Monday, June 18, 2018

நடிகர் மன்சூர் அலிகான் கைது; 8 வழிச்சாலைக்கு எதிராக பேசியதால் அதிரடி

Updated : ஜூன் 18, 2018 05:43 | Added : ஜூன் 18, 2018 04:53



சேலம் : 'எட்டு வழிச்சாலை போட்டால், எட்டு பேரை வெட்டுவேன்' என, மக்களிடம் கலவரத்தை துாண்டும் வகை-யில் பேசிய, நடிகர் மன்சூர் அலிகானை, சேலம் போலீசார் கைது செய்தனர்.

சேலம் விமான நிலைய விரிவாக்கம், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்ப-வர்களை ஒருங்கிணைக்க, 'சேலமே குரல் கொடு' ஒருங்கிணைப்பாளரான, பியுஷ் மனுஷ் அழைப்பை ஏற்று, மே, 3ல், சேலத்தில் மன்சூர் அலிகான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அன்றிரவு, 9:30 மணிக்கு, ஓமலுார் அருகே, தும்பிப்பாடியில் நடந்த கூட்டத்தில், 'எட்டு வழிச்சாலை போட வருவோரில், எட்டு பேரை வெட்டுவேன்' என, மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். தும்பிப்பாடி, வி.ஏ.ஓ., மாரி புகாரின்படி, தீவட்டிப்பட்டி போலீசார், பியுஷ் மனுஷ், 43, சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த மன்சூர் அலிகான், 53, ஆகியோர் மீது, மக்களை கலவரத்துக்கு துாண்டுதல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல், குற்றம் செய்ய மக்களை துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்கு பதிந்தனர்.

நேற்று அதிகாலை, 3:50 மணிக்கு, சேலம் மாவட்ட கூடுதல், எஸ்.பி., அன்பு தலைமையிலான போலீசார், சென்-னையில் மன்சூர் அலிகானை கைது செய்து, சேலம் அழைத்து வந்தனர். அவரை மக்கள் மத்தியில் பேச ஏற்பாடு செய்த மனுஷ் மீது நடவடிக்கையில்லை. தும்பை விட்டு, வாலை மட்-டும் பிடித்துள்ளதாக, நேர்மையான போலீசார் குற்றம் சாட்டினர்.

'அறவழியில் போராட்டம்'

சென்னையிலிருந்து, சேலம் வரும் வழியில், ஆத்துார் ரூரல் போலீஸ் ஸ்டேஷனில், நடிகர் மன்சூர் அலிகா-னுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்த எட்டு வழிச்சாலை, நம்மை நாசமாக்கும் திட்டம். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாலை அமைத்து, 20 ஆயி-ரம் கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூலிப்பர். தமிழகத்தை ராவண பூமி என, மத்திய அரசு புறக்கணிக்கிறது. எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக, அறவழியில் தொடர் போராட்டம் நடத்த, மக்கள் ஒன்று திரள வேண்டும். முதல்வர் பழனிசாமி, எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். சேலம் - உளுந்துார்பேட்டை, நான்கு வழிச்சாலையில் மரம் வளர்த்து, இச்சாலையை மேம்படுத்துவது தான் மாற்று -வழி. இவ்வாறு அவர் கூறினார்.

'சட்டப்படி நடவடிக்கை':

''வன்முறையை துாண்டும் விதமாக, நடிகர் மன்சூர் அலிகான் உட்பட யார் பேசினாலும், ஏற்க முடியாது,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம். வாழ்க்கைக்கான வசதிகள் தேவை என்-றாலும், இயற்கையை காப்பதும் மிக அவசியம். பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதால், மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பிளாஸ்டிக் பயன்-பாட்டை, தமிழக மக்கள் குறைக்க வேண்டும். பிளாஸ்டிக் தடையால் வேலை இழப்பவர்களுக்கு, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து, வேலை வாய்ப்பு வழங்கும்.மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர், என்ன சந்திரனிலிருந்து குதித்தவரா; இல்லை, சூரியனில் இருந்து குதித்தவரா... மன்சூராக இருந்தாலும் சரி, ஜனநாயகத்தில் வன்முறையை துாண்டும் விதமாக யார் பேசினாலும் சரி, அதை ஏற்க முடியாது. அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை பாயும்.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.
திருப்பதி டூரில் அதிருப்தி: சுற்றுலா துறை கவனம் செலுத்துமா?

