Monday, November 6, 2017

மழை மீட்பு நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மும்முரம் காட்டி உள்ளனர். சென்னையில் மண்டலவாரியாக களப்பணியில் குதித்தனர்.

நவம்பர் 06, 2017, 04:30 AM

மழை மீட்பு, நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மும்முரம் வேஷ்டியை மடித்துக்கட்டி களத்தில் குதித்தனர்


சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரம் காட்டி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் மழை மீட்பு நிவாரண பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தார்.

சென்னை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் மழை நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து, துரிதப்படுத்துவதற்காக மண்டல வாரியாக அமைச்சர்களை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பாஸ்கரன், மணலி மண்டலத்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், மாதவரம் மண்டலத்தில் அமைச்சர்கள் காமராஜ், பா.பென்ஜமின் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, ராயபுரம் மண்டலத்தில் எம்.சி.சம்பத், திரு.வி.க. நகர் மண்டலத்தில் அமைச்சர்கள் கருப்பண்ணன், கடம்பூர் ராஜூ, அம்பத்தூர் மண்டலத்தில் அமைச்சர் கே.பாண்டியராஜன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் மழை மீட்பு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்ணாநகர் மண்டலத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், தேனாம்பேட்டை மண்டலத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கோடம்பாக்கம் மண்டலத்தில் டாக்டர் சரோஜா, வளசரவாக்கம் மண்டலத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, ஆலந்தூர் மண்டலத்தில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, அடையாறு மண்டலத்தில் அமைச்சர்கள் டாக்டர் எம்.விஜயபாஸ்கர், நிலோபர் கபீல், பெருங்குடி மண்டலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, உடுமலைப்பேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராயபுரம் மற்றும் திரு.வி.க.மண்டலத்தில் அமைச்சர் ஜெயக்குமார், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைச்சர் பி.தங்கமணி, வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சோழிங்கநல்லூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கூடுதல் பொறுப்புகளோடு மழை நிவாரண பணிகளை தூரிதப்படுத்தி வருகின்றனர்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மழைப் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளோடு, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், களப்பணியுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.

தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பராவாமல் தடுப்பதற்கான ஆயத்த பணிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எம்.விஜயபாஸ்கர் முனைப்புக்காட்டி உள்ளார்.

அமைச்சர்கள் குளம்போல் தேங்கிய மழைநீரில் வேஷ்டியை மடித்துக்கட்டி இறங்கி சென்று மக்களை சந்திக்கின்றனர். மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர்.

அமைச்சர்கள் போன்று அதிகாரிகளும் ஓய்வு இல்லாமல் மழை மீட்பு நடவடிக்கைகளில் களம் இறங்கி உள்ளனர். வருவாய்த்துறை முதன்மை செயலாளர் கொ.சத்யகோபால், செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், பெருநகர சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திக்கேயன், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட அதிகாரிகள் பம்பரம் போல் சுழன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்துவதற்காக மாவட்டவாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர்.

Sunday, November 5, 2017


தமிழ்நாட்டில் நிகழும் பிரசவங்களில் 34.1 சதவிகிதம் சிசேரியன்கள்! - அதிகரிக்கக் காரணம் என்ன?

ஜி.லட்சுமணன்

பிரசவம்... புதிய உயிர் பூமியில் சஞ்சரிக்கும் உன்னத நிகழ்வு. பிரசவத்தின்போது, ஏற்படும் வலி, வேதனையைக் கடந்து, செத்துப் பிழைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும், அது மறுபிறப்பு. மருத்துவத்துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம்முடைய முந்தைய தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியிருக்கும் இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களைச் சாத்தியமாக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கக் கூடிய செய்தியே.



