Wednesday, November 29, 2017

தேஜாஸ் போர் விமானத்தை புகழ்ந்த சிங்கப்பூர் அமைச்சர்

Added : நவ 29, 2017 07:09 |

  கோல்கட்டா: ‛தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தது காரில் பயணிப்பது போல இலகுவாக இருந்தது' என சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென் தெரிவித்தார்.

இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை டில்லியில் இன்று நடைபெற இருக்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென், மேற்கு வங்கத்தில் உள்ள கலைகொண்டா விமானப்படை தளத்துக்கு சென்று நேற்று பார்வையிட்டார். பின் இந்திய தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவரது பயணம் நீடித்தது.

பின் ‛தேஜாஸ்' குறித்து அவர் தெரிவிக்கையில், ‛தேஜாஸ் விமானத்தில் பயணிப்பது போர் விமானத்தில் பயணிப்பது போல் தெரியவில்லை. காரில் பயணிப்பது போல் இலகுவாக உள்ளது. இதனை சிங்கப்பூருக்காக வாங்க விரும்புகிறோம்' என்றார்.



No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024