Thursday, June 21, 2018

Non-payment of stipend: PG medical students approach Kerala HC against self-fin. colleges

TNN | Jun 18, 2018, 10.43 PM IST 

KOCHI: Close to 150 post-graduate (PG) dental students have approached the Kerala High Court questioning non-payment of stipend by self-financing medical colleges, at par with government colleges. PG students at government medical colleges are being paid a monthly stipend of Rs 43,000.

According to the petition filed through advocate TRS Kumar, there are 16 self-financing dental colleges conducting PG courses in Kerala but these colleges are not paying monthly stipend to students despite making the students work in their hospitals. The students have to work more than 10 hours a day but are not provided with any remuneration as stipulated by authorities, it is alleged.

It was in May 2016 that Dental Council of India fixed the monthly stipend at Rs43,000 for the first year, Rs44,000 for the second year, and Rs45,000 for the final year. While the PG students who joined for courses at government medical colleges have been receiving their stipends monthly, students of self-financing medical colleges are being denied the same, the petitioner have contended.

From a yearly fee of Rs5 lakh in 2016, it was raised to Rs8.5 lakh in 2017, though the fee for the same course in neighbouring states is lesser. Fee was so fixed by the admission supervisory committee without taking into consideration the actual expenditure of the college, the petition said.

Along with the petition, the students have submitted a statement of accounts prepared on the basis of actual expenses for students. As per the statement, the monthly profit of a self-financing college is Rs99,04,876.



`மதுரை எய்ம்ஸ் எப்படி இருக்க வேண்டும்?’ - டாக்டர்கள் சொல்லும் யோசனை!


இரா.தமிழ்க்கனல்


மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது எனும் அறிவிப்பை வரவேற்றுள்ள சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம், அது எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளது.



இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீத்திரநாத் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என மத்திய அரசு காலதாமதமாக அறிவித்திருந்தாலும் வரவேற்கத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தற்போதுதான் இடமே முடிவாகியுள்ளது. மத்திய அரசு மிகவும் காலதாமதமாக இடத்தைத் தேர்வுசெய்தது வருந்தத்தக்கது. இந்நிறுவனம் நிறுவப்படுவதை, மேலும் காலதாமதப்படுத்தாமல், கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்திட வேண்டும். இந்நிறுவனம் மதுரையில் தொடங்கப்படுவதை, மத்திய மாநில அமைச்சர்களும் தமிழக பா.ஜ.க தலைவர்களும் வாக்குவங்கி அரசியலாக மாற்றுவதைக் கைவிட வேண்டும்.

* அனைத்து உயர் சிறப்பு மருத்துவ வசதிகளும், நவீன மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வசதிகளும் உடைய உலகத் தரம்வாய்ந்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையமாக, இந்நிறுவனத்தை அமைத்திட வேண்டும்.
* 250 இளநிலை மருத்துவ இடங்கள் (எம்.பி.பி.எஸ்) உள்ளதாக இந்நிறுவனத்தை தொடங்கிட வேண்டும்.

* மருத்துவக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 65 விழுக்காட்டை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கிட வேண்டும்.

* எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்குத் தொடர்ந்து தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்திவருவதைக் கைவிட்டு, நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நடத்திட வேண்டும்.

* எய்ம்ஸில் எம்.பி.பி்.எஸ் படிப்பவர்களுக்கு அந்நிறுவனத்தில் முதுநிலை மருத்துவம் பயில தனி ஒதுக்கீடு ( நிறுவன உள் ஒதுக்கீடு) வழங்குவதைக் கைவிட வேண்டும்.

* எய்ம்ஸில் படிப்பவர்கள் அனைவரும் வேலைவாய்ப்புக்கு நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்திருப்பதை கைவிட வேண்டும்.

* எய்ம்ஸில் சிகிச்சையை ஏழை நோயாளிகளுக்கு முழுமையாக, இலவசமாக வழங்கிட வேண்டும். பயனாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும்.

* எய்ம்ஸ் நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.

* எய்ம்ஸில் மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆராய்ச்சியை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தை அதிக அளவில் பாதிக்கும் டெங்கு, எலிக்காய்சல் உட்பட்ட நோய்கள் குறித்து, மதுரை எய்ம்ஸில் ஆராய வசதிகள் செய்திட முன்வர வேண்டும்.

மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் 82 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், அதில் ஒன்றுகூட தமிழகத்துக்கு ஒதுக்கப்படவில்லை. இது கண்டனத்துக்குரியது. எனவே, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட மத்திய அரசு , தமிழக அரசுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட வேண்டும்” என்று இரவீந்திரநாத் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாக்கிங் சென்றபோது கணவன் கண் எதிரிலேயே மனைவிக்கு நேர்ந்த கொடுமை!


துரை.வேம்பையன்

கரூர் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்ட தம்பதியிடம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், கணவன் கண் எதிரிலேயே மனைவியிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கரூரை அடுத்த வெங்கமேடு காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (31). இவரது கணவர் பால்ராஜ். தம்பதியான இருவரும் நேற்று காலை நடைப்பயிற்சிக்காக அருகில் உள்ள வெண்ணெய் மலைப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள், சங்கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி தப்பித்துச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியுற்ற சங்கீதா, உதவி கேட்டு கத்தினார். மர்மக் கும்பலை அவரது கணவர் பால்ராஜ் துரத்திக்கொண்டு சென்றார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். நகையைப் பறிகொடுத்த சங்கீதா வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து தெரிவித்த கரூர்வாசிகள் சிலர், 'கரூர் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை தலைவிரிச்சாடுது. தினமும் இதுபோன்ற கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளிலேயே நடைபெறுகின்றன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம், தண்ணீர் கேட்பதுபோல் போய், அவர்கள் அசந்த நேரத்தில், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை அபகரித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிவிடுகிறார்கள். ஆனால், இப்படி தொடர் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத கரூர் காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களுக்கும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கொள்ளையர்கள் கொட்டம் கரூரில் அதிகமாகியுள்ளது" என்றார்கள்.
ஒரு கொடியில் பூத்த இரட்டை முட்கள்

Published : 16 Jul 2016 12:45 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்



ஒரு பழைய கதை ஒன்று உண்டு. ஒரு சாதுவிடம் ஒரு சாத்தான் ‘நீ கட்டாயம் ஏதாவது தவறு ஒன்றைச் செய்தே ஆக வேண்டும். உனக்கு மூன்று விஷயங்களைத் தருகிறேன். அதில் ஏதாவது ஒன்றை, நீயே தேர்வு செய்துகொள்!‘ என்றதாம். பயந்து போன சாது ‘அவை என்னென்ன?’ என்று கேட்டார். ஒரு குழந்தை, ஒரு இளம்பெண், ஒரு போத்தல் மது இம்மூன்றையும் சாத்தான் காட்டி ‘நீ ஒன்று இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும் அல்லது இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய வேண்டும் அல்லது ஒரு பாட்டில் மதுவைக் குடிக்க வேண்டும். இதில் எந்தத் தவறைச் செய்கிறாய்?’ என்று கேட்டது.

கொலை, பலாத்காரம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்காதவர் சாது. ஆகவே, வேறு வழியில்லாமல் மதுவைக் குடித்தார். மதுவின் போதை ஏறியதும், அவருக்கு அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற வெறி வந்தது. அப்போது அந்தக் குழந்தை அழுதது இடைஞ்சலாக இருக்க, அதையும் கொன்றுவிட்டாராம்.

ஆகப் பரமசாதுவாக இருப்பவர்கள்கூட, போதையால் தவறிழைப்பது நடக்கும்போது, ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்குப் போதையும் சேரும்போது மூளை முற்றிலுமாகச் செயலிழக்கிறது.

ஏன் இந்தச் சீர்குலைவு?

சமீபத்தில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது. சம்பவத்தில் தொடர்புடைய நபர் குடிபோதையில் இருந்ததாகவும் போதைக்கு வேண்டிய பணத்துக்காகத் திருட்டுகளில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற திருட்டுக் குற்றங்களுக்கும் போதைப் பழக்கத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது.

மனித இனம், சமூகமயமாக்கப்பட்ட ஒரு விலங்கினம். மனித இனம் ஒரு சமூகமாகச் செயல்படும்போது தனிப்பட்ட விருப்பங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தாமலும் நன்மை அளிக்கும் வகையில் ஒரு சமுதாயமாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு மனிதருடைய மூளையில் ஏற்பட்ட வளர்ச்சியும் மாற்றங்களும், அதன்மூலமாக மனதில் ஏற்பட்ட மாறுதல்களுமே முழுமுதல் காரணம்.

போதைப் பழக்கம் என்பது மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை அளவுக்கு அதிகமாக நுகரவும், தனக்கும் பிறருக்கும் தீமை செய்துகொள்ளும் வகையிலும், தனிமனித, சமுதாய உறவுகளில் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்த ஒன்று.

