Friday, November 10, 2017


பி.இ., மாணவர்கள் தேர்வு எழுத சலுகை


சென்னை: அண்ணா பல்கலை கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேரும் மாணவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற
வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை கல்லுாரிகளில், 2000க்கு மேல் படிப்பில் சேர்ந்தவர்கள், 2018 மற்றும், 2019ல் தேர்வுகள் எழுதலாம். 
கூடுதல் விபரங்களை, http://coe1.annauniv.edu/, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்



சென்னை: தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில், மூன்று நாட்களுக்கு, நேரம் மாற்றி இயக்கப்படுகிறது.
● தாம்பரத்தில் இருந்து, செங்கோட்டைக்கு, காலை, 7:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், நாளை முதல், 13 வரை, காலை, 8:30 மணிக்கு இயக்கப்படும்
● செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில், நாளை, 12, 14ல், காலை, 7:15 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை மண்டல கால பூஜை ஆயத்தம் : ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு

சபரிமலை: சபரிமலையில் மண்டல காலம் நவ. 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக 4.50லட்சம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

பத்தணந்திட்டை மாவட்ட கலெக்டர் கிரிஜா கூறியதாவது: மண்டல கால சீசன் தொடங்குவதற்கு முன்பாக மாதா அமிர்தானந்தமயி மடத்தின் ஒத்துழைப்புடன் 11, 12 தேதிகளில் சன்னிதானம் மற்றும் பம்பையில் துப்புரவு பணி நடைபெறும். 500 பேர் சன்னிதானத்திலும், 600 பேர் பம்பையிலும் பணியில் ஈடுபடுவர்.நவ.,15 முதல் ஜன., 20 வரை சன்னிதானத்திலும், பம்பை
யிலும் துப்புரவு பணிக்கான தமிழக தொழிலாளர்கள் 14-ம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாலிதீன் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால், கண்ணமலை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் வாகனங்கள் சோதனை செய்து பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து துணிப்பை வழங்கப்படும். பாதுகாப்பான மலை பயணத்துக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை 15 இடங்களில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும். பெருவழிப்பாதையில் கரிமலை
யிலும் முதலுதவி சிகிச்சை மையம் தொடங்கப்படும். ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கு அதிக விலை வசூலிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இலவச தொலை பேசி அழைப்பு வசதி ஏற்படுத்தப்படும். பேரழிவு நிவாரண படையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். பம்பையில் நதியில் குளிக்கும் போது விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட முன்னதாகவே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மண்டல மகரவிளக்கு காலத்தில் கேரள போலீசின் விரைவு தரிசனம் வரிசைக்கு ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு இந்த முறையில் 16 லட்சம் பேர் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நபருக்காக ஓட்டுச்சாவடி

ஒரே ஒரு நபருக்காக ஓட்டுச்சாவடி
ஆமதாபாத்: குஜராத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும், ஒரே ஒரு நபருக்காக, ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டிச., 9, 14ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 
அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி அமைக்கும் பணிகள் நடக்கும் நிலையில், அடர்ந்த கிர் வனப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்காக, ஓட்டுச்சாவடியை, மாநில தேர்தல் கமிஷன் அமைக்கிறது. 

இது குறித்து, மாநில தேர்தல் கமிஷனின் ஓட்டுச்சாவடி அதிகாரி, சிமன்பாய் ருபாலா கூறியதாவது: சோம்நாத் மாவட்டத்தில், அடர்ந்த கிர் சரணாலயத்தின் மத்தியில், பானேஜ் கிராமம் உள்ளது. இங்கு, வரலாற்று சிறப்புமிக்க, பானேஷ்வர் மஹாதேவ் கோவிலில், பாரத்தாஸ் குரு தர்ஷன் தாஸ் என்பவர், பல ஆண்டுகளாக பூசாரியாக உள்ளார்.
மக்கள் வசிக்க அனுமதி இல்லாத, அடர்ந்த வனப்பகுதியில், பூசாரி மட்டும் தனியாக, கோவிலிலேயே தங்கி உள்ளார். இவருக்காக, ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. மற்ற ஓட்டுச்சாவடிகளை போல, இந்த சாவடியிலும், தேர்தல் அதிகாரி, ஓர் அலுவலக உதவியாளர், இரண்டு போலீசார், ஒரு மத்திய ரிசர்வ் படை வீரர் ஆகியோர், தேர்தல் பணியில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ரெய்டு பற்றி ஒன்னுமே தெரியாது' : சீனிவாசன் பேட்டி


திண்டுக்கல்: ' ஜெயா 'டிவி', மற்றும் தினகரன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடப்பது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது' எனக் கூறிய அமைச்சர் சீனிவாசன் பேட்டியால் சிரிப்பலை எழுந்தது.

