Thursday, December 27, 2018


அண்ணா பல்கலை ஊழியர்கள் விரைவில் கூண்டோடு மாற்றம்

Added : டிச 26, 2018 23:41

சென்னை, வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், தேர்வுத் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்ய, பல்கலைநிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.அண்ணா பல்கலையில் நடந்த முறைகேடுகள், உயர் கல்வி துறைக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், தலைசிறந்த அரசு நிறுவனமாக பெயர் எடுத்த, அண்ணா பல்கலையில், தேர்வு முறைகேடுகளும், விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகளும், அதன் மாணவர்களுக்குவேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை, அதிர்ச்சி அடையவைத்துள்ளன.அண்ணா பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு துறை நடத்திய தேர்வுகளில், மறுமதிப்பீட்டில், அதிக மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் உள்ளது.உயர் பொறுப்பில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியே, இந்த வழக்கில் சிக்கினார். டிச., 3ல் நடந்த, 'செமஸ்டர்' தேர்வில், கணித வினாத்தாள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் இருந்தே, லீக் ஆகியுள்ளது.இந்த முறைகேட்டை, சி.பி., -சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஜி., மாணவர்கள்இருவர் கைது செய்யப்பட்டனர்.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக ஊழியர்,காஞ்சனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இப்படியே விட்டால், அண்ணா பல்கலையின் தரமும், ஆராய்ச்சி மதிப்பும், சர்வதேச அரங்கில், பெரும் சரிவை சந்திக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.எனவே, பல்கலையின் முக்கிய துறைகளில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரத்தை கையில் வைத்துள்ள சில பேராசிரியர்களால், பல்கலைக்கு இனியும் கெட்ட பெயர் ஏற்பட கூடாது என, உயர் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்திஉள்ளனர்.இதையடுத்து, முதற்கட்டமாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் மற்றும் அதன் பிரிவு அலுவலகங்களில், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து, பட்டியல் எடுக்க, பல்கலைநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தற்காலிக பணியாளர், நிரந்தர பணியாளர் ஆகிய, இரண்டு தரப்பினரையும், 'டிரான்ஸ்பர்' செய்ய வேண்டும் என, பேராசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, அண்ணா பல்கலை ஊழியர்கள் விரைவில், கூண்டோடு மாற்றப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024