சியமாக பதிலளித்தார்.
இதை கேட்டு கோபமடைந்த பக்தர்கள், தேவஸ்தான உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். 
இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:
திருமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், பக்தியுடன் வாங்கி செல்லும் லட்டு பிரசாதத்தை, ஊழியர்கள் அலட்சியமாக கையாண்டு வருகின்றனர். 
நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சில், லட்டு பிரசாதத்தை வைக்கும் தட்டுகளை எடுத்துச் சென்றால், நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை அறியாமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் தேவஸ்தான அதிகாரிகளின் செயல் வேதனை தருகிறது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...