ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில்
புதிய முதல்வராக ஜெயந்தி பொறுப்பு ஏற்பு
ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
சென்னை,
சென்னை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (டீன்) ஆர்.நாராயணபாபு,
ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி,
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம்
செய்யப்பட்டார்.
இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி நேற்று
பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பொது மருத்துவமனை புதிய ‘டீன்’ ஆக நேற்று
பொறுப்பேற்ற டாக்டர் ஆர்.ஜெயந்தி, உடனடியாக தனது பணியை தொடங்கினார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து குறைகளை
கேட்டறிந்தார்.
அப்போது டாக்டர் ஆர்.ஜெயந்தி
கூறுகையில், “நோயாளிகள் நலனுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள
மருத்துவ வசதிகளை நோயாளிகள் எளிதில் கிடைக்கவும் பாடுபடுவேன்”, என்றார்.
டாக்டர்
ஜெயந்தி 1986-ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு
முதல் முறையாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வராக
பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment