Monday, November 27, 2017

சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை: அமைச்சர் தொடங்கி வைப்பு

By DIN  |   Published on : 26th November 2017 11:17 PM  | 
aavin

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனையைத் தொடங்கி வைத்த பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. உடன் பால்வளத் துறைச் செயலர் கே.கோபால், ஆ
சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனையை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், சிங்கப்பூரில் ஆவின் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிகாரிகள் சிங்கப்பூர் சென்று, ஆவின் பால் விற்பனையைத் தொடங்கி வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:

ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இதில் 22 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. 

மீதமிருக்கும் பால், பவுடராக மாற்றப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கேரளத்துக்கு மட்டும் தினமும் 1 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் தரமாக இருப்பதால் பிற மாநில மக்களும் இதைப் பருகி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இப்போது சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 

அடுத்து மலேசியா, துபாய், கொழும்பு போன்ற நாடுகளிலும் ஆவின் பாலை விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்துறை அரசு முதன்மை செயலாளர் கே.கோபால், ஆவின் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ், தமிழக பால் உற்பத்தியாளர்கள் 

கூட்டுறவு இணையத் தலைவர் அ.மில்லர், சேலம் ஆவின் தலைவர் ஆர்.சின்னசாமி, சிங்கப்பூர் விமல்ஜோதி ஏற்றுமதி நிறுவனத் தலைவர் டி.என்.குமார் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024