Monday, October 30, 2017


ஆதார்: தனிநபர் தகவல்களை பாதுகாக்க புதிய நடைமுறை

By புது தில்லி,  |   Published on : 30th October 2017 03:28 AM  |
n25

ஆதார் கோரி விண்ணப்பிக்கும் மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக புதிய நடைமுறையைக் கொண்டுவரப் போவதாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒருவரது தனிப்பட்ட விவரங்களை ஆதாருக்காகப் பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ளும் அரசு அல்லது வங்கி ஊழியர்கள், தங்களது கை ரேகையையோ அல்லது விழிப்படலத்தையோ பயோமெட்ரிக் முறையில் சம்பந்தப்பட்டவரது விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக அந்தத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய முடியும் என்று யுஐடிஏஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, அத்தகைய பயோமெட்ரிக் பதிவுகளை ஆதார் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மக்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களால் எளிதில் கையாள முடியும் நிலை இருந்து வருகிறது. அதைத் தவிர்க்கும் பொருட்டே, இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிகிறது.
ஆதார் எண் பெற விண்ணப்பிக்கும்போது மக்களின் கைரேகைகள், விழிப் படலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த விவரங்களைப் பதிவு செய்வதற்காக யுஐடிஏஐ அமைப்பால் அங்கீகரிப்பட்ட பல ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை பெரும்பாலும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே மேற்கொள்கின்றனர். அதற்கு அடுத்தகட்டமாகவே ஆதார் விண்ணப்பங்கள் அரசு, அஞ்சலகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஊழியர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில், மக்களின் தனிப்பட்ட விவரங்களை தனியார் வசம் கொடுத்தால் அவை பாதுகாப்பாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, புதிய நடைமுறை ஒன்றைக் கொண்டுவர யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒருவரது தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும்போது அரசு ஊழியர்களும், வங்கி ஊழியர்களும் தங்களது சுயவிவரங்களை சம்பந்தப்பட்டவரது விண்ணப்பதில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
இதனால், அந்தத் தகவல்களை பெருமளவில் தனியார் ஊழியர்களால் கையாள முடியாத நிலை ஏற்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய நடைமுறையானது வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்கும்போது மட்டுமல்லாமல், அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கும்போதும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று யுஐடிஏஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







 

    No comments:

    Post a Comment

    College of Pharmacy at MMC in Chennai staring at losing approval due to lack of qualified teachers

    College of Pharmacy at MMC in Chennai staring at losing approval due to lack of qualified teachers Peethaambaran Kunnathoor, Chennai Thursda...