Monday, October 30, 2017

கோவிலம்பாக்கம், மேடவாக்கம் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்


By காஞ்சிபுரம்  |   Published on : 30th October 2017 12:22 AM  |
கோவிலம்பாக்கம், மேடவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் விரைவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், கோவிலம்பாக்கம், மேடவாக்கத்தில் அரசுக்குச் சொந்தமான காலிமனை இடங்களை ஆட்சியர் பொன்னையா ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் குப்பை கொட்டும் இடத்தைப் பார்வையிட்டு, அங்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். பின்னர், ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள காலிமனை, மேடவாக்கம் வெள்ளக்கால் வடக்குப்பட்டு பெரிய ஏரி அருகிலுள்ள காலிமனை ஆகிவற்றை பார்வையிட்டு, அந்த இடத்தின் விஸ்தீரணங்களைக் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் பொன்னையா கூறியதாவது:
கோவிலம்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு இணையாகக் குப்பைகள் சேர்ந்து விடுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து, அவற்றிலிருந்து உரம் தயாரிப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரைவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு கொசுப்புழு உருவாவதற்குக் காரணமாக உள்ள கழிவுகளை அகற்றவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் வேண்டும். அதன்படி, வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் திங்கள்கிழமை வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும், அலட்சியமாக இருந்து டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானாக இருந்தால், அரசு, தனியார் நிறுவனங்கள் எதுவானாலும் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Retd prof sues firm for faulty car, wins ₹12 lakh refund

Retd prof sues firm for faulty car, wins ₹12 lakh refund  TIMES NEWS NETWORK 25.11.2024 Bengaluru : An automaker and its dealer in Yelahanka...