பஞ்சாபில் இறந்தவர்களுக்கும் பென்சன்: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
பதிவு செய்த நாள்
29அக்2017
15:48
சண்டிகர்: பஞ்சாபில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறந்தவர்களுக்கு பல ஆண்டுகளாக பென்சன் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்த முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பென்சன்
பஞ்சாப் மாநிலத்தில், 19.80 லட்சம் பேர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாநில அரசு மாதந்தோறும் ரூ.500 பென்சன் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில், முதியவர்கள், விதவைகள் மற்ற்றும் மாற்று திறனாளிகளுக்கு பென்சன் வழங்க மாநில அரசு ரூ.49.51 கோடி ஒதுக்கி வருகிறது.
ஆய்வு
மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையில் ஆட்சி அமைந்ததும், பென்சன் குறித்து முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து பயனாளிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
இதில் பென்சன் பெறுபவர்களில் 2,45,935 பேர் பென்சன் பெற தகுதியே இல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவார்கள். சிலருக்கு லட்சகண்கான ரூபாய் அளவுக்கு சொத்துகள் உள்ளன. பென்சன் வாங்குபவர்களில் 65,743 பேர் உயிருடன் இல்லை.
போலி முகவரி
45,128 பேர் பென்சன் பெற போலி முகவரி அளித்துள்ளனர். அந்த முகவரியில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை. 42, 437 இளைஞர்களும், 10,199 பணக்காரர்களும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பென்சன் வாங்கி வருகின்றனர். பென்சன் மறு ஆய்வுக்காக அழைப்பு விடுத்த போது, 82,428 பேர் வரவில்லை. மேலும், பென்சன் மாநிலத்தை ஆட்சி செய்த பாதல் குடும்பத்தினர் செல்வாக்கு பெற்ற மால்வா பகுதியில் அதிகம் பேருக்கு முறைகேடாக பென்சன் அளிக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment