Sunday, December 9, 2018

அரசு மருத்துவமனைகளில் சோதனை தொடர்கிறது

Added : டிச 09, 2018 01:01

சென்னை அரசு மருத்துவமனைகளில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை, நேற்றும் சில இடங்களில் தொடர்ந்தது.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவமனைகளில், எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கப்படுகிறது. உள்நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களிடமும், ஊழியர்கள் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.மேலும், கர்ப்பிணிகள் பதிவு செய்வது முதல், அவர்களுக்கு வரும் மகப்பேறு நிதியுதவி திட்டங்கள் உட்பட, அனைத்திற்கும், 500 முதல், 5,000 ரூபாய் வரை, சுகாதாரத் துறை ஊழியர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். இது போன்று, ஏழை மக்கள் பயன் பெறும் அனைத்து திட்டங்களிலும், தங்களுக்கும் ஒரு பங்கை, அதிகாரிகளும், ஊழியர்களும் பிடுங்கிக் கொள்கின்றனர்.தொடர் புகார்களை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை சோதனை நடத்தினர். இதில், சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 'ஸ்கேன்' எடுக்கும் பெண் ஊழியரிடம், 3,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதேபோல, ஸ்டான்லி, ஓமந்துாரார் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கணக்கில் வராத பணம், மருத்துவமனை ஊழியர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை, திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நேற்று நடந்தது. 'பொது மக்களின் புகார்களின் அடிப்படையில், மருத்துவமனைகளில் சோதனை தொடரும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

எதற்கெல்லாம் லஞ்சம்?யாருக்கு - எவ்வளவு ரூபாய்'லிப்ட்' இயக்குபவருக்கு - 10'ஸ்கேன்' எடுப்பவருக்கு - 20குப்பை அள்ள மற்றும் படுக்கை சுத்தப்படுத்துபவருக்கு - 30பார்வை நேரங்களை தவிர்த்து, நோயாளியை பார்க்க - 30குளுக்கோஸ் ஏற்றுவதற்கு - 50'ஸ்ட்ரெக்சர்' தள்ளுபவருக்கு - 50 - 100முடி திருத்துபவருக்கு - 100'எக்ஸ் - ரே' மற்றும் ரத்த பரிசோதனை உடனுக்குடன் பெற - 100நோயாளிக்கு சிறந்த சிகிச்சை அளிக்க - 100 முதல், 500பெண் குழந்தை பிறந்தால் - 500ஆண் குழந்தை பிறந்தால் - 1,000சடலத்தை பிணவறைக்கு கொண்டு வர - 100பிரேத பரிசோதனை செய்ய - 500 முதல் 1,000டாக்டர் சான்றிதழ் பெற - 500 முதல் 1,000அரசின் காப்பீட்டு திட்டம் மற்றும் நிதியுதவி திட்டங்களுக்கு - 1,000 முதல் 5,000'108' ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு - 100 முதல் 1,000 வரை
அம்பானி இல்ல திருமணம்

Added : டிச 09, 2018 01:36




புதுடில்லி ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், நடக்கும், முகேஷ் அம்பானி மகள் இஷா - ஆனந்த் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரியை, முகேஷும், அவரது மனைவியும் வரவேற்றனர்.நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனர் அஜய் பிரமலின் மகன் ஆனந்துக்கும், 12ல், மும்பையில் திருமணம் நடக்கவுள்ளது.சங்கீதம், நாட்டியம் மற்றும் மெஹந்தி உள்ளிட்ட, திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், 10ம் தேதி வரை நடக்கின்றன.

திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அம்பானி குடும்பத்தினர் மற்றும் பிரமல் குடும்பத்தினர் உதய்பூர் வந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் வேட்பாளரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.விருந்தினர்களை, உதய்பூருக்கு அழைத்து வர, மும்பை மற்றும் டில்லியில் இருந்து, 50 தனியார் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவர்கள் தங்குவதற்கு, உதய்பூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஹிலாரியை, முகேஷ் அம்பானி - நிதா வரவேற்றனர்.முதல் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, உதய்பூரில், மாற்றுத் திறனாளிகள், வீடற்றோர், காப்பக குழந்தைகள், முதியோர் என, 5,100 பேருக்கு இனிப்புடன் உணவு வழங்கும், 'அன்ன சேவா' நிகழ்ச்சி நடந்தது.நேற்று, ஹிலாரி, லஷ்மி மிட்டல், சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர், அமிதாப் பச்சன் குடும்பத்தினர், கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக் ஷி, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் உதய்பூர் வந்தனர்.இஷா திருமண நிகழ்ச்சிகளில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர்களுக்கு விடுமுறை இல்லை மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

