Thursday, December 27, 2018


‛சுகர் 'செக்' செய்ய ரூ.50 ஆயிரம் அமைச்சர் புலம்பல்

Added : டிச 26, 2018 23:06


சிவகங்கை :ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிக்க சென்ற தனக்கு சென்னை தனியார் மருத்துவமனை 50 ஆயிரம் ரூபாய் 'பில்' போட்டதாக சிவகங்கையில் நடந்த தேசிய சித்தா தின விழாவில் அமைச்சர் பாஸ்கரன் புலம்பினார்.அவர் பேசியதாவது: 

சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்த நாம், காலப்போக்கில் மறந்துவிட்டோம்.சிலமாதங்களுக்கு முன், சென்னை தனியார் மருந்துவமனையில் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனைக்கு சென்றேன். பரிசோதனைக்குப்பின், 'மருந்துகளை வீட்டுக்கு அனுப்புகிறோம். அதை வாங்கியதும் பணம் செலுத்தினால் போதும்' என்றனர். சொன்னபடியே ஒரு பார்சல் வந்தது; அதை வாங்கியதும், மொத்த, 'பில்' 50 ஆயிரம் ரூபாய் என்றனர்.அமைச்சராக இருக்கும் நான் காசு இல்லை என்று சொன்னால் அசிங்கமாகவிடும் என்பதால், பணத்தை செலுத்தினேன்.பரிசோதனைக்கு எல்லாம் நான் இவ்வளவு செலவழித்தது கிடையாது.

சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கவே ஒரு லட்சம் ரூபாய் வாங்குகின்றனர். அதிலும் ஐ.சி.யு., வார்டில் சேர்ந்துவிட்டால் 5 லட்சம் ரூபாய் கறந்துவிடுகின்றனர்.ஆங்கில மருந்துகளை பயன்படுத்தினால் நிறுத்தவும் முடியாது, செலவும் அதிகம். சித்த மருந்துகளை ஒருமுறை பயன்படுத்தினால் போதும், செலவும் குறைவு. எழை, எளிய மக்களுக்கு சித்த மருத்துவம் தான் சிறந்தது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024