‘தாய்-சேய் நலனை கருத்தில்கொண்டு மருத்துவக் காரணங்களுக்காக, 15 சதவிகிதம் வரை மட்டுமே அறுவைசிகிச்சைப் பிரசவங்களை அனுமதிக்கலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், சமீபத்தில் வெளியாகும் புள்ளிவிவரங்கள் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

மத்திய அரசின் குடும்ப நலம்-சுகாதார அமைச்சகத்தின் தேசியக் குடும்பநல ஆய்வு (National Family Health Survey) அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் குறித்து 2015-16-ம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளைச் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் சராசரியாக 17.2 சதவிகிதம் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடக்கின்றனவாம். இதுவே, 1992-93-ம் ஆண்டில் 2.9 சதவிகிதமும், 1998-99-ம் ஆண்டில் 7.1 சதவிகிதமும், 2005-06-ல் முறையே 8.5 சதவிகிதம் என்ற அளவில் இருந்திருக்கிறது. அதேபோல, தேசிய அளவில் 40.9 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளிலும் 11.9 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் நடப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்த பிரசவங்களில் 34.1 சதவிகிதம் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 51.3 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளிலும் 26.3 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பதாக அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் கிராமப்புறங்களில் 32.3 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 36.1 சதவிகிதமாகவும் உள்ளன என்கிறது அந்த ஆய்வு.

“சில அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது. என்றாலும், பல மருத்துவமனைகள், பிரசவத்திலும் பணம் பார்க்கும் நோக்கில் செயல்படுவதும் இதற்கு முக்கியக் காரணம்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். “சில தனியார் மருத்துவமனைகள் வணிக நோக்கில் செயல்படத் தொடங்கியதன் விளைவாக, பிரசவம் என்றாலே, சிசேரியன்தான் என்று ஆகிவிட்டது" என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள்.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவர்கள், `பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் பெண்களில் பெரும்பாலும் சிசேரியனையே விரும்புகிறார்கள். பிரசவவலியைத் தவிர்க்கவோ அல்லது தங்கள் குழந்தை நல்ல நாளில், நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்ற ஜோதிட நம்பிக்கைக்காகக்கூட இந்த மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்கிறார்கள் அவர்கள்.

`உண்மையில், சிசேரியன் முன்பைவிட, தற்போது அதிகரிக்க என்ன காரணம், சிசேரியன் செய்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன?’ மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜிடம் கேட்டோம்...

"பொதுவாக, பிரசவத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும். எல்லா மருத்துவமனைகளிலும் சுகப்பிரசவம் நடக்காமல் இருப்பதில்லை. முன்பைவிட தற்போது குறைந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில் சுகபிரசவத்தின்போது நடக்கும் குழந்தை இறந்துபோவது, தாய் இறந்துபோவது முற்றிலும் இப்போது தடுக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் கவனத்தில்கொள்ளாமல், சிசேரியன் பிரசவம் அதிகரிப்பதற்கு மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் குறைசொல்லும் போக்கு இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. விதிவிலக்காக, சில இடங்களில் அப்படி நடக்கலாம். மற்றபடி அதில் முழுவதும் உண்மையில்லை. ஏனெனில், சுகப்பிரசவம் எல்லாப் பெண்களுக்கும் சாத்தியமாவது இல்லை. முதலில், சிசேரியன் முறை அதிகரிக்க வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்களே முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். குறிப்பாக, திருமண வயதைத் தள்ளிப் போடுவதும், செயற்கைக் கருவுறுதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் சில பிரசவங்களில் 'சிசேரியன்' அவசியமாகிறது.



நவீன கருவிகளும், வசதிகளும் அதிகரித்துவிட்ட நிலையில், 'சிசேரியன்' முறை வேகமாகவும் எளிதாகவும் செய்யக்கூடியதே. இப்போதெல்லாம் குறையுள்ள குழந்தைப் பிறப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று உலகளவில் மருத்துவத் துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில்தான் சிசேரியன் அதிகரித்திருக்கிறது. போதிய அளவு முன்னேற்றமடையாத நாடுகளில்தான் இது குறைவாக இருக்கிறது. இந்த நாடுகளில்தான் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய தாய், சேய் இறப்பு விகிதம் குறைவாக இருக்கின்றன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சில பிரச்னைகள் ஏற்படலாம் என்றாலும், அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல.

