Tuesday, November 28, 2017


அரசு ஊழியர்கள் விபரம் : புதுச்சேரி கவர்னர் உத்தரவு

Added : நவ 27, 2017 23:13

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, அரசு ஊழியர் பற்றிய விபரங்களை முழுமையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, கவர்னர், கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான, பி.டி.ஆர்.சி.,யில் பணியாற்றும், 37 டிரைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளுக்கு சர்வீஸ் 'பிளேஸ்மென்ட்' அடிப்படையில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, கேள்வி எழுப்பியுள்ள கவர்னர் கிரண்பேடி, அரசு ஊழியர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என, புதிய தலைமை செயலர் அஸ்வனி குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் பற்றிய விபரங்களை, கணினியில் பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து, சமூக வலைதளத்தில் கிரண்பேடி கூறியுள்ளதாவது:


அரசு ஊழியர்களின் வேலைகள் பற்றிய பதிவுகள், கணினி மயமாக்குவதன் மூலம், பதவி உயர்வு மற்றும் பிற தொடர்புடைய பிரச்னைகளும் அதில் இருக்கும். எதற்காக தேர்வு செய்யப்பட்டனர், எங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விபரமும் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், வெளிப்படைத் தன்மை இருக்கும். இதை, அனைத்து துறை செயலர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைமை செயலர் மற்றும் செயலர்களுடன் கூட்டத்தில் இதுவும் விவாதிக்கப்பட்டுள்ளது. இப்பணியை வேகப்படுத்தி, அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...