Monday, November 27, 2017

ஆன்லைனில் அறைகள் முன்பதிவு -குளறுபடி களைய நடவடிக்கை : தேவசம்போர்டு தலைவர் தகவல்

Added : நவ 27, 2017 01:44

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் தங்குவற்கான ஆன்லைன் முன்பதிவில் உள்ள குளறுபடிகள் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு 560 அறைகள் உள்ளன. இதில் 83 அறைகள் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது. 372 அறைகள் சன்னிதானத்தில் உள்ள அக்காமடேஷன் சென்டர் வழியாக நேரடியாக
பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 105 அறைகள் ஆன்லைன் முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் முன்பதிவு பொறுப்பு கெல்ட்ரான் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தவறுகள் முன்பதிவில் ஏற்பட்டு வருகிறது. ஒரே அறை இரண்டு பேருக்கு முன்பதிவு செய்ய முடிகிறது. இதை சரி செய்ய கேட்டும் அந்த நிறுவனம் சரி செய்யவில்லை. இது தொடர்பாக முதல்வரிடம் தேவசம்போர்டு புகார் செய்துள்ளது. அவரது ஆலோசனைப்படி, வரும் 28-ம் தேதி கெல்ட்ரான் அதிகாரிகளுடன், தேவசம்போர்டு அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.கடந்த ஆண்டு மண்டலபூஜைக்காக நடை திறந்த 10 நாட்களில் அறைகளின் வாடகை வருமானம் 73.86 லட்சமாக இருந்தது.ஆனால் இந்த ஆண்டு இது 86.02 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அறை எண்ணிக்கை அதிகரிக்காமல், வாடகை அதிகரிக்காமல் இந்த வருமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் குளறு படி விரைவில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...