பெண்களுக்குத் தங்கள் பிரசவம் குறித்து முடிவெடிக்கும் உரிமை இருப்பதால், பெண்களே தீர்மானிக்கலாம். இதில் வலிக்கு பயந்தும் சிசேரியன் முறையைச் சில பெண்கள் நாடுகின்றனர். அதோடு சில தம்பதிகள் பிறக்கப்போகும் குழந்தை, ஜோதிட அடிப்படையில் நல்ல நாள், நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆடி மாதத்தில் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்பதற்காக, அதற்கு முன்னரே சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். தாய்-சேய் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் சிசேரியனுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களுக்காக நடைபெறும் சிசேரியன்கள் தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் முன்கூட்டியே தேதியைக் குறித்துவைத்து, குழந்தையை வெளியே எடுக்கும்போது, குழந்தை போதுமான வளர்ச்சியடையாமல் இருக்கும் நிலை ஏற்படலாம். இப்படி சிசேரியன் செய்துகொண்ட சில தாய்மார்களுக்குப் போதுமான அளவு பால் சுரக்காது அல்லது பால் சுரக்க பல நாள்கள் ஆகும். முதல் பிரசவம், சிசேரியன் என்றால், அடுத்ததும் அதேபோல்தான் இருக்கும் எனக் கூற முடியாது. அறுவைசிகிச்சைதான் தேவைப்படும் என்ற அறிகுறி தென்படாத வரை, சுகப்பிரசவமும் ஏற்படலாம்" என்கிறார் ஜெயராணி காமராஜ்.

எந்தெந்தச் சமயங்களில் சிசேரியன் மூலம் குழந்தைப்பேறு பெறுவது கட்டாயமாகிறது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜிடம் கேட்டோம்.

"அந்தக் காலங்களில் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கைமுறையே உடற்பயிற்சியாக மாறி சுகப்பிரசவத்துக்கு உதவின. இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலை குறைவாக இருக்கிறது. இதுபோன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அதிகரித்து வருவதுதான் அறுவைசிகிச்சை பிரசவங்களுக்கு அடிப்படையான காரணம்" என்றவர், வேறு எந்தெந்தச் சூழலில் சிசேரியன் அவசியமாகிறது என்பதையும் விளக்குகிறார்.

"தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால், குழந்தை அந்த மாதத்துக்கேற்ற வளர்ச்சியடையாமல் இருந்தால் (Intrauterine growth restriction (IUGR), ஆரம்பப் பிரசவவலியின்போதே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிசேரியன் தேவைப்படும்.

பிரசவ நாளுக்கு இரண்டு வாரத்துக்கு முன்பே தாயின் இடும்பெலும்புக்குள் கர்ப்பப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையின் தலை நுழைந்துவிட வேண்டும். தாயின் இடுப்பெலும்பு சிறியதாக இருந்து, குழந்தையின் தலை பெரிதாக இருந்தால் குழந்தையின் தலை இடுப்பெலும்புக்குள் நுழையாது. இந்தச் சூழலிலும், பனிக்குடம் உடைந்து பிரசவவலி இல்லாத நிலையில் வலியைத் தூண்டிவிட மருந்து கொடுத்தும் வலி வராத நிலையிலும் சிசேரியன் தேவைப்படும். பனிக்குடம் உடைந்த 6 - 8 மணி நேரம் வரை பிரசவவலி அதிகமாக இருந்தும் பிரசவம் ஆகவில்லை என்ற நிலை, நஞ்சுப் பிரசவப் பாதையில் அமைந்திருந்தால் குழந்தை வெளிவர இயலாது. இதுபோன்ற சூழல்களிலும் சிசேரியன் செய்வது அவசியம்.

கர்ப்பப்பை அல்லது கருவகத்தில் கட்டி, பிரசவப் பாதையில் கட்டி, பிரசவத்தில் சிக்கல், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், வலிப்பு நோய் ஆகியவற்றால் தாய் பாதிக்கப்பட்டிருக்கும்போது, குழந்தைக்குப் பிராண வாயு குறைந்துவிட வாய்ப்பிருக்கும் நிலையில், குழந்தை படுத்திருக்கும் நிலை சரியாக இல்லாமல் இருந்தால், உதாரணமாகக் குறுக்கே படுத்திருந்தால், கர்ப்பப்பை அடி இறங்கி அதனை நிறுத்த ஆபரேஷன் செய்திருந்தால்... சிசேரியன் செய்ய வேண்டும்.



தாய்க்கு இதயக்கோளாறு, கர்ப்பப்பை வாயில் புற்றுநோய், இயற்கைக்கு மாறாக யோனிக் குழாய் இருந்தால், யோனிக்குழாயின் அமைப்புச் சரியாக இல்லாமலிருந்தால், குழந்தையே இல்லாமல் செயற்கை முறையில் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தையாக இருந்தால்... இதுபோன்ற தாய்-சேய் ஆகிய இருவருக்கும் ஏற்படும் உயிர் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக சிசேரியன் தேவை அவசியப்படும்.

