Sunday, October 29, 2017

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் மது போதை நபரால் பரபரப்பு!


சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் மது போதையோடு கையில் இரண்டு பைகளும், அக்கத்தில் மடித்த ஒரு போர்வையும், 2 வயது மதிக்கதக்க ஒரு பெண் குழந்தையை இழுத்தவாறு கீழே இறங்கினார். கீழே இறங்கியதும் போதையில் தடுமாறி கீழே அமர்ந்து ரெண்டு பைகளையும் கீழே வைத்து விட்டு அக்கத்தில் இருந்த போர்வையை திறந்த போது பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத 1 1/2 கிலோ எடையுள்ள ஒரு பச்சிளம் குழந்தையை வைத்திருந்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்ததும் அதிர்ச்சி  அடைந்தார்கள்.

இதற்கிடையில் 2 வயது பெண் குழந்தை தண்ணீரை பார்த்து போதையில் இருந்த அந்த நபரின் கையை விழகி ஓட.''எங்க ஓடறன்னு'' ஓங்கி கன்னத்தில் அரை விட அந்த குழந்தை சுறுண்டு கீழே விழுந்தது.  இதனால் அங்கிருந்தவர்கள் ஆத்திரம் அடைந்து அவரை தாக்க முயற்சித்தார்கள். ஆனால் குழந்தைகள் இருப்பதால் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதையடுத்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டனர். குழந்தை தாகத்தில் தவித்ததை உணர்ந்த அஸ்தம்பட்டி எஸ்.ஐ.,ராஜசேகர் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பருகி விட்டார். பிறகு மது போதையில் இருந்த அந்த நபரிடம் விசாரித்த போது ''என் பெயர் சுரேஷ். என் மனைவி பெயர் பாரதி. நான் வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்ஃபாம்ல தங்கி இருக்கிறேன்.  சின்ன சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு ரயிலில் வந்துக் கொண்டிருந்த போது  என் மனைவி குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டு ஒவ்வொரு பெட்டியாக கூட்ட போயிட்டாள். அவள் வாழப்பாடி ஸ்டேஷனில் இறங்கி இருப்பாள். நான் தூங்கிட்டு வந்ததால் சேலத்திற்கு வந்துட்டேன். தேவைப்பட்டால் வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷனில் விசாரித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

அதையடுத்து காவல்துறையினர் வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷனில் விசாரித்த போது, '' ஆமாம் அவன் இங்கு தான் தங்கி இருக்கிறான். அவனுக்கு மொத்தம் 5 குழந்தைகள். முதல் 2 பெண் குழந்தைகள் பிறந்து கொஞ்ச நாளிலேயே இறந்து விட்டது. 3 வதாக பிறந்த ஒரு பெண் குழந்தை 3 1/2 இருக்கும் போது இவனுடைய நண்பன் முனியப்பன் என்பவன் அந்த குழந்தையிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டான். நான்காவதாக பிறந்த 2 வயது பெண் குழந்தை இருக்கு. தற்போது அவனுக்கு 10 நாட்களுக்கு முன்பு 7 மாசம் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தான் டிசார்ஜ் ஆனதாக சொன்னான்'' என்றார்கள்.

அதையடுத்து காவல்துறையினர் அவர்களை மீட்டு  அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு தாயோடு சேர்க்க போவதாக 3 பேரையும் ஜீப்பில்  அழைத்து சென்றார்கள். 

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024