Added : ஜூன் 18, 2018 05:09


திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவில், உணவு பிரச்னை, லட்டு முறைகேடு போன்றவற்றால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக சுற்றுலாத்துறை, திருப்பதி ஆன்மிக சுற்றுலாவை செயல்படுத்தி வருகிறது. இதற்கான பஸ், சென்னை-யில் இருந்து, தினமும் காலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு திரும்புகிறது. குளுகுளு பஸ்களில் பெரியவர்களுக்கு, 1,475 ரூபாய்; சிறார்களுக்கு, 1,175 ரூபாய்; வால்வோ பஸ்களில் பெரிய-வர்களுக்கு, 1,675 ரூபாய்; சிறார்களுக்கு, 1,375 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

திருமலை திருப்பதி, திருச்சானுார் தரிசனத்திற்கான சுற்றுலாவில், திருமலையில், 300 ரூபாய் தரிசனம், காலை, மதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது.தினமும் மூன்று பஸ்களும், புரட்டாசி மாதத்தில், ஐந்து பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த திருப்-பதி சுற்றுலாவுக்கு, முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள், முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் நடப்பதால், அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து, திருப்பதி சுற்றுலா சென்ற பக்தர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பதி ஆன்மிக சுற்றுலாவில், காலை திருத்தணியிலும், மதியம் திருப்பதியிலும் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சுற்றுலாத்துறை சார்பில், ஒருவருக்கு, 340 ரூபாய் லவழிக்கப்படுகிறது.அதற்கேற்ப, உணவு தரமாகவோ, சுவையாகவோ இல்லை. சுற்றுலாத்துறை பஸ்சில், தினமும், 100 பேர் திருப்-பதி செல்கின்றனர்.

எனவே, திருத்தணி, திருப்பதியில் கழிப் பறை, ஓய்வறையுடன் கூடிய சொந்த கட்டடம் அமைத்து, பயணி-யருக்கு தேவையான உணவை, சுற்றுலாத்துறையே தயாரித்து வழங்கலாம்.மேலும், திருப்பதியில், 300 ரூபாய் டிக்கெட்டிற்கு, 100 ரூபாய் கொடுத்து, கூடுதலாக இரண்டு லட்டுக்கள் பெற-லாம். ஆனால், 'கெய்டு' என்ற பெயரில் வருபவர்கள், ஒரு லட்டுக்கு, 80 ரூபாய் வசூலிக்கின்றனர். மேலும், இலவசமாக வழங்கும் இரண்டு லட்டுக்களில், ஒன்றரை லட்டுக்களே இருக்கின்றன.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, பக்தர்களே நேரடியாக லட்டு பெற வசதி செய்ய வேண்டும். திருச்சானுாரில் ஏற்-படும் காலதாமதம் தவிர்க்க, 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, தரிசனம் செய்யும்படி வலியுறுத்துகின்றனர். இத்தொகையை, சுற்றுலாத்துறை ஏற்க வேண்டும். இதுபோன்ற குறைபாடுகளை களைந்தால், திருப்பதி செல்-லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இது குறித்து, சுற்றுலாத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
'ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்'

Added : ஜூன் 18, 2018 03:18


புதுடில்லி : 'ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவை, அனைத்து பல்கலைகளும் கண்டிப்பாக நடத்த வேண்டும்' என, மத்-திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

அனைத்து பல்கலைகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்ற-றிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:ஒருசில பல்கலைகள், நேரமின்மை மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, பட்டமளிப்பு விழாவை நடத்தா-மல் இருப்பது, சமீபத்தில் தெரியவந்தது.

ஆண்டுதோறும், அனைத்து பல்கலைகளும், கண்டிப்பாக பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும். இதில், ஏராளமான மாணவர்கள் பட்டம் பெறுவதை, அவர்களது பெற்றோர் பார்க்கும் போது, மிகுந்த மகிழ்ச்சி அடைவர். கடந்த ஆண்டு நடத்திய பட்டமளிப்பு விழா குறித்த விபரங்களை, அனைத்து பல்கலைகளும் உடனடியாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sunday, June 17, 2018

மனசு போல வாழ்க்கை-2 : எத்தனை விதமாய் எண்ணங்கள்!

