Friday, November 10, 2017


சபரிமலை மண்டல கால பூஜை ஆயத்தம் : ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு

சபரிமலை: சபரிமலையில் மண்டல காலம் நவ. 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக 4.50லட்சம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

பத்தணந்திட்டை மாவட்ட கலெக்டர் கிரிஜா கூறியதாவது: மண்டல கால சீசன் தொடங்குவதற்கு முன்பாக மாதா அமிர்தானந்தமயி மடத்தின் ஒத்துழைப்புடன் 11, 12 தேதிகளில் சன்னிதானம் மற்றும் பம்பையில் துப்புரவு பணி நடைபெறும். 500 பேர் சன்னிதானத்திலும், 600 பேர் பம்பையிலும் பணியில் ஈடுபடுவர்.நவ.,15 முதல் ஜன., 20 வரை சன்னிதானத்திலும், பம்பை
யிலும் துப்புரவு பணிக்கான தமிழக தொழிலாளர்கள் 14-ம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாலிதீன் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால், கண்ணமலை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் வாகனங்கள் சோதனை செய்து பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து துணிப்பை வழங்கப்படும். பாதுகாப்பான மலை பயணத்துக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை 15 இடங்களில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும். பெருவழிப்பாதையில் கரிமலை
யிலும் முதலுதவி சிகிச்சை மையம் தொடங்கப்படும். ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கு அதிக விலை வசூலிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இலவச தொலை பேசி அழைப்பு வசதி ஏற்படுத்தப்படும். பேரழிவு நிவாரண படையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். பம்பையில் நதியில் குளிக்கும் போது விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட முன்னதாகவே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மண்டல மகரவிளக்கு காலத்தில் கேரள போலீசின் விரைவு தரிசனம் வரிசைக்கு ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு இந்த முறையில் 16 லட்சம் பேர் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...