Monday, November 27, 2017

கட்டடங்களுக்கு சிறப்பு சலுகை   விதிகளை திருத்துகிறது அரசு

நகர், ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., எல்லைக்குட்பட்ட பகுதிகளில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் அளவை விட, சிறப்பு சலுகை வழங்கும் வகையில், விதிகளில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.




தமிழகத்தில் நகரமைப்பு சட்டப்படி, நிலத்தின் மொத்த பரப்பளவில், ஒன்றரை மடங்கு வரை, கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படும்.

கட்டணம்

இதில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும மான, சி.எம்.டி.ஏ.,வில், பிரீமியம், எப்.எஸ்.ஐ.,
எனப்படும் கட்டண அடிப்படையிலான கூடுதல் தளபரப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டது. இதன்படி, வளர்ச்சி விதிகளின்படிஅனுமதிக் கப்படும் அளவில், 50 சதவீதத்தை கூடுதலாக பெற்று, கட்டடங்கள் கட்டலாம்.ஒரு குறிப்பிட்ட நிலத்தில், விதிமுறைப்படி, ஆறு வீடுகள் கட்டலாம் என்றால், அங்கு, பிரீமியம், எப்.எஸ்.ஐ., பயன் படுத்தி, ஒன்பது வீடுகள் கட்டலாம்.

இந்த சலுகையை, டி.டி.சி.பி., பகுதிகளிலும் அறிமுக படுத்த, அரசு ஆலோசித்து வருகிறது.இதுகுறித்து, நகர் ஊரமைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:டி.டி.சி.பி.,யில், அனைத்து திட்ட பகுதி களிலும், பிரீமியம், எப்.எஸ்.ஐ., சலுகை வழங்கும் வகையில், வளர்ச்சி விதிகளில், திருத்தம் செய்யப் பட உள்ளது.இதற்கான வரைவு தயாரிக்கும் பணிகள், இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஆலோசனை

மேலும், புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் இடங்களில், நிலம் கையகப்படுத்த பயன்படுத்தப்படும் வளர்ச்சி உரிமை மாற்றமான, டி.டி.ஆர்., திட்டத்திலும், இந்த நடைமுறையை

Advertisement செயல்படுத்த ஆலோசித்து வருகிறோம். விரைவில், இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் இந்த சலுகையால், டி.டி.சி.பி., பகுதி களில் அதிக உயரம் உள்ள குடியிருப்பு திட்டங் கள் கட்ட, வாய்ப்பு ஏற்படும். மேலும், இதனால், வளரும் நகரங்களில் வீடுகள் விலை உயர்வது தடுக்கப்படும்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...