Friday, January 5, 2018

சபரிமலை செல்லும் மகளிருக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்

Added : ஜன 05, 2018 02:07

திருவனந்தபுரம்: 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள், தங்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும்' என, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு உத்தரவிட்டுள்ளது.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 


இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிரம்மச்சாரியான அய்யப்பனை தரிசிக்க, 10 - 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. 10 வயதுக்கு குறைந்த சிறுமியர் மற்றும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
சமீபகாலமாக, சபரிமலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10 - 50 வயதுக்குட்பட்ட பல பெண்கள், போலீஸ் சோதனையில், பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.


இதையடுத்து, ''சபரிமலைக்கு வரும் சிறுமியர் மற்றும் பெண்கள், கோவிலுக்குள் செல்வதற்கு முன் நடக்கும் சோதனையின் போது, தங்கள் பிறப்பு சான்றிதழை காட்ட வேண்டும். ஆதார் அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என, தேவஸ்வம் போர்டு தலைவர், பத்மகுமார் கூறினார்.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். 
 
சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 11 முறையும், சென்னை பல்லவன் இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் 10 முறையும் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுகள் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந் தது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.35 காரணி மடங்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தொழிற்சங்கத்தினர் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதை வலியுறுத்தி கடந்த மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சூழ்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி காணப்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாலும், பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை தொழிற்சங்க உறுப்பினர்களிடம் அவ்வப்போது கேட்டபடி இருந்தனர்.

மாலை 6 மணியை கடந்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சில ஊழியர்கள் விரக்தி அடைந்தனர். பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்து விடுமோ? என்று கவலையும் அடைந்தனர்.

இந்தநிலையில் அமைச்சருடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால் ஆவேசமடைந்த பெரும்பாலான டிரைவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர்.

கோயம்பேடு, பாரிமுனை, வடபழனி, எண்ணூர் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும், பஸ்கள் இயக்கப்படாமல் அணிவகுத்து நின்றன. பஸ்சில் ஏறிய பயணிகளிடம், பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் இயங்குவது நிறுத்தப்பட்டது.

அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

எனவே பேச்சுவார்த்தையில் இருந்து தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் வெளியேறி அதிகாரபூர்வ ‘ஸ்டிரைக்’ அறிவிப்பை நேற்று இரவு 8 மணியளவில் வெளியிட்டனர். இதையடுத்து இயக்கப்பட்ட ஒரு சில பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பஸ்சில் இருந்த பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் செய்வது அறியாது திகைத்தனர். பஸ் டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிக்கெட் கட்டணத்தையும் திருப்பி கேட்டனர். ஆனால் சில கண்டக்டர்கள் தர மறுத்துவிட்டனர்.

வெளியூர் செல்லும் பெரும்பாலான பஸ்களும் இரவில் இருந்து நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்க வேண்டிய நிலை பலருக்கு ஏற்பட்டது. அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்சில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டது.

பஸ் டிரைவர்கள் போராட்டத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பஸ் நிலையங்கள், போக்குவரத்து பணிமனைகள் பல்லவன் இல்லம் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய முதல்வராக ஜெயந்தி பொறுப்பு ஏற்பு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில்
புதிய முதல்வராக ஜெயந்தி பொறுப்பு ஏற்பு
 
ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 
 
சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (டீன்) ஆர்.நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பொது மருத்துவமனை புதிய ‘டீன்’ ஆக நேற்று பொறுப்பேற்ற டாக்டர் ஆர்.ஜெயந்தி, உடனடியாக தனது பணியை தொடங்கினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது டாக்டர் ஆர்.ஜெயந்தி கூறுகையில், “நோயாளிகள் நலனுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள மருத்துவ வசதிகளை நோயாளிகள் எளிதில் கிடைக்கவும் பாடுபடுவேன்”, என்றார்.

டாக்டர் ஜெயந்தி 1986-ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Thursday, January 4, 2018

CBI books former AMU VC for alleged irregularities in appointment

The CBI action has come nearly 10 years after Ahmad had resigned from the position in 2007. He was the Vice Chancellor between 2002 and 2007.

The CBI has booked former Vice Chancellor of Aligarh Muslim University Naseem Ahmad in connection with alleged irregularities and cheating in the appointment of an official in the university in 2005.

The CBI action has come nearly 10 years after Ahmad had resigned from the position in 2007. He was the Vice Chancellor between 2002 and 2007.

The case pertains to the appointment of Shakaib Arsalan as Assistant Finance Officer in the AMU in 2005 in alleged violation of provisions of the AMU Act and rules, officials said.

