Thursday, November 30, 2017


கவர்னரின் கூடுதல் தலைமை செயலர் பதவியேற்பு


Added : நவ 30, 2017 00:32




சென்னை: கவர்னரின், கூடுதல் தலைமை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபால், பொறுப்பேற்றார். ராஜகோபால், 1984ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். இயந்திரவியலில் பொறியியல் பட்டம், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில், சப் - கலெக்டராக பணியை துவக்கினார். விருதுநகர், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 1994 முதல், 1997 வரை, கலெக்டராக பணியாற்றி உள்ளார். மாநில அரசில், முதன்மை செயலராக, பல்வேறு துறைகளில், 2005 முதல், 2013 வரை பணியாற்றினார். மத்திய அரசிலும், சுற்றுச்சூழல் மற்றம் வனம்; விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்; விவசாயம் மற்றும் உள்துறை ஆகியவற்றில், உயர் பதவிகளில் பணியாற்றி உள்ளார். தமிழக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்படும் முன், மத்திய அரசின் உள்துறையில், கூடுதல் செயலராக பணியாற்றி வந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024