Added : டிச 09, 2018 06:22


கோவை, ''போராட்டத்தை காரணமாக தெரிவித்து, டாக்டர்கள் விடுமுறை எடுக்கக் கூடாது,'' என, மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின்ஜோ உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், 4ம் தேதி, புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று முதல், தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், டாக்டர்கள் போராட்டம் குறித்த பொதுநல வழக்கு விசாரணையில், வரும், 17ம் தேதி வரை போராட்டங்களை ஒத்தி வைப்பதாக, அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஆயினும், டாக்டர்கள் சங்கம், நிர்வாகத்துக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறுகையில், ''டாக்டர்களின் ஒத்துழையாமை இயக்கத்தால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். போராட்டத்தை காரணமாக தெரிவித்து, டாக்டர்கள் விடுமுறை எடுக்கக் கூடாது,'' என்றார்.
ராகிங் தடுப்பு குழு கூட்டம்

Added : டிச 09, 2018 01:12

சென்னை, ராகிங் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு, பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், கவர்னர் செயலர் ராஜகோபால், தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன்மார்டி, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கல்வி நிறுவனங்களில், ராகிங்கை முற்றிலுமாக ஒழிக்க எடுக்கப்பட்ட மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை

Added : டிச 09, 2018 08:25 |

புதுடில்லி : கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், கட்டுமான பணிகள் நிறைவுபெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. இருப்பினும் கட்டுமான பணி தொடங்கும் போதோ அல்லது கட்டுமானம் முடிந்து நிறைவு சான்று பெறப்படாமலோ உள்ள வீடுகளை வாங்கினால் ஜிஎஸ்டி விதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு வீடு திட்டம், ராஜிவ் ஆவாஸ் யோஜனா, பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கான 8 சதவீதம் ஜிஎஸ்டியை கட்டுமான நிறுவனங்கள் தங்களது வரி வரவில் இருந்து கழித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் முக்கிய பதிவேடுகளை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய பதிவேடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதிவு: டிசம்பர் 09, 2018 03:45 AM மாற்றம்: டிசம்பர் 09, 2018 04:18 AM
ஓமலூர்,

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் பணம் வசூலிப்பதாகவும், டாக்டர்கள், செவிலியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி, இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, பூபதிராஜன், கோமதி, தாசில்தார் சாந்தி உள்பட மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்குள்ள டாக்டர்கள், நோயாளிகள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு டாக்டர், சில புரோக்கர்களை வைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் பணம் வசூல் செய்தது, கட்ட பஞ்சாயத்து செய்ததும், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து, மாத்திரைகளை எடுத்து சென்று, அருகில் தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கியதும் தெரியவந்தது.

மேலும் ஒரு செவிலியர் தனது வீட்டு வேலைக்கு மருத்துவமனை ஊழியர்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மீதும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நோயாளிகள் சரமாரி புகார்களை தெரிவித்தனர். இதனிடையே முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும், ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவேடு, மருத்துவ நிதி ஒதுக்கீடு பதிவேடு போன்ற முக்கிய பதிவேடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பதிவேடுகளை ஆய்வு நடத்திய பின்னர் அதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடத்திய சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநில செய்திகள்

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்




வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: டிசம்பர் 09, 2018 05:30 AM
சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்து வருகிறது. கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான கஜா புயல், டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்தது. அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதிக்கு மேல் பல நாட்கள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 3-ந் தேதி முதல் 2 நாட்கள் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்தது. நேற்று முன்தினம் அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து மேலடுக்கு சுழற்சியாக இருக்கிறது.

இப்போது அதே வங்கக் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உருவாக இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

புயல் சின்னமாக மாற வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து மேலடுக்கு சுழற்சியாக இருக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் நாட்களை பொறுத்து தான் கணிக்க முடியும். தற்போதுள்ள நிலவரப்படி தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தாழ்வு பகுதி வலுப்பெறும் பட்சத்தில் புயல் சின்னமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது எதையும் உறுதியாக கூற முடியாது.

 இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘செங்கோட்டையில் 3 செ.மீ, ஆரணி, ஆய்க்குடியில் தலா ஒரு செ.மீ.’ மழை பெய்துள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...