அடிக்கடி குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து பிறக்க நேரிட்டால் நிறை மாதத்துக்கு முன்னரே சிசேரியன் செய்ய பரிந்துரைக்கப்படும். முதல் பிரசவம் சிசேரியனாக இருக்குமானால், பிரசவவலியின் அவஸ்தையால் கர்ப்பப்பை தையல் விட்டுப்போக வாய்ப்பிருக்கலாம். அப்போது சிசேரியன் செய்துதான் ஆக வேண்டும்" என்கிறார் கமலா செல்வராஜ்.

ஒரு பெண் 'தாய்' என்ற உன்னத நிலையை எட்டக்கூடிய அற்புத நிகழ்வு பிரசவம். பெண்களின் மனவலிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. 'குழந்தை பிறப்பு என்பது அந்த ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இனம்புரியாத மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிகழ்வு. எனவே, கர்ப்பம் அடைவதோ, குழந்தை பெற்றுக்கொள்வதோ ஒரு நோயல்ல. புதிய உயிர்கள் தோன்ற இயற்கை ஏற்படுத்திக்கொடுத்த வழிமுறை. பிரசவத்தின்போது, தாங்க முடியாத வலி இருக்கும்; அந்த வலி நிரந்தரமல்ல என்பதை உணரவேண்டும். பிரசவம் முடிந்ததும், வலியும் பறந்துவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தவழும். எனவே, அவசியமில்லாமல், சிசேரியன் செய்துகொள்வதை தவிர்ப்பது தாயின் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல...குழந்தையின் எதிர்காலத்துக்கும் நல்லது.
தமிழக மருத்துவ மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் இரட்டை இருப்பிடச் சான்றிதழ்!

ஞா. சக்திவேல் முருகன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை, நீட் அடிப்படையிலா அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலா என்ற குழப்பம் இருந்தது. ‘நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆகஸ்ட் 25 முதல் மாணவர் சேர்க்கையை நடத்தியது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம்.



'பொதுக் கலந்தாய்வின் முதல் நாளிலேயே வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்துகொண்டு கல்லூரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்' என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ‘போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுகாதாரத்துறை அறிவித்தது. முதல்நாளில் போலி இருப்பிடச்சான்றிதழ் மூலம் சேர்ந்த ஒன்பது பேரில் நான்கு மாணவர்கள் கலந்தாய்விலிருந்து விலகிவிட்டனர். ஒரு மாணவர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. ‘நாங்கள் அளித்த இருப்பிடச் சான்றிதழ் எனத் தெரியவந்தால் எங்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம்’ என நான்கு மாணவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது.


மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்பு, தமிழக மருத்துவச் சேர்க்கைக்கான செயலாளர் செல்வராஜ், "பணி நிமித்தம் காரணமாக மற்ற மாநிலங்களில் பணியாற்றி வருபவர்களின் பிள்ளைகள் 428 பேர், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் அளித்து, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்" என்றார். ஆனால், மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், "கலந்தாய்வின் முதல் இரண்டு நாள்களில் மட்டுமே இரட்டை இருப்பிடச் சான்றிதழ் அடிப்படையில் 490 மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். மருத்துவக் கலந்தாய்வில் ஏற்கெனவே வேறொரு மாநிலத்தில் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துச் சேர்ந்தவர்கள், மற்றொரு மருத்துவக்கலந்தாயில் கலந்துக்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து கலந்தாய்விலும் கலந்துகொண்டனர். இவர்கள் மீண்டும் தமிழக அரசின் கலந்தாய்விலும் பங்கேற்று, தமிழகக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். இதன்மூலம், தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைக் கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர்" என்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார், சென்னை அயானவரத்தைச் சேர்ந்த ரவி. இவரது மகன் நீட் தேர்வில் 367 மதிப்பெண் பெற்றிருக்கிறார். 'சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், என் மகனுக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. சென்னையில் பிறந்து, வளர்ந்து, சென்னையிலேயே படித்த என்னுடைய மகனுக்குச் சென்னை கல்லூரியில் இடம் கிடக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த 104 பேர் இரட்டை இருப்பிடச் சான்றிதழைப் பயன்படுத்தி, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இதைப்போலவே, மற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சேர்ந்திருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் போய்விட்டது. இதுகுறித்து, உயர்நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'மருத்துவக் கல்லூரி சேர்க்கையின்போது மாணவர்கள் அளித்த இருப்பிடச் சான்றிதழ்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தமிழகச் சுகாதார துறைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் இருவரும் 06.11.2017 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

"நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே ஆதார் அட்டை அவசியம் என்றார்கள். ஆனால், கலந்தாய்வின்போது ஆதார் அட்டையைக் கவனத்தில் எடுக்காமல், இருப்பிடச் சான்றிதழை மட்டுமே பார்த்து சேர்க்கை நடத்தினர். ஆதார் அட்டைக்கும், இருப்பிடச் சான்றிதழுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிந்தால் இரட்டை இருப்பிடச் சான்றிதழின் நிலையை அறிந்திருக்க முடியும். இதைத்தவிர, இதர மாநிலங்களின் கலந்தாய்வின் தரவரிசைப்பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, தமிழகத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையைத் தடுத்து, தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பளித்திருக்க முடியும்" என்றனர் பெற்றோர்கள்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அன்று, தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்தே, தமிழக மாணவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
சென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..!

கே.பாலசுப்பிரமணி க.பாலாஜி



பூந்தூறலாகத் தொடங்கி, மிகமிகக் கனமழையாக மாறிய வட கிழக்குப் பருவமழைதற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளைக் குளிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஒதுக்கப்பட்ட நபர்கள்

கொட்டு மழையிலும், அது தந்த குளிர்ச்சியை வீட்டுக்குள் இருந்தபடி சூடான தேநீரோ, காபியோ குடித்தபடி ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் மழையை வேடிக்கை பார்க்கும் மனதும், அதற்கான நேரமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாறாக, தொலைக்காட்சியில் மழை பற்றிய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருப்போம். நமக்கு ஒரு பாதுகாப்பான வீடோ, அலுவலகமோ இருக்கிறது. ஸ்மார்ட்போன் வழியே ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மழை நிலவரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கத்தைச் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறோம். ஒரு பாதுகாப்புத் தளத்தில் இருந்து நம்மால் இயங்க முடிகிறது.
சொந்த வீடோ, வாடகை வீடோ, தங்கும் அறைகளோ இல்லாத பெருநகர வீதிகளில் ஓரம்கட்டப்பட்ட அல்லது இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது இந்தச் சமூகத்தைப் பார்த்து மனம் வெறுத்த நபர்கள், சாலை ஓர நடைபாதைகளில் முடங்கியிருக்கின்றனர். இந்தப் பருவமழை காலத்தில் அவர்களின் நிலை எப்படி இருக்கும்?

பேச மறுப்பு

சூடான தேநீரைப் பருகிக்கொண்டிருக்கும்போது எப்போதாவது இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா? இந்தக் கேள்வி மனதில் எழுந்த மாத்திரத்தில் கொட்டும் மழையையும், அதில் நனைந்து கொண்டிருக்கும் தெருக்களில் முடங்கியிருக்கும் நபர்களையும் நினைத்து மனம் பதறுகிறது அல்லவா? இந்த மழையை, நாம் குடிநீராகப் பார்க்கிறோம். விவசாயிகளோ, இதைப் பாசனத்துக்கான நீராகப் பார்க்கின்றனர். தெருவோரத்தில் இருப்பவர்கள் இந்த மழையை எப்படிப் பார்க்கிறார்கள்..?
தெரிந்துகொள்ள கனமழைக்குப் பின், லேசாக வெயில் எட்டிப் பார்த்த பகல்பொழுதில் சென்னை நகர வீதிகளில் முடங்கிக்கிடந்த அவர்களைச் சந்தித்தோம்.

ருக்மணி லட்சுமிபதி சாலையில் ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்துக்கு எதிரே கூவத்தை ஒட்டி ஒரு மாநகராட்சிப் பூங்கா இருக்கிறது. பூங்காவுக்கு வெளியே நடைபாதையில் தாடியுடன் ஒரு மனிதர் உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று, பேச முயற்சி செய்தோம். நம்மிடம் அவர், ''பேச முடியாது'' என்று மறுத்துவிட்டார். அவரது மறுப்பை மதித்து விலகினோம்.



