Monday, November 27, 2017

'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது'

Added : நவ 27, 2017 01:21 | கருத்துகள் (5)



  புதுடில்லி : 'மனைவியை தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என, கணவனை கட்டாயப்படுத்த முடியாது' என, கூறியுள்ள உச்ச நீதிமன்றம், விமான பைலட் ஒருவரை, அவரது மனைவியின் செலவுக்காக, 10 லட்சம் ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை:

விவாகரத்து வழக்கில், பைலட் ஒருவருக்கு ஜாமினை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழும் பைலட் தொழிலில் ஈடுபட்டுள்ள கணவர், துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, தான் பணியாற்றும் ஊர்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜாமின் பெற்றுள்ளார். ஆனால், அதன்படி அவர் நடந்து கொள்ளவில்லை என்பதால், அவரது ஜாமினை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. மனைவியை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என கணவனைக் கட்டாயப்படுத்த முடியாது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட  மற்றும்
மனைவி குழந்தைக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும்.

உத்தரவு:

அதனால், விசாரணை நீதிமன்றத்தில், கணவன், 10 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். அதை அவரது மனைவி தன் செலவுக்காக பயன்படுத்தலாம். மதுரைக் கிளை உத்தர விட்டதுபோல், இந்த வழக்கை, கீழ் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும். அப்போது, தற்போது, வழங்க உள்ள, 10 லட்சம் ரூபாயை அதில் ஈடு செய்யலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...