The CBI has registered a case of criminal conspiracy, cheating and provisions of Prevention of Corruption Act against Arsalan (now Joint Finance Officer), Beg now Finance Officer and Ahmad, they said.

It is alleged that the vacancy for the post of Assistant Finance Officer and Deputy Finance Officer were advertised by the AMU on January 1, 2004 for which 22 candidates had applied.

Among the 22 candidates, nine were found to be eligible for the post of the AFO which did not include Arsalan, the preliminary enquiry of the CBI into the allegations has found.

Arsalan submitted a representation that his degree of Chartered Accountant is not being considered equivalent to a post-graduate degree in the shortlisting process whereas an AMU notification recognises these degrees as equivalent, it alleged.

He requested for his consideration for the interview held on February 3, 2005, it said.

The then Deputy Finance Officer Yasmin Jalal Beg allegedly in violation of laid down procedure recommended the candidature of Arsalan for interview on the grounds that CA degree is the optimum qualification for any finance person and if a CA has applied for the position of the AFO, he will be an asset for the department.

It has surfaced during the CBI PE that Beg had put the note even though the file was not marked to her, the CBI alleged.

The note was forwarded through registrar and approved by Vice Chancellor Naseem Ahmad, it alleged.

The CBI PE also found that there was one more candidate with a CA degree with 60 per cent marks and several other candidates who had scored over 55 per cent marks in PG examination as per advertised eligibility conditions of the University, the FIR said.

Arsalan in his representation had concealed that he scored less that 55 per cent marks in CA examination and misled the officials by enclosing his part one marksheet which showed 55 per cent marks, it alleged.

Beg concealed that there was one more candidate with a CA degree and recommended Arsalan’s candidature as part of the “criminal conspiracy”, it alleged.

Based on the interview Arsalan’s was one of the three candidates recommended for the position of AFO which was approved by the Vice Chancellor on behalf of the Executive Council.

The CBI found that the Vice Chancellor can use special powers on behalf of the Executive Council of the University but such decisions mandatorily should be reported to the Council which was not done in the meeting held on October 4, 2005, the FIR alleged.

“It has thus revealed that the then VC Naseem Ahmad though not competent to relax the qualification deviated from the advertised qualification and approved the candidature of Shakaib Arsalan to be called for interview for the post of Assistant Finance Officer in AMU. Further the relaxation and deviation in the matter of appointment was not reported to the Executive Council and neither ratified from them,” the FIR alleged.

Fodder scam case: Lalu Yadav tells court ‘it’s cold in jail’, judge says then ‘play tabla’

Prasad, known for his funny liners, said in the court, "It is very cold here (in jail)".

Even in the midst of proceedings to decide the quantum of sentence in a fodder scam involving RJD chief Lalu Prasad, the leader did not miss to crack a funny when he told the judge that “it was very cold in jail” to which the judge replied play ‘tabla’.

A special court earlier deferred the sentencing of Prasad in the fodder scam case till tomorrow when it is likely to decide whether to pronounce the quantum of punishment over video conference or in court.

Prasad, known for his funny liners, said in the court, “It is very cold here (in jail)”.

CBI Special Court Judge Shiv Pal Singh, hearing the csae, was quick to reply, “Then, play tabla (musical instrument)”.

During the course of proceedings in the packed court room, the judge told Prasad that he had read the latter’s record and had vigilance remained tight, such a thing (fodder scam) would not have happened.

The judge further commented that the RJD chief did not act promptly on which Prasad in his characteristic style said “I am also an advocate.”

Prasad is an LLB from Patna University.

The judge also informed Prasad about the contempt notices to RJD leader Raghuvansh Prasad Singh, Prasad’s son and former Bihar deputy chief minister Tejaswi Yadav, Congress leader Manish Tiwari and RJD leader Shivanand Tiwari.

On this, the RJD chief requested him to drop the notices.

Before being taken away from the court room, Prasad urged the judge to think with a “cool mind”.

When the judge said he could opt for video conferencing for hearing on arguments on the quantum of sentence tomorrow, Prasad requested for personal appearance. The judge said he would decide tomorrow about it.

The fodder scam relates to fraudulent withdrawal of Rs 89.27 lakh from Deoghar treasury 21 years ago.

While the sentencing of Prasad was deferred for tomorrow, the arguments on quantum of sentence of IAS officer Beck Julius, political leader Jagdish Sharma, former treasury officer Krishna Kumar Prasad, fodder transporter/suppliers Gopinath Das and Jyoti Kumar Jha, ended today.

On a plea by three former IAS officers—Beck Julius, Phoolchand Singh and Mahesh Prasad—-the court directed to lodge them in the higher division of Birsa Munda jail where RJD supremo Lalu Prasad Yadav is given.