யார் காரணம்?

போதையால் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றனவா? இல்லை குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைப் பழக்கத்தில் அதிகம் ஈடுபடுகிறார்களா என்ற சர்ச்சை, முதலில் கோழி வந்ததா, முட்டை வந்ததா என்பது போன்ற இன்னொரு புராதனக் கேள்வி. இந்த விவகாரத்தில் கோழி, முட்டை இரண்டையும் விட்டுவிட்டு அதற்கு முந்தைய பரிணாம வளர்ச்சி நிலைக்குச் சென்று ஆராய்வோம்.

2006-ம் ஆண்டு அமெரிக்க உளவியல் ஆய்விதழ் ஒன்றில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை முக்கிய விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. சுமார் முப்பது ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவர்களைச் சிறுவயது முதலே ஆராய்ச்சி செய்து கண்டறியப்பட்ட அந்த ஆராய்ச்சி முடிவுகளை டாக்டர் ப்ளாக் என்பவர் வெளியிட்டார். அந்த ஆராய்ச்சி முடிவுகளின்படி போதைப் பழக்கத்துக்கான விதை, சிறு வயதிலேயே விதைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த சூழ்நிலை, குடும்பப் பின்னணி, ஆளுமை, பெற்றோர்களின் ஆளுமை போன்றவையே பின்னாளில் ஒருவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன என்பதே இந்த ஆய்வு முன்வைத்த முடிவு.

எது அடிமைத்தனம்?

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஒருவர் ஒரு போதைப்பொருளை ஓரிரு முறை உட்கொண்டார் என்றாலே, அதற்கு அவர் அடிமையாகிவிட்டார் என்று அர்த்தமில்லை. அந்தப் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது, பெரும்பாலான நேரம் அப்பொருளை எடுத்துக்கொள்வதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பது, அது இல்லாமலிருந்தால் உடலிலும் மனதிலும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது, போதைப்பழக்கத்தால் உடலிலும் உறவுகளிலும் பிரச்சினைகள் ஏற்படுவது தெரிந்தும்கூடத் தொடர்ந்து அதை எடுத்துக்கொள்வது, நிறுத்த முடியாமல் போவது, போதைப் பழக்கத்தால் முக்கியமான நிகழ்வுகளையும் வாய்ப்புகளையும் இழப்பது என்று பல அறிகுறிகள் இருக்கின்றன.

இப்போது குற்றச்செயல்களுக்கு வருவோம். போதைப் பழக்கத்தைப் போன்றே, குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடும் ஆளுமைக் கோளாறு உடையவர்களுக்கும் (Anti Social Personality) குடும்பச் சூழல், பெற்றோர், வளரும் சூழ்நிலை போன்ற புறக்காரணிகளின் பங்கே முக்கியமானதாக இருக்கிறது.

ஆகப் போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் ஆகிய இரண்டுமே ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்கள் (அல்லது முட்கள்) போல், ஒரே பின்னணியில் உருவாகின்றன. குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆளுமை கொண்ட நபர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதேபோல் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செயலிழக்கும் சிந்தனை

நீரிழிவு நோயும் ரத்தக் கொதிப்பும் ஒரே வாழ்க்கை முறைக் கோளாறால் உருவாகி, ஒன்றன் தீவிரத்தை மற்றொன்று அதிகரிப்பது போல் போதைப்பழக்கமும் குற்றச்செயல் மனப்பான்மையும் ஒன்றை ஒன்று அதிகரிக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது நமது மூளையே. மூளையில் போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சில மாற்றங்கள், இந்தத் தடைகளை உடைக்கின்றன. குற்றம் செய்தால் கிடைக்கும் தண்டனைகளைப் பற்றிய பயம், மனதைவிட்டு அகல்கிறது; சிந்திக்கும் திறன் குறைகிறது. ஆகவே அடுத்தவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் தான் நினைத்ததை, உடனே செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.

போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பொருளாதாரரீதியில் இழப்புகளைச் சந்திப்பார்கள். வேலையில் ஏற்படும் பிரச்சினைகளால் வேலையை இழப்பதும் அதிகமாக இருக்கும். அதேநேரம், மது போன்ற போதைப்பொருட்களை எடுத்தே ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் மனதளவில் உண்டாகும்போது, எந்த வழியிலாவது அந்தப் போதைப்பொருளைப் பெறும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், வீட்டில் உள்ள பொருட்களை விற்கும் செயல்களில் இறங்குகின்றனர். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டாவது, போதைக்குத் தேவையான பணத்தைப் பெறும் தகாத வழிகளைத் தேடத் தொடங்கிவிடுகின்றனர்.

