Tuesday, November 28, 2017

கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து

Added : நவ 27, 2017 20:50 |

  லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள உராய் சிறை வளாகத்தில் அழகுக்காக வளர்க்கப்படுவதற்காக ரூ. 5 லட்சம் செலவில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அந்த செடிகள் மற்றும் தாவரங்களை, அப்பகுதியில் உலவிக்கொண்டிருந்த கழுதைகள் தின்று நாசம் செய்துவிட்டன. இதனையடுத்து, கட்நத 24ம் தேதி, ஜலாவுன் போலீசார், அந்த கழுதைகளை உராய் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, தனது கழுதைகள் மாயமானதை அறிந்த கமலேஷ் என்பவர், தமது கழுதைகள், சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து உராய் சிறை நிர்வாகத்திடம்,. கழுதைகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். அதற்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சி உள்ளூர் பிரமுகர் சக்தி காஹோயின் உதவியுடன் சிறையில் இருந்த கழுதைகளை, கமலேஷ் மீட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024