Sunday, December 9, 2018

டாக்டர்களுக்கு விடுமுறை இல்லை மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

Added : டிச 09, 2018 06:22


கோவை, ''போராட்டத்தை காரணமாக தெரிவித்து, டாக்டர்கள் விடுமுறை எடுக்கக் கூடாது,'' என, மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின்ஜோ உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், 4ம் தேதி, புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று முதல், தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், டாக்டர்கள் போராட்டம் குறித்த பொதுநல வழக்கு விசாரணையில், வரும், 17ம் தேதி வரை போராட்டங்களை ஒத்தி வைப்பதாக, அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஆயினும், டாக்டர்கள் சங்கம், நிர்வாகத்துக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறுகையில், ''டாக்டர்களின் ஒத்துழையாமை இயக்கத்தால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். போராட்டத்தை காரணமாக தெரிவித்து, டாக்டர்கள் விடுமுறை எடுக்கக் கூடாது,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024