என்ன தீர்வு?

ஆகப் போதைக்காகத் திருடுவது, ஏன் கொலை கூடச் செய்யக்கூடிய அளவுக்குப் போக வைப்பது, மது போன்ற போதைப் பழக்கங்கள்தான். போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதை அரசு கட்டுப்படுத்தினால், இது போன்ற குற்றங்கள் குறையும் என்றாலும், அது மட்டுமே ஒரே தீர்வல்ல.

கடுமையான சட்டங்கள் மூலமாக மட்டுமே, இதுபோன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதும் முழு உண்மையல்ல. உலகமயமாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, மன அழுத்தத்தை அதிகரிக்கும் சூழ்நிலைகள், போதைப் பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்மை, குற்றச் செயல்கள் மற்றும் போதை அடிமைகள் மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் இன்மை போன்ற பல சமூகக் காரணிகளுடன் போதைப்பழக்கமும் குற்றச்செயல்களும் பின்னிப் பிணைந்துள்ளன.

போதைப்பழக்கமும் குற்றச்செயல்களும் சமூகத்தைப் பிடித்துள்ள நோய்க்கான அறிகுறிகள் மட்டுமே. இவற்றைப் பற்றி மட்டுமே பேசுவது நாம் எதிர்பார்க்கும் முழு பலனைத் தராது. நம் அரசும் சமூகமும் மேற்கண்ட புரிதலுடன் இந்தப் பெரும் பிரச்சினையைப் பற்றி விரிவாக அலசி, பல்வேறு முனைகளில் தீர்வுகளை வேகப்படுத்தினால், நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


கட்டுரையாளர், மனநல மருத்துவர்


தொழில் தொடங்கலாம் வாங்க 29: அரசுக்காகச் செய்யாமல் ஆத்மார்த்தமாகச் செய்யுங்கள்!

Published : 29 Aug 2017 10:50 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 




உற்பத்தித் துறையில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று ஜப்பானியர்கள் காட்டிவிட்டார்கள். புதிதாகச் செய்ய எதுவும் இல்லை என்ற அளவுக்கு அனைத்து விஷயங்களிலும் உச்சம் தொட்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் செய்ததைப் பார்ப்போம். பிறகு அதிலிருந்து நாம் செய்யாததை உணர்வோம்.

திரும்பத் திரும்ப கைசனா?

அமெரிக்கா கார்களுக்குப் போட்டியாய் அதே தரத்துடன் குறைந்த விலையில் டொயோட்டா வெளிவந்த போதுதான் உலகம் ஜப்பானைக் கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கியது. ஏதோ ஒரு புதிய தொழில்நுட்பத்தை ரகசியமாகக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகித்த அமெரிக்கா, தங்கள் ஆட்களை அனுப்பி வேவு பார்த்தது. வந்தவர்களுக்கோ மொழிப் பிரச்சினை. மருந்துக்கும் ஆங்கிலம் கிடையாது. கண் பார்வைக்குத் தொழிற்சாலையின் ஒவ்வொரு அம்சமும் உலகத்தில் உள்ள அனைத்து கார் கம்பெனிகளிடம் உள்ளது போலதான் தெரிகிறது. ஆனால், ஏதோ ஒன்றை வித்தியாசமாய்ச் செய்கிறார்கள் என்று மட்டும் உணர முடிகிறது.

தீவிர ஆராய்ச்சியில் தெரியவந்தது ஜப்பானியர்கள் ‘கைசன்’ என்று ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ‘கெம்பா கைசன்’ என்ற வார்த்தை பெரும் புழக்கத்தில் உள்ளது தெரிகிறது. கைசன் என்றால் ‘படிப்படியான தொடர் முன்னேற்றம்’. கெம்பா என்றால் பணியிடம். கெம்பா கைசன் என்றால் ‘பணியிடத் தொடர் முன்னேற்றம்’. சரி, இது என்ன பிரமாதம்?

உயிர்த்தெழ வைத்தது எது?

