Wednesday, June 20, 2018

மாவட்ட செய்திகள்

மருத்துவ படிப்பில் சேர 44 ஆயிரம் பேர் விண்ணப்பம் கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது



மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வுக்கு 44 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது.

ஜூன் 20, 2018, 03:29 AM

சென்னை

தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவசேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. மேலும் 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 784 இடங் கள் உள்ளன. இதேபோல் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர பல்மருத்துவ இடங்கள் 1,020 உள்ளன.

இந்த இடங்களில் சேர தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல்மருத்துவ கல்லூரியிலும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த 11–ந்தேதி தொடங்கியது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த பிரிவினர்

அல்லாத மாணவ–மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் ரூ.500 ஆகும். தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பம் ரூ.1,000. இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.

44 ஆயிரம் விண்ணப்பங்கள்

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற முகவரிக்கு அனுப்ப நேற்று கடைசி நாள் ஆகும். அவ்வாறு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு வந்து சேர்ந்தன.

தரவரிசை பட்டியல் 28–ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி முதல் 10–ந்தேதி வரை நடக்கிறது.

Tuesday, June 19, 2018

சிக்கலோ சிக்கல் இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! #HealthyFood

பாலு சத்யா

‘இடியாப்பேம்ம்ம்ம்...’ அநேகமாக இந்தக் குரல் ஒலிக்காத தமிழகத்தின் பெருநகரங்களே இன்றைக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். குரலைக் கேட்டவுடனேயே, சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டப்பட்ட பெரிய பாத்திரம் நம் கண்களுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படி வீடு வீடாகப் போய் இடியாப்பம் விற்கிறவர்கள் அதிகம். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை. இது ஒரு வகையில் நல்லதும்கூட. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்! உண்மையில் சிக்கல் நிறைந்த இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது!
 
இடியாப்பம்
சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்’டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி’ என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். இந்திய உணவு வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சயா (K.T.Achaya), முதலாம் நூற்றாண்டிலேயே இடியாப்பம் இந்தியாவில் இருந்தது என்று தன் `தி ஸ்டோரி ஆஃப் அவர் ஃபுட்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழில் `நூல்புட்டு’, கன்னடத்தில் `நூபுட்’, மலேஷியாவில் `புட்டுமாயம்’... என அழைக்கப்படும் இடியாப்பம் இலங்கை வரை பிரபலமான ஓர் உணவு.  கடலோரப் பகுதிகளிலும், நகரத் தெருக்களிலும் தெரு வியாபாரிகள் கூவிக் கூவி விற்ற அரிய உணவு. `பெரும்பானாற்றுப்படை’, `சிலப்பதிகாரம்’, `மதுரைக்காஞ்சி’ போன்ற தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வரலாற்று ஆசிரியர்கள் சிலர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் வருகைக்குப் பின்னர்தான் இடியாப்பம் தென்னிந்தியாவில் நுழைந்தது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது போர்ச்சுகீசியர்களின் வருகை என்பது இந்தியாவில் 1498-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் நிகழ்ந்தது. ஆனால், அதற்கு முன்னரே இது இங்கே புழக்கத்தில் இருந்ததாக நம் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. அதோடு இடியாப்பம் செய்ய மூங்கில் தட்டுகள் பயன்படுத்தப்படும். ஆனால், மூங்கிலைக்கொண்டு செய்யப்படும் சமையல் முறை ஐரோப்பாவுக்கு அறிமுகமானது 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான். அதுவும் ஜப்பான் மற்றும் சீன நாட்டினரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, போர்ச்சுக்கீசியர்கள்தான் இதை தென்னிந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள் என்பது உறுதி இல்லை. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்கள்! அதோடு அவர்களின் செய்முறைக்கும் நம் முறைக்கும் எத்தனையோவிதங்களில் வேறுபாடு இருக்கின்றன.
சேவை
சுத்தமான அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து அவித்தால் இடியாப்பம்! தேங்காய்ப் பால், பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிட அபாரச் சுவை! கேரளாவில் கொண்டைக்கடலையை கிரேவியாக்கி, அதனுடன் சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு. இது, எளிய, ஆரோக்கியமான காலை உணவு. இடியாப்பத்தை உதிர்த்து, உப்புமாவாக்கலாம். நம் ஊரில் `சேவை’ என்று சொல்வார்கள். இதைக்கொண்டு எலுமிச்சை, தக்காளி, புளி என விதவிதமாக `சேவை’ செய்து ருசிக்கலாம். இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்கள்கூட உண்டு. தினை, வரகரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு என சிறுதானியங்களில் செய்து ருசி பார்க்கும் அளவுக்கு இடியாப்பத்தின் மகத்துவம் இன்றைக்கு அனைவரும் உணர்ந்த ஒன்றாகிவிட்டது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் இடியாப்பம் பெரும்பாலான ஹோட்டல்களில் கிடைக்கின்றது. ஆனால், அத்தனை உணவகங்களும் தாங்களே இதைத் தயாரிப்பதில்லை. இதற்கு தனி ஆள் போட வேண்டும்; செலவும் கூடுதல் என்பதால், மொத்தமாகத் தயாரிக்கும் இடங்களில் வாங்குகிறார்கள். உணவகங்களுக்கு இடியாப்ப சப்ளைக்கென தனியாக தொழிலே நடைபெறுகிறது. மொத்த மொத்தமாக தயாரித்து, விற்கிறார்கள். திண்டுக்கல், மணப்பாறை பகுதியில் இருந்து வந்தவர்கள்தான் இந்தத் தொழிலில் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள்தான் தெரு வியாபாரிகளுக்கும் இடியாப்பத்தை விற்பனைக்குக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இடியாப்ப சிறுதொழில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அரசின் கடன் வசதிகூட பெறலாம். இதைத் தயாரிக்க மெஷினகள் வந்துவிட்டன.

