Sunday, October 29, 2017

விஜயை முந்துகிறார் விஷால் அரசியல் கட்சி துவங்க ஆயத்தம்


விஜயை முந்துகிறார் விஷால் அரசியல் கட்சி துவங்க ஆயத்தம்

மெர்சல் பட விவகாரத்தில், பா.ஜ., கொடுத்த நெருக்கடி காரணமாக, நடிகர் விஜய்க்கு, அரசியலுக்கு வரும்படி, அவரது ரசிகர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவருக்கு முன்னதாக, அரசியலில் அடியெடுத்து வைக்கவும், புத்தாண்டில் புது கட்சி அறிவிப்பை வெளியிடவும், நடிகர் விஷால் ஆலோசனை நடத்திய விவகாரம் வெளியாகி உள்ளது.விஷால் ஆதரவு வட்டாரம் கூறியதாவது:நடிகர் விஜய், ஒவ்வொரு படத்திலும், அரசியல் வசனம் இருக்க வேண்டும் என்பதில், கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். காங்கிரஸ் அரசில் நடந்த, '2 ஜி' ஊழல் குறித்தும், பா.ஜ., ஆட்சியின், ஜி.எஸ்.டி., குறித்த கருத்துக்களையும், படங்களில் புகுத்தி, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க, நடிகர்கள் அச்சப்பட்டு கொண்டிருந்த நிலையில், விஷால் முதல் நபராக, தன் எதிர்ப்பு குரலை ஓங்கி கொடுத்து உள்ளார்.அரசியலிலும், விஜய்க்கு முன் கால் பதித்து விட, விஷால் தீவிரமாக இருக்கிறார். அதற்கான அச்சாரமாக, நடிகர் சங்கத் தேர்தல், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அடுத்தகட்டமாக, சட்டசபை தேர்தலில் போட்டியிட, தொகுதி தேர்வு செய்து வருகிறார்.இச்சூழலில், தன் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை அழைத்து, புத்தாண்டில், புதுக்கட்சி துவக்கும் திட்டம் குறித்து, ஆலோசனை நடத்தியுள்ளார்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024