In all, 16 persons along with Yadav were convicted in the case on December 23 while six others, including former Bihar chief minister Jagannath Mishra, were acquitted in the case.

RBI all set to release new Rs 10 note

New Delhi: The Reserve Bank of India (RBI) is all set to issue new Rs 10 notes in a new avatar.

The revamped 10 rupee notes will be released under the Mahatma Gandhi series and have chocolate brown colour base, media reports have said.

The new note will bear the picture of the Konark Sun Temple.

Reportedly, the RBI has already printed around 1 billion pieces of the new Rs 10 note after getting design approval by the government last week.

Last time the old Rs 10 note got revamp was in 2005.

Following the demonetisation of Rs 1,000 and Rs 500 notes November 2016, the central bank had introduced Rs 2,000 notes and new Rs 500 notes.

In August last year, the RBI also launched the Rs 200 note with an aim to make it easier for the common man to transact in lower denomination currencies. Alongside, the central bank also introduced Rs 50 note with a new look and additional security features.
Prior to the introduction on the new notes, India has currency denominations of Rs 1, 2, 5, 10, 20, 50, 100, 500 and 2,000.

As such, in the lower end of the denomination series, Rs 200 had been the missing link.  The Rs 200 bill bears motif of Sanchi Stupa to depict India’s cultural heritage.

The base colour of the note is bright yellow.

மருத்துவ கவுன்சிலுக்கு மாற்று: மத்திய அரசின் நோக்கம் என்ன?


இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ.) பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பான மசோதாவை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் தாக்கல்செய்திருக்கிறார். நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவர்களும் அரசு மருத்துவர்களும் இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இம்மசோதா அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் பின்னிருக்கும் நோக்கம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் (எம்.சி.ஐ.) 1933-ன்படி, இந்திய மருத்துவ கவுன்சில் 1934-ல் உருவாக்கப்பட்டது.1956-ல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, இது சட்டரீதியான, தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பாக ஆனது. மருத்துவக் கல்விக்கான தரத்தை நிர்ணயித்து, நாடு முழுவதும் சீரான கல்வித் தரத்தைப் பேணுவது; புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவப் படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்குவது போன்றவை இந்திய மருத்துவ கவுன்சிலின் பணிகள்.

இந்தச் சூழலில், இந்திய மருத்துவ கவுன்சில் ஊழல் நிறைந்த அமைப்பாக மாறிவிட்டது என்றும், மருத்துவக் கல்லூரிகளைப் போதிய அளவுக்கு உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மருத்துவக் கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவில்லை என்றும் பல்வேறு காரணங்களைக் கூறி, அதை ஒழிக்க முயல்கிறது மத்திய அரசு. அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்குவது அரசின் திட்டம்.

டாக்டர் ரஞ்சித் ராய் சௌத்ரி தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதால், இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழித்துவிட்டு, மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவருவதாகக் காரணம் சொல்கிறது மத்திய அரசு. உண்மையில், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, உரிய மாற்றங்களைச் செய்யத்தான் டாக்டர் ரஞ்சித் ராய் செளத்ரி குழு பரிந்துரைத்தது; இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழிக்க வேண்டும் என்றல்ல!

யதேச்சாதிகாரத்துக்கு வாய்ப்பு

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகள் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால், இவற்றை நிவர்த்திசெய்வதற்குப் பல்வேறு ஆலோசனைகள் பல்வேறு அமைப்புகளால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை மத்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலில் 120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரும் மருத்துவர்கள். இதில் பெரும்பாலா னோர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் மருத்துவ ஆணையத்தில் மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 5 பேர் மட்டுமே இருப்பார்கள். தலைவர் உட்பட இதர 20 உறுப்பினர்களும் நியமன உறுப்பினர்களே. ஆணையத்தின் தலைவரைத் தவிர, மற்றவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி. அதுமட்டுமல்ல, ஆணையத்தின் தலைவரை நீக்குகின்ற அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கும். எனில், இது யதேச்சாதிகாரத்துக்கும் முறைகேடுகளும் அல்லவா வாய்ப்பளிக்கும்?

மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதாகக் கூறிக்கொண்டு, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வை இந்த ஆணையமே நடத்தும் என்கிறது புதிய மசோதா. இது என்னென்ன விளைவுகளுக்கு வித்திடும் என்பது நமக்குத் தெரியும். இந்த ஆணையத்தில், மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை. அதிகாரமற்ற நிலையில், வெறும் ஆலோசனைக் குழுவில் மட்டுமே மாநிலப் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் இருப்பார்கள். அவர்கள் பதவிக்காலமும் இரண்டு ஆண்டுகள்தான்.