   
இடியாப்பத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன... விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி...

டயட்டீஷியன் பத்மினி
“இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆயுர்வேத மருத்துவமுறையில், இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள். இதை இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது. இதில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அனைத்தும் உள்ளன. எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நோயின் தன்மைக்கேற்ப இடியாப்பம் செய்து, மற்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க ஏற்ற உணவு.
ஜுரம் - இடியாப்பத்தை இளஞ்சூடான நீருடன் கொடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு - மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்துத் தரலாம்.
பசியின்மை - எலுமிச்சை சேவை, தக்காளி சேவை என செய்து கொடுக்கலாம்.
வயிற்றுக்கோளாறுகள் - எலுமிச்சை சேவையாக கல் உப்பு போட்ட மோருடன் தரலாம்.
கர்ப்பிணிகள் - இத்துடன் தேங்காய்ப்பால், பால், நெய், நாட்டுச்சர்க்கரை, டிரைஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம்.

இடியாப்ப உணவு
அரிசியைத் தவிர்த்துவிட்டு,  சிறுதானியங்கள் மற்றும் கோதுமையில்கூட இதைச் செய்யலாம். பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்.
உதாரணமாக, கோதுமை இடியாப்பத்தின் பலன்கள்...
இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது; கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; இதய நோய்களுக்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்; உடல் எடை கூடுவதைத் தவிர்க்கும்; சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு நல்லது; கோதுமை, சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகொண்டது, இதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு நல்லது. இதேபோல சிறுதானியங்களில் இதைச் செய்தால் அதிகப் பலன்களைப் பெறலாம்’’ என்கிறார் பத்மினி.

ஆக, இடியாப்பம் நல்லது. என்ன... வெளியில் வாங்கும்போது இது, சுத்தமானதுதானா, ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டதுதானா என்பது தெரியாது. எளிதான செய்முறை. ஒருமுறை கற்றுக்கொண்டால் நாமே வீட்டில் தயாரிக்கலாம். ஆரோக்கியம் காக்கலாம்!
கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம் 

எஸ்.மகேஷ்....... vikatan


சென்னை சூளைமேடு பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுவன், கனவில் வந்ததால் அவனைக் கொலை செய்த மூன்று பேரும் போலீஸில் சரணடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூளைமேடு ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர், பிளாட்பாரத்தில் பழைய புத்தகம் விற்றுவருகிறார். இவரின் மகன் ராஜேஷ். 6-ம் வகுப்பு வரை படித்த இவர், அதற்கு மேல் படிக்கவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிவந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி, பொங்கல் தினத்தன்று வீட்டை விட்டு வெளியில் சென்ற ராஜேஷ், பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சூளைமேடு போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். பல இடங்களில் தேடியும் ராஜேஷை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியனிடம் நேற்று மூன்று சிறுவர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.





இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களிடம் சரண் அடைந்த மூன்று பேரும் ராஜேஷின் நண்பர்கள். இதில் இரண்டு சிறுவர்கள் சுடுகாட்டில் குழி தோண்டும் வேலை செய்துவருகின்றனர். மற்றொருவர் வேலைக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றிவந்தார். இவர்களில் இரண்டு பேர், போதை பழக்கத்துக்கும் அடிமையாக இருந்தனர். இந்தச் சமயத்தில், பொங்கல் பண்டிகையன்று ராஜேஷ், எங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டோம். இதனால், நுங்கம்பாக்கம் மயானப்பகுதிக்கு ராஜேஷை அழைத்துச் சென்றோம். அங்கு பணம் கேட்டதில் எங்களுக்கும் ராஜேஷுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, கிரிக்கெட் மட்டையால் ராஜேஷை சரமாரியாகத் தாக்கினோம். அதில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். தொடர்ந்து அங்கு குழிதோண்டி அவரின் சடலத்தை புதைத்துவிட்டோம் என்று மூன்று பேரும் கூறினர்" என்றனர்.

இவ்வளவு நாள் கழித்து எப்படி சரண் அடைந்தீர்கள்? என்று போலீஸார் தனித்தனியாக சிறுவர்களிடம் விசாரித்தபோது, `ராஜேஷை கொலை செய்தபிறகு அவன் அடிக்கடி என் கனவில் வந்ததால், பல இரவுகள் தூங்காமல் தவித்ததாகவும் கூறியுள்ளார் ஒரு சிறுவன். இதனால்தான் சரண் அடையும் முடிவை எடுத்தோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சரண் அடைந்த மூன்று சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீஸார் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட ராஜேஷின் உடலைத் தோண்டி எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துவருகின்றனர்.
 
கொலை செய்யப்பட்ட நண்பர், ஆறுமாதங்களாக கனவில் வந்து தூக்கத்தைக் கெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுப் பேருந்தில் இந்தி பெயர்ப் பலகை..! - சமூக வலைதளங்களில் குவிந்த கண்டனங்கள் 

நவீன் இளங்கோவன் ரமேஷ் கந்தசாமி   vikatan 



ஈரோட்டில் இயங்கிவரும் அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப் பலைகையில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறைப் பகுதியில் இயங்கிவரும் 17-ம் எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப்பலகையில், ‘பெருந்துறை மார்க்கெட்’ என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தமிழகப் பேருந்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதா?’ என பலரும் அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.



கடந்த இரண்டு நாள்களாகவே, இந்தியில் எழுதப்பட்ட இந்தப் பெயர்ப் பலகையைக் கண்டித்த பதிவுகள் ஈரோடு மாவட்டத்தில் வைரலாகி வருகின்றன. ‘தமிழ்நாட்டில் ஓடும் பேருந்தில் எதற்காக இந்தி? வடநாட்டில் வாழும் தமிழர்களுக்காக எங்கும் பெயர்ப்பலகை தமிழில் வைக்கப்படுவதில்லை’ என்றும் ‘ரயில் பயணச் சீட்டில் ஊர் பெயரை தமிழில் அச்சிடும் முறையையே நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகுதான் பெற்றிருக்கிறோம். தமிழகப் பேருந்தில் இந்தியில் எழுதப்படுவதை ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் போனால் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இத்தகைய இந்தித் திணிப்பு பரவலாகும் அபாயம் இருக்கிறது’ என பலரும் எச்சரித்து தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், ‘தற்போதைய மத்திய அரசாங்கமானது ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்கிற ரீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியை தமிழகப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திணிக்க ஆளும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறதோ’ என்று பலரும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.



