Sunday, October 29, 2017

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அத்துமீறல்



சென்னை, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யாதவர்களிடம் பணம் வாங்கி, முன்பதிவு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்பட்டதால், பயணியர் சிரமம் அடைந்தனர்.சென்னை, எழும்பூரில் இருந்து, மதுரைக்கு தினசரி மதியம், 1:30 மணிக்கு, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இது, இரவு, 9:20 மணிக்கு, மதுரை சென்றடையும். நேற்று விடுமுறை என்பதால், அந்த ரயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில், நிற்க கூட இடமில்லாமல், பயணியர் பயணம் செய்தனர். அதில் பலர், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், பயணம் செய்ய முயன்றனர்.அவர்களை, டிக்கெட் பரிசோதகர் அப்புறப்படுத்தினார். ரயில், செங்கல்பட்டை தாண்டிய பின், முன்பதிவு செய்யப்பட்ட, 'டி 12' பெட்டியில், காலியாக இருந்த இருக்கைகளில், அமர்ந்து செல்வதற்கு அனுமதிக்குமாறு, அவர்கள், டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டனர். அதற்கு அவர், முதலில் மறுத்தார். பின், முன்பதிவு செய்யாத பயணியரிடம் பணம் பெற்று, பயணிக்க அனுமதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு, முறையான ரசீதுகள் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024