யோசித்தால் இது கலாச்சாரமும் தத்துவமும் சார்ந்தது. எதுவும் முடிவு இல்லை. எதையும் தொடர்ந்து முன்னேற்றிக் கொண்டே இருக்கலாம். இதுதான் சிறந்தது; இதற்கு மேல் முடியாது என்று எதுவுமே கிடையாது. சிறந்த தரம் என்றால் இதைவிடச் சிறந்த தரத்தில் செய்யலாம். விலை குறைவு என்றால், இதைவிடவும் குறைக்கலாம். அதிகபட்சப் பாதுகாப்பு என்றால் இதைவிட அதிகபட்சப் பாதுகாப்பு என அனைத்தையும் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டே இருப்பது ஜப்பானியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சம். அது தொழிற்சாலையிலும் பிரதிபலிக்கிறது. இந்தப் பண்புதான் அந்த தேசத்தை உயிர்த்தெழவைத்தது.

உற்பத்தித் துறையில் எல்லா அம்சங்களும் நம் கட்டுக்குள் உள்ளது. மூலப்பொருளைக் குறைந்த விலைக்கு, சரியான நேரத்தில் வாங்கி, மதிப்பு கூட்டி, சிறந்த தரத்துடன் நல்ல விலைக்கு விற்க வேண்டும். இந்தச் சுழற்சியில் ஒவ்வொரு இடத்திலும் முன்னேற்றம் காண வேண்டும். மஸாகி இமாய் என்ற ஜப்பானியத் தொழிற்துறை மேதை ‘கெம்பா கைசன்’ என்ற புத்தகத்தில் 5 முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பார். (அந்தப் புத்தகத்தின் தாக்கத்தில்தான் என் நிறுவனத்துக்கு ‘கெம்பா’ என்று பெயரிட்டேன்!) அவை 1. தரம் 2. விலை 3. விநியோகிக்கும் நேரம் 4. பணியாளர் ஈடுபாடு 5. பாதுகாப்பு. இந்த ஐந்தைத் தொடர்ந்து சிறப்பாக்கிக்கொண்டே வருவதுதான் கெம்பா கைசன்.

நிர்வாகத்தின் பொறுப்பு

சிறந்த தரம் வேண்டும். எப்போதும் வேண்டும். சந்தையில் போட்டியாளர்கள் தரத்தையும்விட அதிகம் வேண்டும். அதற்கு மூலப் பொருட்களின் தரம் முதல் உற்பத்தித் திறன், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புவரை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


விலை குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் வழிமுறைக்கும் உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு வளத்தையும் குறைந்த விலைக்குக் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

தேவைப்படும் நேரத்தில் (முன்னரோ பின்னரோ அல்ல) மூலப்பொருள் முதல் இறுதியாக உற்பத்தி செய்து வெளியிடும் இறுதி உற்பத்திப் பொருள்வரை சரியான நேரத்தில் நகர வேண்டும். ஸ்தம்பிக்கும் பொருள் பண விரயம். எவ்வளவு சீக்கிரம் உள்ளே வரும் மூலப்பொருள், இறுதி வடிவம் பெற்று, வாடிக்கையாளரிடம் விற்கப்படுகிறதோ அவ்வளவு விரைவில் உங்கள் முதலீடு உங்களுக்குத் திரும்ப வரும். இந்தச் சுழற்சி குறைந்த நேரத்தில் நடந்தால் அதிக லாபம்.

பணியாளர்களின் மொத்த ஈடுபாட்டைத்தான் முதல் முதலீடாகக் கருதுகிறார்கள் ஜப்பானியர்கள். ஒவ்வொரு சிறு சிறு பணியையும் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பு உணர்வுடன், ‘தொடர் முன்னேற்ற கைசன்’ நடவடிக்கைகளைச் செய்யப் பணியாளர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து வளர்க்க வேண்டியது நிர்வாகப் பொறுப்பு.

விபத்துகள் பூஜ்யமாகவும், பணியிடம் மிகுந்த பாதுகாப்பாகவும் இருந்தால், மேற்கண்ட நான்கு விஷயங்களும் பாதிக்கப்படாது என்று நம்புகிறார்கள் அவர்கள். அதனால் இதை அரசாங்கம் வலியுறுத்தும் விஷயமாகச் செய்யாமல் அதன் வியாபார சூட்சுமத்தை உணர்ந்து ஆத்மார்த்தமாகச் செய்கிறார்கள்.

