சென்னையில் மழை: வாகன நெரிசல்!
பதிவு செய்த நாள்
30அக்2017
20:36
சென்னை : சென்னையில் இன்று காலை முதல் மழை நின்று நின்று பெய்து வருகிறது.வடகிழக்குப் பருவமழையால் நகரின் பிரதான சாலைகளில் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
கடும் போக்குவரத்து நெரிசல்
எனினும் மழை காரணமாகவும், சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததாலும் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. . இதனால் காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டவர்கள் 12 மணியளவில் தான் அலுவலகம் சென்றடைய நேரிட்டது. இந்நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழை 4 மணிக்குப்பிறகு ஓய்ந்த நிலையில் தற்போது மாலை 5.30 மணியையே இரவு போல மாற்றும் வகையில் கருமேகம் வானைச் சூழ்ந்து சென்னை மக்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது. பலரும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வேளையில் தொடங்கியுள்ள மழையால் மீண்டும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் முதல் எஸ்ஐடி சிக்னல் வரையில் வாகனங்கள ஊர்ந்தே செல்கின்றன.
இதே போன்ற நந்தனம் தேவர் சிலை முதல் சின்னமலை வரையிலான சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து செந்நீர்குப்பம் வழியாக வேலப்பன்சாவடி செல்லும் சாலையிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதே போன்று கிண்டி, அசோக் நகர், சூளைமேடு, ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மநாகர போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை வழங்கி வருகின்றனர். இதே போன்று ஐடி அலுவலகங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி, மத்திய கைலாஷ், பெருங்குடி உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாகன நெரிசல் காணப்படுகிறது.
Advertisement
No comments:
Post a Comment