Published : 31 Mar 2015 12:52 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 



நம் அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதை முதலில் பார்ப்போம்.

10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து பிடிபட்டதால் வங்கி ஊழியர் தற்கொலை என்று படிக்கிறோம். கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் மந்திரி சாதாரணமாகப் பேட்டி கொடுப்பார். சாலையில் வாகனம் செல்லும் தடத்துக்கு மிக அருகில் ஓரமாகப் படுத்து , எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கும் உணர்விலும் நன்றாக உறங்குவோர் பலர் நம் நாட்டில்.

இதே நாட்டில் தான் மிக வசதியான இடத்தில் படுத்தும் தூக்கம் வராமல் தூக்க மாத்திரை உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகம். 1100 மதிப்பெண்கள் எதிர்பார்த்து அது குறைந்ததால் மன அழுத்தத்தில் சிகிச்சைக்கு என்னிடம் வரும் மாணவர்களும் உண்டு. இரு முறை தோல்வி அடைந்தும் பதற்றப்படாமல் இருக்கிறானே என்று மன அழுத்தத்தில் என்னிடம் வரும் பெற்றோர்களும் உண்டு.

பணம் இருந்தால் கடன் அடைக்கலாம் என்பார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் மைக்ரோ ஃபினான்ஸில் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பித் தருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அரசிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் தாமதம். சிக்கல். ஏன்?

எல்லாம் மனசு தான்.

இரண்டு எண்ணங்கள்

விற்பனைப் பயிற்சியில் அதிகம் சொல்லப்பட்ட கதை இது:

காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதிய தீவில் கிளை பரப்ப எண்ணி 50 ஜோடி காலணிகளுடன் ஒரு விற்பனைக்காரனை அனுப்பியது. சென்றவன் அதே வேகத்தில் திரும்பினானாம். “அங்கு காலணி அணியும் பழக்கம் யாருக்கும் இல்லை. அதனால் கிளை திறக்கும் எண்ணத்தைக் கைவிடலாம். இங்கு விற்பனை சாத்தியமில்லை.”

இரண்டாம் ஆளை அனுப்பினார்கள். அவன் மறு நாளே செய்தி அனுப்பினானாம்: “யாருமே காலணி அணியவில்லை. உண்மை தான். அதனால் இதை விற்கப் போட்டியும் இல்லை. முழு சந்தையையும் நாமே பிடித்துவிடலாம். இன்னும் 200 ஜோடி காலணிகள் அனுப்புங்கள். விரைவில் கிளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!”

வாய்ப்புகளில் பிரச்சினைகளைப் பார்ப்பதும் பிரச்சினைகளில் வாய்ப்புகளைப் பார்ப்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்ததே!

எண்ணம் தான் விதை. உணர்வு தளிர். செயல் விருட்சம். இதைப் புரிந்து கொண்டால் அனைத்தும் எளிதாக விளங்கும்.

செயலின் விதை

“ஏன் இப்படிச் செய்யறான்?” என்று கேட்பதற்கு முன் அந்தச் செயலுக்கு விதையான எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபலப் பத்திரிகையின் கேள்வி - பதில் பகுதியில் இதைப் படித்தேன்:

கேள்வி: “நடிகை ரோஜாவைக் கட்டிப் பிடிக்க ஆசை! ஒரு வழி சொல்லுங்கள்?”

பதில்: “ரோஜாவைக் கட்டிப்பிடிக்க நினைத்தால் முள் குத்தும்!”

அருகே நடிகை ரோஜாவின் படமும் ரோஜாப்பூவின் படமும் இணைந்ததாய் ஒரு கேலிச்சித்திரம். என்ன அரிய கருத்து!

சரி, இதை ஏன் ஒரு வாசகர் கர்மச் சிரத்தையாய்க் கார்டு வாங்கி எழுதி அனுப்புகிறார்? ஆயிரம் கேள்விகளில் ஏன் இதைப் பொறுக்கி எடுத்து அந்த உதவி ஆசிரியர் பதில் எழுதிப் பிரசுரிக்கிறார்? இதை ஏன் மெனக்கெட்டுப் படித்து ஞாபகம் வைத்து நான் இப்போது எழுதுகிறேன்?

