Sunday, December 30, 2018


லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : ரூ.4.60 லட்சம் பறிமுதல்

Added : டிச 29, 2018 23:14

சென்னை: தமிழகத்தில், வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத, 4.60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆங்கில புத்தாண்டை ஒட்டி, அரசு அலுவலகங்களில், வெகுமதி பெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, நேற்று முன்தினம், வெவ்வேறு இடங்களில், திடீர் சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத, 4.60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதன் விபரம்:● சென்னை, ராயபுரம், சார் - பதிவாளர் அலுவலகத்தில், மாலை, 6:00 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 74 ஆயிரத்து, 330 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● திருவண்ணாமலை மாவட்டம், சார் -பதிவாளர் - 2 அலுவலகத்தில், கணக்கில் காட்டப்படாத, 1.84 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் நீலகண்டன், சட்ட விரோதமாக, பார் நடத்துபவர்களிடம் இருந்து, பணம் வசூல் செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சோதனை நடத்தப்பட்டதில், அவரிடம், 1.18 லட்சம் ரூபாய், அவரது வாகன ஓட்டுனர் சுரேஷ் என்பவரிடம், 8,590 என, மொத்தம், 1.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● கிருஷ்ணகிரி, கட்டிநாயனப்பள்ளி கிராமத்தில், 25 வீட்டுமனை பிரிவிற்கு ஒப்புதல் பெறும் பொருட்டு, தர்மபுரி மண்டல நகர ஊரமைப்பு அலுவலகத்தில், கோவிந்தராஜ் என்பவர் விண்ணப்பித்தார். அதற்கு, தர்மபுரி மண்டல துணை இயக்குனர் வசந்தி, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்; மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவர், 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.அந்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, துணை இயக்குனர் வசந்தி, மேற்பார்வையாளர் மணிகண்டன், இடைத்தரகர்கள் அரிக்குமார் மற்றும் வடிவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில், இடைத்தரகர்களிடம் இருந்து, 75 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024