Thursday, December 27, 2018


விமானத்தில் புகைபிடித்ததாக பயணி மீது வழக்கு

Added : டிச 27, 2018 06:56





பனாஜி : இண்டிகோ விமானத்தின் கழிவறையில், புகைபிடித்ததாக, பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம் அப்பயணி ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25ம் தேதி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து, கோவா மாநிலம் பனாஜி நோக்கி, இண்டிகோ விமானம் சென்றது. விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோது, கழிவறையில் இருந்து புகைப்பிடிக்கும் வாசமும், அதனைத்தொடர்ந்து புகையும் வெளிவந்தது. சக பயணிகள், கொடுத்த புகாரை தொடர்ந்து, விமானம், பனாஜியில் தரையிறங்கியதும், அவர் மீது மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைத்தநிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யபப்பட்டுள்ளது.

விமானத்தின் உட்பகுதியில் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024