ஒவ்வொருவர் எண்ணத்தை அறியவும் முயற்சி செய்யுங்கள். மூவரின் செயலுக்கும் உந்துசக்திக்கும் செயலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

எண்ணமே ஆதாரம்

“ஏன் முகம் கொடுத்துப் பேச மாட்டேன் என்கிறாள்?” “ஏன் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாக இல்லை? “ஏன் இவர் செய்கின்ற எல்லாத் தொழிலும் தோல்வியில் முடிகிறது?” “ஏன் இவர் எங்குச் சென்றாலும் பிரபலமாகிறார்?” “எந்த வேலையையும் இவரால் மட்டும் எப்படி சரியான நேரத்தில் செய்ய முடிகிறது?” “இவரால் மட்டும் எப்படி எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?” “இவன் எல்லோரிடமும் சணடை போடுகிறானே, ஏன்?” இப்படி நம்மைச் சுற்றிய மனிதர்களின் செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்களை ஆராயுங்கள். அவர்களின் செயல்களின் காரணங்கள் புரியும்.

எதிராளியின் எண்ணம் புரியாத போது நாம் நம் உறவுகளைச் சீர் குலைய விடுகிறோம்.

அவர் எண்ணத்தைப் புரிந்து நாம் எடுக்கும் முடிவுக்கும் அடிப்படை நம் எண்ணம் தாம். என்ன விசு பட வசனம் மாதிரி இருக்கா? சரி, கொஞ்சம் எளிமை படுத்தலாம் வாங்க...!

ப்ரமோஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். மேலதிகாரியான உங்களுக்குக் குழப்பமாக உள்ளது. “எந்தக் கிறுக்கனாவது பணமும் பவரும் வேண்டாம்னு சொல்வானா? என்ன ஆள் இவன்?” என்று யோசிக்கிறீர்கள். பின்பு, விசாரித்ததில் புரிகிறது. தொழிற்சங்க உறுப்பினர் தகுதி ப்ரமோஷனால் பறி போகும். பதவி உயர்வை விடத் தொழிற்சங்க அடையாளம் பெரிது என்று எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இப்போது இந்த அறிதல் உங்கள் எண்ணத்தை இப்படி மாற்றலாம். “சரியான அரசியல்வாதி போல. இங்கேயே இருந்து என்னென்ன பிரச்சினை செய்வானோ? கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணணும்!”

அல்லது இப்படி ஓர் எண்ணம் தோன்றலாம்: “என்ன ஒரு கொள்கைப்பிடிப்பு. அவ்வளவு தீவிரமான ஈடுபாடா? நாமெல்லாம் காசு கிடைச்சா போதும்னு நினைக்கறப்ப இப்படிப் பொதுக் காரணத்துக்கு உழைக்கும் ஆளைப் பாக்கறதே பெரிய விஷயம். அந்த ஆளைப் பாத்து இன்னும் நிறைய தெரிஞ்சக்கணும்!”

எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீகளோ அது அவருடனான உங்கள் உறவை தீர்மானிக்கும்.

ஆம். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!

“நீங்கள் உங்கள் வியாதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!” என்பார் தீபச் சோப்ரா. உங்கள் எண்ணம்தான் உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்றால் நம்புவீர்களா?

“அப்படியா ஆச்சர்யமாக இருக்கே.!” என்பதும் “ரொம்ப கதை விடறார்!” என்பதும் இரு எண்ணங்கள். எந்த எண்ணத்தை இப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள் என்று பாருங்கள்.

உங்கள் தேர்வு உங்கள் தேடலை நிச்சயிக்கும்!



தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
தொழில் தொடங்கலாம் வாங்க! - 11: யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம்!

Published : 18 Apr 2017 11:09 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்



எதுவும் எழுத்து மூலம் இருக்க வேண்டும் என்று சொல்வது சட்டரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் மிக அவசியம்.

வெற்றிக்கான வழிமுறைகளில் ஒன்று உங்கள் இலக்கை எழுத்துக்களாய், எண்களாய் எழுதிவைப்பது. அதையும் ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக்குங்கள். சுவரில் தொங்க விடுங்கள். வீட்டிலும் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். எண்ணத் தெளிவு வரும். வைராக்கியம் வரும். உங்களுக்கு இலக்கு நோக்கி நகரத் தேவையான ஊக்கம் கிடைக்கும்.

