Tuesday, October 31, 2017

கொல்கத்தாவில் நோயாளியின் வயிற்றில் இருந்து 639 ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டன


கொல்கத்தாவில் நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ கிராமுக்கும் கூடுதலான எடை கொண்ட 639 ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன.

அக்டோபர் 31, 2017, 12:56 PM

கொல்கத்தா,கொல்கத்தாவின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் கோபர்டங்கா பகுதியை சேர்ந்த ஒருவர் ஸ்கைசோபிரீனியா என்ற வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் ஆணிகள் மற்றும் மண் ஆகியவற்றை பல நாட்களாக உண்டு வந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வயிற்றில் ஆணிகள் இருந்த தகவல் எக்ஸ்-ரே பரிசோதனையில் தெரிய வந்தது.

உடனடியாக கல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடந்த எண்டோஸ்கோபி சிகிச்சையில் அவரது வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். அவர்கள், வயிற்றில் 10 செ.மீட்டர் அளவில் அறுவை சிகிச்சை செய்து உள்ளேயிருந்த ஆணிகளை காந்தம் ஒன்றின் உதவியுடன் வெளியே எடுத்துள்ளனர். மண்ணையும் பிரித்து எடுத்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை 1 மணி மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது. நோயாளி தற்பொழுது நலமுடன் உள்ளார். அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024