Friday, January 5, 2018

சபரிமலை செல்லும் மகளிருக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்

Added : ஜன 05, 2018 02:07

திருவனந்தபுரம்: 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள், தங்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும்' என, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு உத்தரவிட்டுள்ளது.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 


இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிரம்மச்சாரியான அய்யப்பனை தரிசிக்க, 10 - 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. 10 வயதுக்கு குறைந்த சிறுமியர் மற்றும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
சமீபகாலமாக, சபரிமலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10 - 50 வயதுக்குட்பட்ட பல பெண்கள், போலீஸ் சோதனையில், பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.


இதையடுத்து, ''சபரிமலைக்கு வரும் சிறுமியர் மற்றும் பெண்கள், கோவிலுக்குள் செல்வதற்கு முன் நடக்கும் சோதனையின் போது, தங்கள் பிறப்பு சான்றிதழை காட்ட வேண்டும். ஆதார் அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என, தேவஸ்வம் போர்டு தலைவர், பத்மகுமார் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024