தொடர்ந்து கவனம் செலுத்த…

மாணவர்கள் முதல் நிறுவனங்கள் வரை பின்பற்றுகின்ற உத்தி இது. 490 / 500 மதிப்பெண்கள் என்று எழுதிப் படிக்கும் மேஜை மேல் ஒட்டி வைத்தால் அது படிக்க உட்காரும்போதெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். பல உற்பத்தி நிறுவனங்கள் தரத்துக்கு, உற்பத்திக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதைப் பணியிடமெல்லாம் ஒட்டி வைத்திருப்பார்கள். அது அங்குள்ள அனைவரையும் ஊக்கமாகப் பணி செய்ய வைக்கும். விற்பனைத் துறையிலும் இதைப் பின்பற்றுவார்கள்.

நிதியாண்டு தொடக்கத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை மந்திரம் போல ஜெபிக்கத் தொடங்குவார்கள் வருடம் முழுவதும். ஒவ்வொரு மீட்டிங்கிலும் இது அலசப்படும். நினைவூட்டப்படும். சற்றுப் பதற்றம் அளித்தாலும் மனதை இலக்கில் தொடர்ந்து கவனம் செலுத்த இத்தகைய உத்திகள் பயன்படும்.

ஒரு ஐடியா கொடுங்கள் சார்!

இதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் பயன்படுத்தலாம். தொழில் தொடங்கும் முன்னரே தெளிவு பெற உங்கள் திட்டத்தை முதலில் எழுதிப் பாருங்கள். எப்படி எழுதுவது என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஒரு கதைபோலக்கூட எல்லாவற்றையும் விவரமாக எழுதுங்கள். பின் உங்கள் நெருங்கிய வட்டத்திடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாலே அவர்கள் சில தகவல்கள் இல்லாததைச் சுட்டிக் காட்டுவார்கள். ஓரளவு எல்லாத் தகவல்களும் வந்த பின் இதைச் சுருக்கி ஒரு பக்கத்தில் எழுத முடியுமா என்று பாருங்கள்.

என்னிடம் தொழில் பற்றி ஆலோசனை கேட்டு வரும் பல கேள்விகள் மிகவும் மேம்போக்காக வரும். “ நான் நாகப்பட்டினத்தில் இருக்கிறேன். என்ன தொழில் செய்யலாம்?” “மெயின் ரோட்டில் இடம் உள்ளது. என்ன செய்யலாம்? “வேலையில் நாட்டமில்லை. தொழில் பண்ண ஒரு ஐடியா கொடுங்கள் சார்!” “கோடி ரூபாய் வருமானம் வரும் தொழில்கள் என்னென்ன?” இவை அனைத்தும் தொழிலைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலை எண்ணங்கள். இதற்கு ஆலோசனை சொல்வது கடினம்.

“இந்தத் தொழில், இவ்வளவு முதலீடு, இது என் அனுபவம், இந்தச் சந்தையில் இப்படிச் செய்யலாமா?” என்று எழுதினால் ஓரளவு தொழில் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்று புலப்படும். பின் ஒரு நல்ல தொழில் திட்டம் எழுதவைத்தால் அவர்களுக்குத் தொழில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆலோசனை கேளுங்கள்

எழுதாமல் பேசிக்கொண்டே இருந்தால் தினம் ஒரு புது எண்ணம் வரும். யாருக்குமே முதலில் பல தொழில் எண்ணங்கள் வருவது இயற்கை. பல தொழில்களைப் பரிசீலிப்பதும் நியாயமானதுதான். ஆனால் ஒரு கால கட்டத்தில்

“இதுதான் உகந்தது” என்று ஒன்றை முடிவு செய்து தொழில் திட்டம் எழுதுவது நல்லது. எழுதும் போதுதான் உங்களுக்குப் பல கேள்விகள் வரும். படிப்பவர்களுக்கும் பல கேள்விகள் வரும். தொடர்ந்து அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுவதும், திட்டத்தை மெருகேற்றுவதும் நடக்கும்.