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா வரும் டிச.9ல் நடக்கிறது. இதற்கான கால்கோள் விழா அங்கு விலாஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லுார் ராஜூ, தங்கமணி, காமராஜ், உதயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: பாரத பிரதமர்... மன்னிக்கவும் 'பாரத ரத்னா' எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழா 22வது மாவட்டமாக திண்டுக்கல்லில் டிச.,9ல் நடக்க உள்ளது. எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிக்கு அச்சாரம் போட்டது, திண்டுக்கல் என்பதால் வெகு சிறப்பாக நடத்த உள்ளோம், என்றார்.
உடனே நிருபர்களை பார்த்து, ''அவ்வளவுதான் எல்லோரும் சாப்பிட்டு போங்கள்'' என்றார். 
நிருபர்கள், ''சசிகலா அணியின் தினகரன் வீட்டிலும், ஜெயா டிவி., அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துகிறார்களே,'' என கேடடனர். 
அதற்கு அவர், ''நான் இப்போதுதான் துாங்கி எழுந்தேன். எனக்கு ஒன்னுமே தெரியாது,'' எனக் கூறி நழுவினார்

துணி பையுடன் வரும் பக்தர்களுக்கு பரிசு!


துணி பையுடன் வரும் பக்தர்களுக்கு பரிசு!
வேலுார்: தி.மலை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் துணிப்பை, சணல் பை எடுத்து வந்தால், அவர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

திருவண்ணாமலையில், டிச., 2ல் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. 
இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள், பூஜை பொருட்கள் மற்றும் திண்பண்டங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கிரிவலப்பாதை மற்றும் பிற இடங்களில் குப்பையாக வீசப்படுகிறது. 

திட்டம்:

இதனால், பல இடங்கள் குப்பையாக காட்சியளிப்பதுடன், சுற்றுச் சூழல் மாசுபடவும் காரணமாக உள்ளது.இதற்கு மாற்றாக துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பிற பைகளை பயன்படுத்த வலியுறுத்தி, தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து தங்கம், வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தி.மலையில் மூன்று இடங்களில் அமைக்கப்படும், சிறப்பு பிளாஸ்டிக் தவிர்ப்பு மையங்களில், பக்தர்கள் தாங்கள் எடுத்து வரும் துணிப்பை, சணல் பைகளை காண்பித்து, அதில் அழியாத மையால், 1 என குறியிட்ட பின், வரிசை எண்ணுடன் கூடிய சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மணி நேரத்துக்கும், கணினி குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு, 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு, எட்டு மணி நேரத்துக்கும் ஒரு சிறப்பு அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.
அறிவிப்பு:

தேர்வு செய்யப்பட்ட வரிசை எண், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் காவல் துறை ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். தி.மலை பஸ் நிலையத்திலுள்ள நகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில், அதிர்ஷ்ட சீட்டை ஒப்படைத்து பரிசு பெற்றுக்கொள்ளலாம்.டிச., 2ம் தேதி காலை, 6:00 மணி முதல், 3ம் தேதி காலை 6:00 மணி வரை, தொடர்ச்சியாக, 24 மணி நேரமும் அதிர்ஷ்ட சீட்டுகள் வழங்கப்படும். தலா, 10 கிராம் எடை உள்ள, 24 வெள்ளி நாணயங்கள், தலா 2 கிராம் எடை உள்ள, மூன்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும்.

பக்தர்கள், சுற்றுச் சூழலுக்கு உகந்த துணிப்பை, சணல் பையுடன் வந்து, பரிசு திட்டத்தில் பங்
கேற்பதோடு, தி.மலையின் சுற்றுச்சூழலை தொடர்ந்து பாதுகாக்க முழுமையான ஆதரவு தருமாறும், மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துஉள்ளது.

ஜெயா டிவியில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் : ஐ.டி., அதிகாரிகள்


 ஜெயா,டிவியில்,முக்கிய,ஆவணங்கள்,பறிமுதல், ஐ.டி., அதிகாரிகள்
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
ஜெயா டி.வி., ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
சென்னை: ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 
சென்னை, தஞ்சாவூர் ,திருச்சி உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று நவ.,9 காலை 6 மணியில் இருந்து 14 மணிநேரமாக சோதனை நடந்து வருகிறது. சோதனையில் ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனை குறித்து ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில் ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெறுவருகிறது, தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி அருகே தினகரன் ஆதரவாளர் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்துள்ளது. 
60 போலி நிறுவனங்கள்

இன்று தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஐ.டி., அதிகாரிகள் நடத்திவரும் ரெய்டில் இது வரை 60 போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விடிய விடிய ரெய்டு

ஜெயா டி.வி., நிர்வாக இயக்குநரும், இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் நடந்து வரும் சோதனை இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாடு எஸ்டேட்டில் நாளையும் சோதனை

கோடநாடு எஸ்டேட்டில் இன்று சோதனை நடத்திய அதிகாரிகள், தற்காலிகமாக எஸ்டேட்டிற்கு சீல் வைத்துள்ளனர். மேலும் இன்றும் சோதனை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

NEWS TODAY 03.07.2026