இந்த ஆணையம் தொடர்பான கொள்கைகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும். மாநில அரசுகள் இந்த மருத்துவ ஆணையத்தின் விதிகளை அமல்படுத்தியே தீர வேண்டும் என்றெல்லாம் இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இது மருத்துவ சேவையிலும் மருத்துவக் கல்வியிலும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று ஒலிக்கும் குரல்கள் நியாயமானவை.

இரட்டை நிலைப்பாடு

மருத்துவக் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், திறமையான மருத்துவர்களைப் போதிய அளவு உருவாக்கவுமே இந்த ஆணையம் எனும் வாதமும் ஏற்கத்தக்கதல்ல. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கி, கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். சொல்லப்போனால், இந்தப் பணியை முறையாகச் செய்யவிடாமல், இந்திய மருத்துவ கவுன்சிலைத் தடுத்துவந்ததே மத்திய அரசுதான். போதிய அடிப்படை வசதிகள் இல்லை என இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரிகளுக்கெல்லாம், மத்திய அரசே நேரடியாக அனுமதி வழங்கியுள்ளது. மத்திய - மாநில அரசுகள் போதிய அளவில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதே இதற்குத் தீர்வாகும்.

மருத்துவ நெறிமுறைகள் (Medical Ethics) காணாமல் போனதற்கு, இந்திய மருத்துவ கவுன்சிலைக் குறை சொல்கிறது மத்திய அரசு. ஆனால், மருத்துவ நெறிமுறைகள் மறைந்துவிட்டதற்குக் காரணம் மருத்துவக் கல்வியும், மருத்துவமும் தனியார்மயமானதும், வணிகமயமானதும்தான். அதைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசு, பெருநிறுவனங்களின் கரங்களில் மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் மேலும் ஒப்படைக்கும் வகையில் தேசிய நலக் கொள்கையை (2017)கொண்டுவந்துள்ளது. 

மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்தவே இந்தப் புதிய மருத்துவ ஆணையம் என்கிறது மத்திய அரசு. இதற்கெனத் தனியாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. அதற்குப் போதிய நிதியை அரசு ஒதுக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதியை இந்த அரசு 25% குறைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு லாபம்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியை மருத்துவ ஆணையம் செய்யும் என்றும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் உள்ள 40%-க்கும் குறைவான மருத்துவ இடங்களுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றே இம்மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது. மாநில அரசுகளின் கட்டண நிர்ணயக் குழுக்கள், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 100% இடங்களுக்கும் கட்டணங்களை நிர்ணயித்துவருகின்றன. இந்நிலையில், அதைப் பாதிக்கும் வகையில் இம்மசோதா உள்ளது. இது தனியார் கல்லூரிகளுக்கே சாதகமாகும். தவிர, மருத்துவ ஆணையம் இல்லாமலேயே, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்க முடியும். அதை மத்திய அரசு செய்யாதது ஏன்?

புதிய மசோதாவின்படி, மருத்துவ மாணவர்கள் உள்ளுறை மருத்துவர்களாகப் பயிற்சியை முடித்த பிறகு, தேசிய உரிமத் தேர்வு (National Licentiate Test) எழுத வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றிபெற்றால்தான் மருத்துவராகப் பதிவுசெய்ய முடியும். அந்தத் தேர்வே, முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் இருக்கும் என்கிறது இம்மசோதா.

எல்லாவற்றையும் தாண்டி, ஆயுர்வேதம், யுனானி, யோகா, சித்தா, ஓமியோபதி மருத்துவம் பயின்றவர்களும் நவீன மருத்துவத்தின் மருந்துகளைப் பயன்படுத்தலாம் எனவும், அவர்கள் இணைப்புப் படிப்பு மூலம் நவீன மருத்துவத்தைப் படிக்கலாம் எனவும், அம்மருத்துவத்தில் முதுநிலை மருத்துவம் பயில லாம் எனவும் இம்மசோதா கூறுகிறது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.

மேலும், தனியார் தொழில் நிறுவனங்கள் லாப நோக்கோடு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு உதவும் வகையிலும், வெளிநாட்டு தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களையும் வெளிநாட்டு மருத்துவர்களையும் தங்குதடையின்றி அனுமதிக்கவும் மருத்துவ ஆணையம் வழிவகுக்கும் என்று பரவலாக அச்சம் எழுந்திருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இம்மசோதா அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்விஷயத்தில் உரிய நியாயம் கிடைக்குமா என்று இந்திய மருத்துவ உலகம் காத்திருக்கிறது!

- ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.
தொடர்புக்கு: daseindia2011@gmail.com

NEWS TODAY 15.05.2026