உங்கள் திட்டத்தை மற்றவர்களிடம் படிக்கக் கொடுத்து ஆலோசனை கேளுங்கள். அவர்கள் நிபுணர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் எதிர்மறை உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பயப்படாதீர்கள். அவர்கள் சொல்கிற விஷயம் தர்க்கரீதியாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம். யாரையும் உதாசீனப்படுத்தவும் வேண்டாம். உங்கள் ஐடியா களவு போய்விடும் என்று பயப்படாதீர்கள். அப்படி ஒரு மனிதராக இருந்தால் அவர் இந்நேரம் பெரிய தொழிலதிபராக ஆகியிருப்பார். அப்படிக் களவு கொள்ளத் தக்க தொழில் திட்டம் ஒன்று கையில் இருந்தால் அதை விடச் சிறப்பான இன்னொரு தொழில் திட்டத்தையும் உங்களால் உருவாக்க முடியும். அதனால் கவலை வேண்டாம்.

சட்ட உதவியை நாடலாம்

“எனக்கு நம்பிக்கை இல்லை சார். ஆரம்பிக்கும்வரை யாரிடமும் சொல்ல மாட்டேன்!” என்கிறீர்களா? நீங்கள் தொழில் முறை ஆலோசகர்களிடம் செல்லலாம். “அவர்களும் என் ஐடியாவை யாருக்காவது விற்றுவிட்டால்?” அதற்கும் வழி உள்ளது. பெரிய நிறுவனங்கள் Non Disclosure Agreement என்ற ஒன்றில் கண்டிப்பாக ஆலோசகர்களிடம் கையெழுத்து வாங்குவார்கள். நீங்களும் அப்படி ஒன்றை (சட்ட உதவியுடன்) தயார் செய்து, அதை ஆலோசனையின்போது ‘இந்தத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட எந்தத் தகவலும் என் மூலம் வெளியே போகாது என்று உறுதியளிக்கிறேன்’ என வாங்கிக்கொள்ளலாம்.

ஆலோசனை பெறுவதன் நோக்கம் உங்கள் தொழில் திட்டத்தைத் திடமானதாக ஆக்குவது. சரி, எழுதலாம். அதற்கான படிவம் என்று ஏதாவது உண்டா? உண்டு. ஆனால் அதற்கு முன் ஒரு பால பாடம். உங்கள் ஒரு பக்கத் திட்டத்தில் இந்த 7 கேள்விகளுக்குப் பதில் உள்ளதா என்று பாருங்கள்.

என்ன? (What?)

ஏன்? (Why?)

யார்?/ யாருக்கு? (Who?/ Whom?)

எப்போது? (When?)

எங்கு? (Where?)

எப்படி? (How?)

என்ன கணக்கு? (How much?)

5W2H என்ற இந்தச் சின்னச் சூத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கத் தொழில் திட்டம் தயார் செய்யுங்கள். பின் விரிவான திட்டம் தீட்டலாம்!


தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
தொழில் தொடங்கலாம் வாங்க! - 10: நண்பனாய் இருப்பது தகுதி அல்ல!

Published : 11 Apr 2017 10:13 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்





கல்யாணத்தில் ஜோடி சேர்வதைப் போலத்தான் வியாபாரத்தில் பங்குதாரரைத் தேர்வு செய்தல். பார்ட்னரைத் தேர்ந்தெடுத்தல் தொழில் ஆரம்பிக்கும்போது கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று. முதலில் நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: எதற்காக இந்தப் பார்ட்னர்ஷிப்?

வியாபாரமும் நட்பும் சிக்கலில்

தனியாக ஆரம்பிக்க பயமாக இருக்கிறது. கூட ஒரு ஆள் இருந்தா சவுகரியம். நல்லது கெட்டதில் சம பங்கு இருக்கும் என்று நினைத்தால் உங்களுக்குத் தொழில் பற்றிய பாதுகாப்பின்மை உள்ளது. வாரன் பஃபே பங்குச் சந்தை வெற்றிக்குச் சொல்வது என்னைப் பொறுத்தவரை எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும். அவர் சொல்வது இதைத்தான்: “உங்கள் முடிவுகள் பயத்தாலோ பேராசையினாலோ எடுக்கப்பட்டு இருந்தால் நீங்கள் வெற்றி பெற முடியாது!”

