Sunday, October 29, 2017


புறவழிச்சாலை தஞ்சையில் திறப்பு



சென்னை, தமிழகத்தில், 73 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள திட்டங்களை, முதல்வர் பழனிசாமி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.தஞ்சாவூர் நகரில், 42 கோடி ரூபாயில், 5.2 மீட்டர் நீளமுடைய, இரு வழித்தட தஞ்சாவூர் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில், 29 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுாரில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், மலட்டாறு குறுக்கே, பாலம் கட்டப் பட்டு உள்ளது. இப்பாலங்களையும், புறவழிச் சாலையையும், முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024