மழை வரட்டும்

அதே சாலையில், கிறிஸ்தவ தேவாலயத்தின் எதிரே நடைபாதையில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருசிலரிடம் பேசினோம். முனியம்மா என்பவர், "நைட்ல விட்டுவிட்டு மழை. எதுக்க இருக்குற கண் ஆஸ்பத்திரில இருந்தோம். மழை பெய்றது நல்லதுப்பா. தண்ணி கஷ்டம் தீரும். தண்ணி கிடைக்காம, ரெண்டு ரூபா பாக்கெட் தண்ணி வாங்கிக் குடிச்சிட்டிருக்கோம். என்னதான் பாக்கெட் தண்ணி குடிச்சாலும், குழாயில வர்ற தண்ணியைக் குடிச்சாத்தான் தாகம் தீருதுப்பா" என்று மழையை 
வரவேற்கிறார்
.
அருவருக்கு அருகிலேயே இன்னொருவர் படுத்திருந்தார். நம்மைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து, ''முருகேசன்'' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினார்.

"நைட் புல்லா மழை. அதோ இருக்குதே, அந்தக் கடை தாழ்வாரத்துல தங்கியிருந்தேன். இருந்தாலும் தூக்கமே வரல. அதான் இப்ப கொஞ்ச நேரம் தூங்கிட்டிருந்தேன். மழை பெய்யட்டும். அதனால எனக்கு எந்தக் கவலையும் இல்ல. மழை பெய்யாட்டி தண்ணிக்குத்தான் பஞ்சம். இயற்கையை ஒண்ணும் செய்ய முடியாது. போனவருஷம் வர்தா புயல் வந்தப்போ இங்கதான் கிடந்தேன். எவ்வளவோ மழையைப் பார்த்தாச்சு. வரட்டும். மழை நல்லா வரட்டும். வயசானதால தொடர்ந்து வேலைக்குப் போக முடியல. வேலைக்குப் போயி 20 வருஷமாச்சு. சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. ஆனா, யாரும் என்னையைப் பாத்துக்கமாட்டாங்க. மழையிலேயும், வெயிலுலயேயும் இப்படியே பொழப்புப் போகுது" என்றார் அவர்.

மழையால் கவலை இல்லை


அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாலகிருஷ்ணா, "எங்க அப்பா, அம்மா ஊரு திண்டிவனம். ஆனா, நான் பொறந்தது எல்லாம் இங்கதான். எங்க அப்பா முனுசாமி கை ரிக்‌ஷா இழுத்துத்தான் எங்களை வளத்தாரு. சர்ச் வாசல்ல பிச்சை எடுப்பேன். அதை வெச்சி சாப்பிடுவேன். மழை பெஞ்சா, ஆயிரம் விளக்குல இருக்க பையன் வீட்டுக்குப் போவேன். வீட்டுக்குள்ள நம்மள சேர்க்க மாட்டாங்க. வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்துல படுத்துப்பேன்.நேத்தும் அங்கதான் படுத்திருந்தேன். வேற என்ன செய்யறது" என்றார்.

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பிளாட்ஃபாரத்தில் சிலர் தங்கி இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான குமாரிடம் பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் தேனி. கல்யாணம் ஆயிடிச்சி. ரெண்டு பையன்க, ஒரு பொண்ணு இருக்காங்க. ஊருப் பக்கம் போயி ரொம்ப நாளாச்சு. கோயில், சர்ச் இங்கெல்லாம் சாப்பாடு தருவாங்க. மழை பெய்யறப்ப பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப்புல தங்கிடுவேன். மழை பெய்யறதுக்கெல்லாம் கவலைப்படுறது இல்ல" என்றார்.

சட்டி சுட்டதடா...நெஞ்சை சுட்டதடா

அவருக்கு அருகில் ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "என்கிட்ட பேர் எல்லாம் கேட்கக் கூடாது" என்று நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார். "வீட்ல சண்டை போட்டுட்டு இங்க வந்துட்டேன். எம்.எம்.டி.ஏ-வுல பூ வியாபாரம் செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நாள், கேட்டரிங் கம்பெனில, சப்ளையரா வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். கண்ணுல பார்வை குறைஞ்சிடுச்சு. இப்ப எங்கேயும் வேலைக்குப் போறதில்ல. மழை பெய்றப்போ, ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள போயி தங்கிக்குவேன்" என்றார்.
அதே பிளாட்ஃபாரத்தில் கொஞ்சம் தள்ளி ஒருவர் உட்கார்ந்திருந்தார். யாரோ கொடுத்துச் சென்ற உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "என்கிட்ட எதுவும் கேட்காதீங்க" என்றவர், சிறிது நேரம் கழித்து தன்னைப் பற்றிய தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