அதனால் பயத்தினால் பார்ட்னர் தேடுவது நல்லதல்ல. ஆனால் படிக்கும் காலம் தொட்டே நமக்குக் கூட்டாளிகளோடு இருப்பது இயல்புதான். நண்பர்கள் சேர்ந்து வியாபாரம் தொடங்குவதும் இப்படித்தான். ஆனால் நண்பர்களைக் கொண்டு தொழில் தொடங்குதல் உங்கள் வியாபாரம், நட்பு இரண்டையும் பாதிக்கக் கூடியது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் சுற்று வட்டாரத்திலேயே பார்த்திருப்பீர்கள் ஆரம்பித்துச் சில காலத்தில் பிய்த்துக் கொண்டு போவதை. நண்பர்களைத் தொழிலில் பங்குதாரராய்ச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதல்ல என் வாதம். நண்பர்கள் என்பது மட்டும் தகுதி ஆகிவிடக் கூடாது. அது தான் முக்கியம்!

முழு முதலாளி ஆகியிருக்கலாமே?

என் நண்பர் ஒரு சேவை நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தார். கையில் பணமில்லை. நண்பர் ஒருவர் உதவவந்தார். ரூபாய் ஐந்து லட்சம் வரை கொடுத்துப் பார்ட்னரானார். தடபுடலாக ஆஃபீஸ் போட்டு பப்ளிசிட்டி செய்தார்கள். மெல்லத் தொழில் வளர்ந்தது. முதலாமவர் முழு உழைப்பில் காசு வர ஆரம்பித்தது. எதிர்பாராத வகையில் முதல் வருட லாபமே ரூபாய் பத்து லட்சத்தை தொட்டது. இப்போது நம் நண்பர் எதற்கு அந்த நண்பரை பார்ட்னராய்ச் சேர்த்தோம் எனப் புலம்ப ஆரம்பித்தார். “ரூபாய் ஐந்து லட்சத்தைக் கடன் வாங்கிப் போட்டிருந்தால் முழு முதலாளி ஆகியிருக்கலாமே? இவர் ஒரு முறை முதலீடு செய்துவிட்டு வேலை செய்யாமல் லாபம் பார்க்கிறாரே” என்று பேச ஆரம்பித்துவிட்டார்.

“நான் அந்த நேரத்தில் கொடுத்து உதவாவிட்டால் இப்படி வளர்ந்திருக்க முடியுமா? தவிர, நஷ்டம் அடைந்தால் நானும் தானே பாதிக்கப்பட்டிருப்பேன்?” என்று எதிர் வாதம் செய்தார் அவருடைய நண்பர். சில காலத்தில், ஏகப்பட்ட மனக்கசப்புகள், கடன், கெட்ட பெயருடன் அவர்கள் பார்ட்னர்ஷிப் முறிந்தது.

அந்நியராகப் பாவிப்பது நல்லது

எதற்குத் தொழிலில் பங்குதாரர் வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பணத்தேவை என்பதற்காகவா, அவரின் நேரம் மற்றும் பங்களிப்புக்காகவா, அவரின் சிறப்புத் தகுதிக்காகவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஒரு நெடுங்காலத் திட்டம் அவசியம். இன்றைய தேவைக்கு என்று நிறைய பேரைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஆட்கள் சேரச் சேர ஒருங்கிணைப்புக்கான நேரமும் சக்தியும் அதிகம் முதலீடு செய்ய வேண்டும்.

உறவினர்களைப் பங்குதாரர்கள் ஆக்குவதிலும் கவனமாக இருங்கள். காரணம் அங்கு வியாபாரத்துடன் உங்கள் குடும்ப உறவும் சேர்ந்து பாதிக்கப்படும். ஆனால் யாராக இருந்தாலும் அந்நியர் போலப் பாவித்துச் சில புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

வெற்றி நழுவியது ஏன்?

அதேபோல கம்பெனியில் பங்கு உரிமை உள்ளது என்பதற்காக நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியமில்லை. எனக்குத் தெரிந்து பத்துப் பேர் சேர்ந்து ஆரம்பித்த ஒரு வியாபாரம், அவர்களில் ஒருவர் மட்டுமே நிர்வாகம் செய்யச் செழிப்பாக வருகிறது. அதிலும் நிர்வாக இயக்குநர் என அந்த ஒருவர் இருந்தாலும் தலைமை செயல் அதிகாரி என வெளியாள் ஒருவர் புரபெஷனலாக நடத்திக் கொண்டிருக்கிறார். அத்தனை பங்குதாரர்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் சந்தித்து வியாபாரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டி வைத்துப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், வியாபார முடிவுகள் அந்த ஒருவரிடம்தான். அதை நடத்திக் கொடுக்க ஒருவர் இருக்கிறார். அவர் தலைமையில் நிர்வாகம் உள்ளது.

தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகள் வெற்றியடையாமல் போனதற்குக் காரணம் பணம் போட்ட குடும்பத்தினர் நேரடியாக நிர்வாகத்தில் தலையிட்டதுதான்.

நிறுவன உறவுகள் முக்கியம்

என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: “மாதம் ரூபாய் மூன்று லட்சம் கொடுத்து ஒரு பெரிய பேராசிரியரைப் பணிக்கு அமர்த்த முடிகிறது இவர்களால். ஆனால் அவரை எப்படிச் சிறப்பாகப் பணி செய்யவைப்பது என்ற நிர்வாகத் திறன் இல்லை. பணம் கொடுக்கிறோம் என்று இஷ்டத்துக்கு வளைத்ததால் அவர் வந்த வழியே போய்விட்டார்!”

வியாபாரத்தில் பங்குகொள்வது வேறு. நிர்வாகம் செய்வது வேறு. யார் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆவதற்குச் சில அடிப்படை நோக்கங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். விழுமியங்கள் ஒத்துப் போக வேண்டும், கலாச்சார ஒற்றுமைகள் வேண்டும். எல்லாவற்றையும் பேசி, எழுத்து மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். யார் பிரிந்து செல்ல நேரிட்டாலும் கவுரவம் கெடாமல் வெளியேற இடம் தர வேண்டும். உங்களின் நல்லுணர்வு தூதுவராக அவர் வெளியில் பேசும் அளவுக்கு உங்கள் நிறுவன உறவுகள் இருக்க வேண்டும்.

ஊர் கூடித் தேர் இழுப்பது போல, கூட்டுறவு செயல்பாடு போல, பலர் சேர்ந்து தொழில் தொடங்குவது சிறப்புதான். ஆனால் கூட்டின் கட்டுமானம் திடமாகத் தெளிவாக இருந்தால்தான், அதன் மேல் எழுப்பப்படும் வியாபாரம் பிரம்மாண்டமாக ஓங்கி வளரும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
குழந்தை கடத்த வந்ததாக 60 வயது முதியவர் மீது தாக்குதல்..! காவல்துறை விசாரணை

எம்.திலீபன்   17.06.2018

குழந்தைகளைக் கடத்த வந்ததாக 60 வயது முதியவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டத்தில் தொடர்ந்து பிள்ளை பிடிப்பவர்கள் உலாவுதாக வதந்திகள் பரவிய வண்ணம் நிலவுகிறது.



பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் 2 நாட்களாக 24 வயது நிரம்பிய வாலிபர்கள் 2 பேர் அப்பகுதி தெருவோரம் உள்ள தெருக்களில் சுற்றி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை அழைத்து 2 பேரும் பேசியதால் சந்தேகப்பட்ட பெற்றோர், பொதுமக்கள் நேற்று முன்தினம் இருவரையும் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துப் பிடித்து வைத்தனர்.

தகவல் அறிந்தது சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் போலீஸார் வந்து 2 பேரையும் மீட்டு விசாரித்தனர். அதில் செஞ்சேரியில் தங்கி பழைய துணிகளை வாங்கிச் செல்ல வந்த மகாராஷ்டிரா மாநிலத்தவர் என அறிந்ததால் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று பெரம்பலூர் துறைமங்கலத்தில் குழந்தைகளுடன் நடந்து சென்ற பெண்ணைத் தொடர்ந்து சென்ற 60 வயது முதியவரைக் குழந்தை திருடன் எனச் சந்தேகித்து பொதுமக்கள் பிடித்து வைத்து அடித்து உதைத்தனர். பிடிபட்ட முதியவரோ எதுவுமே பேசாமல் இருந்தார்.

 தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரை மீட்டுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர் தமிழ் பேச தெரியாத வடமாநிலத்தவரா அல்லது மனவளர்ச்சி குன்றியவரா என்பதும் தெரியவில்லை. இதேபோல் பல்வேறு கிராமங்களில் குழந்தை திருடர்கள், வடமாநிலங்களில் இருந்து வந்திறங்கியதாக வதந்தி பரவியுள்ளதால் தினம்தோறும் ஒரு கிராமத்தில் குழந்தை கடத்தல் பேச்சாகவே உள்ளது. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார்கள் பொதுமக்கள்.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...