பெருந்துறை பேருந்தில் இந்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டது ஏன் என போக்குவரத்து வட்டாரங்களில் விசாரித்தோம். “சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தப் பேருந்தானது பெருந்துறை சிப்காட் பகுதியில் இருந்து பெருந்துறை மார்க்கெட் பகுதிக்குச் சென்று வருகிறது. சிப்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருவதால், அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கவே இந்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக ஞாயிறுதோறும் பெருந்துறையில் வாரச் சந்தை நடக்கும். அந்தச் சந்தைக்கு சிப்காட்டைச் சுற்றியுள்ள வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து காய்கறி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிச் செல்வார்கள். மற்றபடி அந்தப் பேருந்தில் இந்தி மட்டுமல்ல தமிழும் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரத்துக்குப் பிறகு அந்த இந்திப் பெயர்ப் பலகையும் அகற்றப்பட்டுவிட்டது” என்றனர்.
  பெருந்துறை சிப்காட்டைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வட மாநிலத்தவர்கள் குடியேறியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பணிக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வட மாநில மக்களுக்காக, டெங்கு விழிப்பு உணர்வு அறிவுறுத்தலை இந்தி மொழியில் ஆடியோவாக பதிவுசெய்து ஆட்டோவில் ஒளிபரப்பியிருக்கின்றனர்.

DU admissions: SRCC releases first cut-offs, BA (Economics) is 98.75% 

18 Jun 2018 | By Gogona Saikia



The Shri Ram College of Commerce (SRCC) has released its first cut-offs for undergradate admissions 2018.

The cut-off for BA (Economics) has gone up 0.75% since last year to stand at 98.50%. For B.Com (Hons), it's 97.75%, same as 2017.

This includes the 'best of four'- the average of students' top four scores in Class-12 boards.

The DU cut-off list is also expected today.

In context: DU's first cut-off list out

18 Jun 2018DU admissions: SRCC releases first cut-offs, BA (Economics) is 98.75%

SRCCDetails about SRCC's first cut-offs

In OBC category, the cut-off for B.Com has increased by 5% to 95.50%. For BA (Economics), it remains at 96.75%.

For SC, the two cut-offs are at 92.75% and 94.25%, and for ST, at 87.50% and 92.50% respectively.

Those with disabilities can get admission in B.Com at 86.75%, but need 94.50% for BA (Economics). For Kashmiri migrants, cut-offs are at 88.75% and 95.50% respectively.



DatesheetThis time, there will be five cut-off lists

Other colleges will be declaring their own cut-offs by tomorrow. Students will then have till June 21 to visit the colleges with necessary documents and take admission.

The second list will be out on June 25, the third on June 30, and the next two on July 7 and July 12.

This time, there will be only five cut-off lists.

DU is starting centralized counseling this year
For the first time, DU is starting centralized counselling after the fifth list. Candidates not placed till then may be considered for this process. The usual system was modified after admissions went on for 11 lists last year, much after classes had already started.

DUDU, known for sky-high cut-offs, likely to see more competition

The DU in general, and SRCC in particular, is known for its unbelievably high cut-offs. In 2011, SRCC had a cut-off of 100%!

This time, the university had asked colleges to set more "realistic" cut-offs.

But as many as 12,737 students of the CBSE scored above 95% in their boards, 2,646 more than last year. Considering this, competition is expected to be more cutthroat.
தொழில் தொடங்கலாம் வாங்க 35: தொழிலைத் தக்கவைப்பது எப்படி?

Published : 10 Oct 2017 10:55 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்




தொழில் ஆலோசனைக்கு வந்த அன்பர் தன் கடந்த காலத்தைப் பற்றிச் சொல்கையில், “நேரம் சரியில்லை அப்போ. ஆரம்பித்தது எல்லாம் தோல்வி. நான் உப்பு விக்கப் போனா மழை வரும். உமி விக்கப் போனா காத்தடிக்கும்” என்றார். நான் சிரித்தவாறு கேட்டேன், “வானிலை அறிக்கை கேட்டு விட்டுப் போயிருக்கலாமே?” அவரும் சில நிமிடங்கள் சிரித்துவிட்டுப் பின்பு சீரியசாக “அப்ப நேரம் காலம் எல்லாம் பொய்யா?” என்று கேட்டார்.

