Sunday, November 26, 2017

ரூ.312-க்கு விமானப் பயணம்: கோ ஏர் அறிவிப்பு

Published : 24 Nov 2017 18:31 IST

பிடிஐ
 


கோ ஏர் விமான நிறுவனம் ரூ.312-க்கு சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட 7 நகரங்களுக்கு ஒரு வழி விமானப் பயணத்தை அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதியிலிருந்து 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி வரை பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு கோ ஏர் நிறுவனம் இச்சலுகையை வழங்கியுள்ளது.


விமானப் பயணத்திற்கான துவக்க டிக்கெட்டின் விலை ரூ.312. இன்று (நவம்பர் 24) முதல் இந்த மாதம் 29-ம் தேதி வரை இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.

குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே சலுகை விலையில் வழங்கப்படும் என்று கோ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் கோ ஏர் தெரிவித்துள்ளது.

இந்த சலுகைக் கட்டணத்தில் வரிகள் எதுவும் அடங்காது. இந்த சலுகையில் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொச்சி, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களுக்கு மட்டுமே பயணிக்க முடியும்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...