Sunday, November 26, 2017

"எதற்கும் அசராத குணம் கூடவே பிறந்தது..!"- தினகரன் கூல் பேட்டி
 எம்.புண்ணியமூர்த்தி

கோவையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரனிடம்  இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு போய்விட்டதே இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ?  என்ற கேள்வி முதலில் தொடுக்கப்பட்டது  “ இரட்டை இலை இப்போது துரோகிகள் கையில் இருக்கிறது. அது அவர்கள் கையில் இருப்பதால் அதற்கு இப்போது உயிர் இல்லை செத்துப்போய்விட்டது.  சின்னம் அவர்களுக்கு எப்படி கொடுக்கப்பட்டது, எதனால் கொடுக்கப்பட்டது என்பது மக்களுக்குத் தெரியும்.  தேர்தல் ஆணையம் சொல்வதற்கு முன்பே,  இவர்களுக்கு எப்படி தெரிந்தது? அதிலிருந்தே  என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லையா?  நாங்கள் சட்டப்படி போராடுவோம்.  அப்படியும் கிடைக்கவில்லையென்றால் சுயேட்சையாக தொப்பி சின்னத்திலேயே போட்டியிடுவோம். 


சின்னம் என்பது இரண்டாம்பட்சம்தான் வேட்பாளர்தான் முக்கியம். சின்னத்தை மட்டும் வைத்து ஜெயித்ததெல்லாம் அந்தக் காலம்.  இப்போது,  அப்படி இல்லை. மக்கள் ஏற்றுக்கொண்ட வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது, ஆர்.கே.நகரில் நான் தொப்பி சின்னத்தில்தான் நின்றேன். அப்போது, கருத்துக்கணிப்பு வெளியிட்டார்களே, அதில், எனக்குதானே வெற்றி வாய்ப்பு  அதிகம் என்று வந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தொப்பி சின்னத்தில் நின்று ஜெயிப்பேன்.  என்று தினகரன் சொல்லும்போது அவர் உதட்டில் சிரிப்பு இழைகிறது.’

இப்போது சின்னம் முக்கியமில்லை என்று சொல்லும் நீங்கள் இரட்டை இலைக்காக ஏன் இவ்வளவுதூரம் போராடினீர்கள்? சின்னம் கிடைக்காத விரக்தியில் இப்படி சொல்கிறீர்களா? என்ற கேள்விக்கு ‘சின்னம்ங்கிறது  எங்களோட உரிமை. அதுக்காக தூக்கி போட்டுவிட முடியாதுல்ல. அதுவும் எதிரிகள் கையில் அல்லவா சிக்கியிருக்கிறது. அதற்காகதான் போராடினோம். இது தற்காலிக தீர்ப்புதான். இதுவே கடைசியான முடிவு கிடையாது. அடுத்ததாக் சிங்கிள் ஜட்ஜ் இருக்கார், பெஞ்ச் இருக்கிறது அதற்கும்  மேல் உச்ச நீதிமன்றம் இருக்கிறது. மூன்று கட்டமாக இரட்டை இலையை பெற முயற்சி செய்யலாம். செய்வோம் அந்த முயற்சி  தனியாக நடந்து கொண்டிருக்கும். அதற்காக அந்த சின்னம் இருந்தால்தான் வெற்றிபெற முடியும் என்பது இல்லை. நடு இரவில் தொப்பியை எடுத்துக்கொண்டு போய் தமிழ்நாடு முழுவது நாங்கள் பாப்புலர் ஆகலையா? நான் திரும்பம் சொல்கிறேன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். உதய சூரியனாக இருக்கட்டும், இரட்டை இலையாக இருக்கட்டும் அந்த சின்னத்தில் போட்டியிட்டவர்கள் பலபேர் தோற்றிருக்கிறார்கள். ஆக சின்னம் மாத்திரம் இம்ப்பார்ட்டண்ட்  ரோல் கிடையாது. அதுவும், புரட்சி தலைவரும், அம்மாவும் இல்லாத நேரத்திலே  சின்னம் யாரிடம் மாட்டியிருக்கிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அதுவும் குறிப்பா ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்ற வாதத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியுமா? மக்களிடம் என்ன சொல்லி ஓட்டு கேட்பீர்கள்?

அது தேர்தல் சமயத்தில் பாருங்கள் தெரியும். இப்போதே சொல்ல முடியாதே.

உங்கள் கொள்கை என்ன , குறிக்கோள் என்ன?

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதுதான் எங்கள் குறிக்கோள். மக்களின் எண்ணமும் அதுதான் மற்றதை தேர்தல் சமயத்தில் சொல்வோம்.

எதற்கும் அசரமாட்டேன் என்கிறீர்களே, எங்கிருந்து வந்தது இந்த தைரியம் ?

அது என் கூடவே பிறந்தது. பிறந்ததிலிருந்தே இருக்கிறது.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...