"என்னோட பெயர் குமார். ஆந்திரா பார்டர்ல தடா பக்கத்துல ஆரம்பாக்கம்தான் என் சொந்த ஊர். இங்க செக்ரட்டுரேட்டுல எனர்ஜி டிபார்ட்மென்ட்ல ஆபீஸ் அசிஸ்டென்ட்டா வேல பார்த்தேன். 2004-ம் வருஷம் எஸ்மா, டெஸ்மா கொண்டு வந்தப்போ ஜெயில்ல இருந்தேன். பகல்லகூட எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கு. ஆபீஸுக்குப் போதையோட போவேன். ஆபீஸ்ல கிடைச்ச இடத்துல பகலிலேயே படுத்துக் கிடப்பேன். அதனால என்னை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. மனம் வெறுத்துப் போனதால, என்ன செய்யறதுன்னு தெரியாம இங்க வந்து தங்கிட்டேன். 'சட்டி சுட்டதடா, நெஞ்சை சுட்டதடா'னு என் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு.

மழை வந்தா, இதோ பின்னாடி இருக்குற டிராவல்ஸ் பஸ்ல ஒதுங்கிக்குவேன். டிராவல்ஸ் ஓனர்தான் என்னை அப்பப்ப கவனிச்சுக்கிறார். ரோட்டுல மழை தண்ணீர் ஓடுவதைப் பார்க்கும்போது எனக்கு உற்சாகமா இருக்கும். இப்பத்தான் மழை தொடங்கியிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல தண்ணீர் ஓடும். தர்மம் செய்பவர்கள் எத்தைனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களால் என்னைப் போன்றவர்களுக்குச் சோறு கிடைக்கிறது. நான் செத்துப் போனால்கூட, என்னை எடுத்துப் போட்டு விடுவதாக டிராவல்ஸ் ஓனர் சொல்லியிருக்கிறார். இதைவிட எனக்கு வேறு என்ன வேணும்" என்கிறார் சிரித்தபடி.


காதல் தந்த துணிச்சல்

எம்.எம்.டி.ஏ அலுவலகத்துக்குப் பின்புறம் இருந்த பிளாட்ஃபாரத்தில் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "எனக்கு சொந்த ஊரு சென்னைதான். எங்க வீட்டுக்காரருக்கும் இதே ஊருதான். நாங்க ரெண்டு பேரும் வேறவேற சாதி. நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

ரெண்டு பேரு வீட்லேயும் எதிர்ப்பு. எங்க வீட்ல, 'அவரை விட்டுட்டு வீட்டுக்கு வா' என்று சொல்றாங்க. என் புருஷனை விட்டுட்டு எப்படி என்னால அங்கே போக முடியும்? அவரு வீட்லேயும் அப்படித்தான் சொல்றாங்க. என்னை விட்டுட்டு வரச் சொல்றாங்க. அதனால, ரெண்டு வீட்டுக்கும் பிரச்னை வேணாம்னு, இப்படி நாங்க பிளாட்ஃபாரத்துல தங்கிட்டு இருக்கோம்.

நேத்து நைட்டு மழை. அதோ அங்க இருக்குற கடையோட தாழ்வாரத்துல படுத்திருந்தோம். வீட்டுக்காரர், கல்யாண மண்டபங்கள்ல எச்சி இலை எடுக்கிற வேலையில இருக்கார். அவரு வேலை முடிஞ்சு வர்றதுக்கு நைட் ஒரு மணிகூட ஆயிடும். அதுவரைக்கும் குழந்தைகளைப் பாத்துக்கிட்டு இங்கேயேதான் இருப்பேன். எங்க வீட்டுக்காரர் ஏதாவது கொண்டு வருவார்" என்றவரின், கையில் புண்கள் இருந்தன. அதைப் பார்த்து, ''என்ன'' என்று கேட்டோம். "நைட்ல கொசுக்கடி தாங்க முடியல'' என்று சொன்னபடி தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிறார். "உங்க பேரு என்ன" என்று கேட்டோம். "பாரதி" என்கிறார். அதனால்தான் அந்தத் துணிச்சல் என்று நினைத்தபடி கனத்த மனதுடன் திரும்பினோம்.
Dark days:Following heavy rain, the Allikulam campus went without power for three days.Special Arrangement  