சந்தை புரிந்த இசைப் புயல்

நம்மை மீறிய சக்திகள் நம் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும் என்பதை நம்புகிறவன்தான் நான். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்பதிலும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதிலும் அதிகப் பற்று கொண்டவன். மழை வரலாம் என்று வானிலை அறிக்கை சொல்லும். குடை எடுத்துக் கொண்டு வெளியே போகலாமா அல்லது இன்று போகாமல் இருக்கலாமா என்ற முடிவு நம் கையில் தானே உள்ளது! இது தொழிலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும்.

“டைம் நல்லா இருக்கிறதா என்று பார்ப்பதைப்போல டைமிங் சரியாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.” என்றேன். 80-களில் தொடங்கப்பட்ட இன்ஃபோஸில் நிறுவனம் இதற்கு நல்ல உதாரணம். சினிமாவில் சொல்வதென்றால் ஏ.ஆர்.ரஹ்மானைச் சொல்லலாம். உலகமயமாக்கம் எல்லைகளை உடைக்க ஆரம்பித்த 92-ல் இவர் பிரவேசிக்கிறார். முதல் படமே காஷ்மீர் பயங்கரவாதத்தில் சிக்கிய தமிழர் பற்றியது. ஒரு தேசியப் பிரபல்யம் கிடைக்கிறது. இதுவரை கூட அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். ஆனால், அதற்குப் பிறகு அவர் எடுத்த முடிவுகள் முக்கியம். படங்களின் எண்ணிக்கையை விட எல்லை தாண்டும் மொழிகளுக்கு முக்கியத்துவம் தந்தது, ஏர்டெலின் ரிங் டோன் மெட்டமைத்தது, பன்னாட்டு இசை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது, ஒரே டியூனை பல மொழிகளில் பிரபலப்படுத்தி விற்பது, பாடல் இல்லாமல் வெறும் இசையைச் சந்தைப் படுத்தியது என இவர் செய்த அனைத்தும் பன்னாட்டு இசை சந்தையின் பல்ஸ் பார்த்து எடுத்த அறிவார்த்தமான முடிவுகள். அவை மிகப்பெரிய அளவில் அவருக்குப் புகழ், வாய்ப்புகள், வசதிகள் என எல்லாம் கொடுத்தன. ஆஸ்கர்வரை அவரை கொண்டு சென்றன.

வெற்றியாளர்களுடன் கூட்டணி

அதை விட முக்கியமான விஷயம் இதே 90-களில் வந்த பல இசை அமைப்பாளர்களிடம் ரஹ்மானுக்கு ஒப்பாகச் சொல்லக்கூடிய திறமை இருந்தன. ஆனால், ரஹ்மானின் தேர்வுகளும் முடிவுகளும்தான் அவரை வேறுபடுத்திக் காண்பித்தன. மணிரத்னம், ஷங்கர், ராம்கோபால் வர்மா, ராஜீவ் மேனன், சுபாஷ் காய் என வெற்றியாளர்களைத் தேர்வுசெய்து கூட்டணி வைத்துக்கொண்டார். வைரமுத்துவை விடாமல் பிடித்துக்கொண்டார். வைரமுத்துவுக்கும் இளையராஜாவிடமிருந்து பிரிந்து ஏழு ஆண்டுகள் தத்தளிப்பிற்குப் பிறகு ஒரு நல்ல பிடிமானம் கிடைத்தது. இருவரின் ரசவாதத்தில் பல முறை தேசிய விருதுகள் கிடைத்தன.

நான் சொல்ல வருகின்ற விஷயம் இதுதான். இறை அருள், சோதிடப் பலன், நல்ல நேரம் என்பவையெல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொருத்தது. ஆனால், நல்ல நேரம் வருகையில் பிடித்துக் கொள்வதும், கெட்ட நேரத்தில் நிதானமான முடிவுகள் எடுப்பதும் நம் கையில்தான் உள்ளது. தவிர உலகத்தைக் கூர்ந்து நோக்கி அதன் போக்கில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கியமானவை.

