Monday, October 30, 2017

60ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் தவிப்பு:மக்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக குமுறல்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சிறுமருதுாரில் சுதந்திரம் பெற்றது முதல் 60 வருடங்களாக தங்கள் கிராமத்திற்கு பஸ் வரும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரான்மலையை ஒட்டி அமைந்துள்ளது சிறுமருதுார் கிராமம். இங்கு 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 
இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை பஸ் போக்குவரத்துவசதி இல்லை.இப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்ல பல கி.மீ., நடந்து சென்றுபஸ் ஏற வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த கிராம மக்களின் கஷ்டத்தை போக்கி இப்பகுதிக்கு பஸ் விடுவதற்காக20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தும் பஸ் ஏதும் விடப்படவில்லை.
இதற்கிடையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமம் வழியாக தனியார் மினிபஸ் ஒன்று விடப்பட்டது. விடப்பட்ட சில மாதங்களிலேயேஅதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. 
இன்று வரை அப்பகுதிக்கு எந்த பஸ்சும் இயக்கப்படவில்லை.சிறுமருதுாரை சேர்ந்த ஆறுமுகம் கூறியதாவது: சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்கள் கிராமத்துக்கு பஸ் விடப்படவில்லை.இதனால் நோயாளிகள் 3 கி.மீ. துாரம் நடந்து சென்று, அங்கு பஸ்சுக்கு காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.மிகவும் சிரமமாக உள்ளது.சிங்கம்புணரியில் இருந்து எங்கள் ஊர்வழியாக பொன்னமராவதிக்கும், அங்கிருந்துசிங்கம்புணரிக்கும் ஒரு நாளைக்கு 3 முறையாவது டவுன் பஸ் இயக்க வேண்டும். 
அப்படி இயக்கினால் எங்கள் ஊர் மட்டுமல்லாமல்பக்கத்து ஊர்களும் பயன்பெறும்,என்றார்.ஆனந்தன் கூறியதாவது: பஸ் போக்குவரத்து இல்லாததால் எங்கள் ஊர் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு5 கி.மீ.துாரம் சைக்கிளில் செல்கின்றனர். இது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அற்றதாக இருப்பதால் பலர் மேற்படிப்பு படிக்கவைக்க யோசிக்கின்றனர்.எனவே பள்ளி நேரத்திற்கு தகுந்தாற்போல் டவுன் பஸ்சை அரசு இயக்கவேண்டும்,என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024