Sunday, October 29, 2017


மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு


மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு
மதுரை, மதுரையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமூகத்திற்கு தொண்டாற்றிய அன்னைதெரசா உள்ளிட்டோரின் மொழி, கல்வி, மருத்துவம், அரசியல் பணிகளை போற்றும் விதமாக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில், அனைத்துமருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடந்தது.வெற்றி பெற்ற 
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் 
நடந்தது.
அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத் தலைவர் நாச்சியார் தலைமை வகித்தார். முதலிடம் பெற்ற பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மாணவிஐஸ்வர்யாவிற்கு ஒரு லட்சம் ரூபாய்,இரண்டாமிடம் பெற்றவேலம்மாள் மருத்துவக் கல்லுாரி மாணவி ஹரிதாவிற்கு 75 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவி மதிகாவிற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும்தடகள போட்டியில் வென்ற வேலம்மாள் மருத்துவக் 
கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகள் 
வழங்கப்பட்டன.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன்பங்கேற்றனர். கல்லுாரி டீன் ராஜாமுத்தையா நன்றி கூறினார். கல்விக்குழும துணைத் தலைவர் கணேஷ் நடராஜன் ஏற்பாடு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024