Judges had to make do with light from mobile phones and emergency lamps

A blackout following heavy rain kept the Allikulam campus here, which houses the Chief Metropolitan Magistrate court, and 15 other courts, in darkness for the last three days. The magistrates were making do with mobile phone torchlight and emergency lamps.
On Saturday, a working day for the courts, most of the corridors wore a deserted look.
In a court hall a senior civil judge sat near the horseshoe table, where advocates sit during court hours, to make use of the natural light coming in through the window.
His staff switched on the torch on his mobile phone and held it above the head of judge from behind to help the judge peruse documents of prosecuting authorities and counsel for the accused.
In another court, a woman judge, scheduled to hear the bail plea of IPS officer Safeer Karim, was working under an emergency light held at a convenient height by a staff member.
Egmore Court’ Advocates’ Association president J.Chandan Babu said, “Rainwater flooded the electrical system in the complex on Thursday.
“They cut off supply of power. There is no light, water and lift facility.”
“As the court work has been computerised and networked entirely, they need round-the-clock power supply without disruption.
“Typing evidence, judgments and regular trial are not possible and most of us are sitting in darkness,” said a court staff.
Over 1,000 litigants and advocates visit the courts here every day. Besides, shoppers visit the complex to buy old books and other things from shops.
Water supply to toilets has been completely disrupted. S.Ramamurthy, a litigant waiting at the court, said, “Since there is no lift facility here, we have to use the long winding ramp to reach the court halls.
“It is very difficult for senior citizens.”
Power was restored on Saturday evening, but court staff complained of frequent power cuts.

சென்னையின் தற்போதைய அத்தியாவசியப் பொருள் இதுவாகவும் இருக்கலாம்!

எம்.குமரேசன்

சென்னையில் மழை கொட்டி தீர்க்கிறது. தொடர்ந்து 6 நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் புதியதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்றுக் கூறப்படுகிறது. இதனால், மழைப் பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கதில் 65.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. மீனம்பாக்கத்தில் 62 மி.மீ மழை பொழிந்திருக்கிறது. வருங்காலத்தில் இதே போன்று சென்னையில் அதிகமாக மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அதனால், இனிமேல் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போல படகு ஒன்றும் வீட்டில் இருப்பது அவசியம் எனத் தோன்றலாம். இதற்காகவே ஆன்லைனில் தற்போது டியூப் படகுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆத்திர அவசரத்திற்கு இந்தப் படகை காற்றையடித்து இயக்கத் தொடங்கி விடலாம். குழைந்தைகளை அமர வைத்து இழுத்தாவது சென்றுவிடலாம்.
கடலூரில் கனமழை... பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி!

க.பூபாலன் எஸ்.தேவராஜன்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் கடும் அவதியுடன் வீட்டுக்கு திரும்பினர். குறித்த நேரத்தில் பிள்ளைகள் வீடு திரும்பாததால் பெற்றோர்களும் கவலையடைந்தனர்.



வடகிழக்கு பருவ மழையானது, கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக விட்டுவிட்டு பெய்துகொண்டிருக்கிறது. கடலூர், சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி என பல பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை கொட்டிதீர்த்தது. இருந்தபோதிலும், காலையில் மழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனால் மாவட்ட நிர்வாகமானது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள், காலையில் நிலவிய தட்வெப்ப சூழ்நிலையால் மழையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக குடை அல்லது ரெயின்கோட் போன்றவை கையில் எதுவும் எடுத்துச் செல்லவில்லை.




ஆனால், மதியம் 2 மணிக்குமேல் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டே வாகனத்தை ஓட்டிச் சென்றனர். பள்ளி விட்டதும் மாணவ-மாணவிகள் கடும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனர். இதனால் சைக்கிள், பேருந்து மற்றும் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. சென்னையில் மழையில் அறுந்துகிடந்த மின்கம்பியால் இரண்டு சிறுமிகள் இறந்துபோன சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிதுடித்தனர். பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டுக்கு வந்த பிறகே அவர்கள் நிம்மதி மூச்சுவிட்டனர்.

NEWS TODAY 03.07.2026