2006- 2012-வரை ஸ்டார்ட் அப்களின் பொற்காலம். நீங்கள் ஒரு நல்ல தொழில்நுட்பாளராக இருந்து, ஒரு லாபகரமான தொழில் எண்ணத்தை முன்வைத்தால் அதிகம் யோசிக்காமல் முதலீட்டாளர்கள் பணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஃபேஸ்புக்கும் கூகுளும் அந்தப் போக்கை உருவாக்கி வைத்திருந்தன. சிலிக்கன் பள்ளத்தாக்கில் ஒரு காபி குடித்துக் கொண்டே காசோலைகளில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தன. அதன் இந்தியத் தாக்கம்தான் ஃப்லிப்கார்ட், ரெட் பஸ், ஓலா என டெக் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பு.

ஆனால், இந்தப் போக்கு மெள்ள மெள்ள மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக முதலீட்டாளர்களின் மனோபாவம் மாறிவிட்டது. வெறும் ஐடியாவை மட்டும் நம்பிப் பெரிய தொகை தரும் காலம் முடிந்துவிட்டது. உங்களால் பணம் பண்ண முடிகிறதா என்று பார்க்க ஆரம்பித்தனர். கெடுபிடிகள் அதிகமாயின. எல்லாருக்கும் அள்ளி வீசிய நிலைமை மாறி, மிகக் கவனமாகப் பார்த்துப் பார்த்துப் பணம் போடுகிறார்கள் முதலீட்டாளர்கள்.


சரியான நேரத்தில், சரியான முடிவு

இதைத்தான் டைமிங் என்று சொல்கிறேன். இன்றைய காலகட்டத்தில் நிகழும் மாறுதல்களைக் கூர்மையாகக் கவனிப்பதுதான் தொழிலைத் தக்க வைக்க உதவும். பழைய தகவலை, அனுபவமற்றவரின் அறிவுரையை வைத்துக்கொண்டு தொழில் முடிவுகள் எடுப்பது ஆபத்தானது. உங்கள் தொழில் முடிவுகள் நாளைய போக்குகளை எதிர்கொள்வதாக இருக்க வேண்டும்.

இனி வாகனம் தயாரிக்க வேண்டும் என்றால் மாருதியையும் ஹூண்டாயையும் போட்டியாக நினைக்கமாட்டார்கள். டெஸ்லாவையும் ஓலாவையும் நினைத்துத்தான் செயல்பட ஆரம்பிப்பார்கள். எல்லாக் காலத்திலும் தொழில்செய்வதில் ரிஸ்க் உள்ளது. வெற்றி தோல்வியை யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது. ஆனால் சந்தையின் போக்கை அறிந்து சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகள் முக்கியமானவை.

சில ரியல் எஸ்டேட் நண்பர்களைச் சந்தித்தபோது அவர்கள் பேசிக்கொண்டார்கள். இந்தத் தேக்க நிலையில் கட்டிவைத்துவிட்டு விற்க முடியாமல் திணறுவதை விடச் சில காலம் சும்மா இருக்கலாம் என்றார்கள். இதுவும் நல்ல முடிவுதான். இதற்கு நேர் எதிராக இன்னொரு நிறுவனம் யோசித்தது. தொழில் தேக்கம் மத்திய வர்க்கத்தைதான் பாதிக்கிறது. 3 படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்டுகளை விற்பதில் சிரமம் உள்ளது உண்மைதான். ஆனால், 4 படுக்கையறைகள் கொண்ட விலை உயர்ந்த அபார்ட்மெண்ட்கள் உடனடியாக விற்றுப்போகின்றன. அதனால் அவர்கள் 4 படுக்கையறைகள் கொண்டவைகளிலும் வில்லா வீடுகளிலும் மட்டுமே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இதுதான் டைமிங்கில் எடுக்கும் முடிவு என்பது.

உங்களுக்கு டைம் நன்றாக இருக்கிறதா என்று சிந்திப்பதைப்போல உங்கள் முடிவுகளின் டைமிங் சரியாக இருக்கிறதா என்றும் சிந்திப்பது நல்லது!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

‘Selection Process For Highest Seat In A University Can’t Just Be A Routine’: Madras HC Quashes Appointment Of Madurai Kamaraj University VC [Read Order] | Live Law

‘Selection Process For Highest Seat In A University Can’t Just Be A Routine’: Madras HC Quashes Appointment Of Madurai Kamaraj University VC [Read Order] | Live Law: The Madras High Court has set aside the appointment of Dr PP Chellathurai as Vice-Chancellor of Madurai Kamaraj University.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...