மனித வள நிர்வாகத்தையும் படிக்க வேண்டும்

இந்த ஐந்தும்தான் ஜப்பானியப் பொருட்களை உலகத் தரத்துக்குக் கொண்டுசெல்ல உதவின. QCDMS என்று கெம்பா கைசனைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் இன்று தாரக மந்திரமாகச் சொல்வது இந்த 5 விஷயங்களைத் தான் : Quality, Cost, Delivery Time, Morale & Safety

டி.வி.எஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஜப்பானிய வழிமுறைகளைக் கற்று இன்று உலகத் தரம் பெற இவைதான் காரணம். ஆனால், பெரும்பான்மையான உற்பத்தி நிறுவனங்கள் இந்தச் சூட்சுமங்களை அறிந்திருந்தாலும், முதல் மூன்று விஷயங்களில் செலுத்தும் கவனத்தைக் கடைசி இரண்டில் செலுத்துவதில்லை. இந்தியாவில் மலிந்து கிடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை பற்றிய மனோபாவத்தால் உருவானவைதான் இவை.

“ஒரு காலத்தில் கேட்டை பிடிச்சிட்டு மணிக்கணக்கா நிப்பாங்க வேலை கேட்டு. சோறு போட்டு கொஞ்சம் பணம் கொடுத்தா காலத்துக்கும் வேலை செய்வாங்க. இன்னிக்கு எல்லா வசதி செஞ்சு கொடுத்தாலும் ஃபேக்டரில வேலை செய்யறதவிட குளு குளுன்னு கடையில நின்னு வேலை செய்யத்தான் பிரியப்படறாங்க” என்று சொன்னார் கோவையைச் சேர்ந்த ஒரு ஆலை முதலாளி நண்பர்.

பணியாளர் பற்றிய நம் மனோபாவங்கள்தான் அவர்களைக் கைசன் செய்யுமளவுக்கு உயர்த்தவில்லை. கைசன் இந்தியாவில் ஏன் ஜப்பான் அளவுக்கு வெற்றி பெறவில்லை? கலாச்சாரம் சார்ந்த நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும், நிலையான வேலையும் கண்ணியமான மனித உறவுகளும்தான் ஈடுபாட்டை வளர்க்கும். அதன் பின்தான் ஒவ்வொரு வழிமுறையிலும் தொடர் முன்னேற்றம் பற்றி யோசிக்க முடியும். ஜப்பானியத் தொழில்நுட்பம் படிக்கும் நம் முதலாளிகள் ஜப்பானின், மனித வள நிர்வாகத்தையும் படிக்க வேண்டும்.

நான் பல முறை பேசும்போது குறிப்பிடும் விஷயம் இதுதான். தன் பிள்ளை இந்தத் தொழிலுக்கு வர வேண்டாம் என்று நினைத்தால் அந்தத் தொழில் விளங்காது. தன் பிள்ளையும் தன்னைப் போல இதே நிறுவனத்தில் ஒரு நல்ல தொழிலாளியாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு நிர்வாகம் செய்யாவிட்டால், “நல்ல ஆளுங்க கிடைக்க மாட்டேங்கறாங்க சார்!” என்று புலம்புவதுதான் நடக்கும்.

நல்ல தொழிலாளிகள் கிடைப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Inspection Of Answer Sheets By Examinee Should Be Allowed Under RTI Act: CIC [Read Order ] | Live Law

Inspection Of Answer Sheets By Examinee Should Be Allowed Under RTI Act: CIC [Read Order ] | Live Law: The Central Information Commission (CIC) recently held that an examinee holds the right to inspect his own answer sheets under the Right to Information Act, 2015, relying on the Supreme Court decision in the case of CBSE and Anr. v. Aditya Bandopadhyay and Ors. The Supreme Court had, in Aditya Bandhopadhyay’s case, ruled that an …

ஜியோவின் அதிரடி டேட்டா சலுகை!


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தினசரி 4.5 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 திட்டத்தில் முன்னதாக, 28 நாட்களுக்கு மொத்தம் 84 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதில் வாடிக்கையாளர்கள் தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் இலவச அழைப்புச் சலுகையையும் பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது இத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு ரூ.299 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 126 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு இலவச அழைப்பு, 100 எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் தினசரி 4.5 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவைப் பெறலாம்.

ஆனால், இத்திட்டம் ஜூன் 30 வரையிலான கால வரம்புக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் ஜியோ நிறுவனம் தனது மேலும் சில திட்டங்களையும் புதுப்பித்துள்ளது. ரூ.149 கட்டணத்தில் 28 நாட்களுக்கும், ரூ.349 கட்டணத்தில் 70 நாட்களுக்கும், ரூ.399 கட்டணத்தில் 84 நாட்களுக்கும், ரூ.449 கட்டணத்தில் 91 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படும். அதேபோல, ரூ.509 திட்டத்தில் தினசரி 5.5 ஜிபி டேட்டாவும், ரூ.799 கட்டணத்தில் தினசரி 6.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

NEWS TODAY 25.07.2026